Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆண் உறுப்பின் தேவையை முன்வைத்துச்  சிந்திக்கின்ற ஆணாதிக்கமானது, அதிகாரத்தின் உறுப்பாக மாறி பெண்ணை அடிமைப்படுத்துகின்றது. உடை குறித்த மதவாதம், ஆண் உறுப்பை தூக்கி திரிகின்ற மதவெறி பிடித்த நாய்களின் இழிந்த பண்பாடே ஒழிய, மனிதப் பண்பாடல்ல. மனிதப் பண்பாடு பெண்ணை சதையாகப் பார்ப்பதில்லை. தன் ஆண் உறுப்பால் புணரும் சதையாக யார் பெண்ணைப் பார்க்கின்றனரோ, அவர்கள் தான் பெண்கள் மீதான வன்முறையாளர்கள். பெண்ணிடம் ஒழுக்கத்தைக் கோருகின்ற அனைவரும், பாலியல் வன்முறையாளர்களே. "ஒழுக்கத்திற்காக" இதைத் தான் நீ அணியவேண்டும் என்று கூறுகின்ற போது, உனது பார்வையும் - நடத்தையும் பாலியல் வன்முறை கொண்டதே.

இன-மதவாத சக்திகள் "அபாயா" குறித்து தத்தம் குறுகிய சிந்தனைக்கும் - சுய மன வக்கிரத்துக்கும் ஏற்ப, "அபாயா" அணிவது குறித்தும் - அணியக் கூடாது என்பது குறித்துமான மனிதவிரோத கருத்தையும், வன்முறையையும் கட்டமைத்து மக்களைப் பிளந்து வருகின்றனர்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் "அபாயா" அணிவது தொடர்பான இன-மதவாத சர்ச்சைக்குள், ஆணாதிக்க வக்கிரங்கள் தம் பங்குக்கு பெண்களைத் புணரத் தொடங்கி இருக்கின்றது. சதைகளைக் கண்டாலே கண்ட கண்ட இடத்தில் புணருகின்ற நாய்கள் எல்லாம், மக்களைப் பிரிக்கும் தங்கள் மத வக்கிரம் மூலம் புணரகின்றனர்.

ஆசிஃபாவைக் குதறிய இந்துத்துவ பார்ப்பனியமும் இதைத்தான் காஸ்மீரில் செய்தது. இந்தியாவை ஆளும் இந்துத்துவ – பார்ப்பனிய ஆட்சியாளர்கள், "இந்துத்துவ" குற்றவாளிகளைப் பாதுகாக்க முன்வைத்த எல்லா பாசிசக் கருத்துகளும் - செயல்களும் போல், இஸ்லாமிய அடிப்படைவாதமும் பெண்களை தங்களின் நுகர்வுக்குரிய சதையாகவே பார்க்கின்றது, அணுகுகின்றது. இதைத்தான் இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொண்டு அடிப்படைவாதிகள், குழந்தைகள் உள்ளிட்ட பல ஆயிரம் அரேபியப் பெண்களை குதறினர். இதைத்தான் எல்லா அடிப்படைவாத மதவாதிகளும் தம் பங்குக்கு கோருகின்றனர்.

அண்மையில் கொடூரமான பாலியல் வன்முறை மூலம் கொல்லப்பட்ட வித்தியா "அபாயா"  அல்லாத உடையை அணிந்த போட்டோவில் வெளித்தெரியும் சதையை, பாலியல் வக்கிரத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத ஆணாதிக்கமானது குதற வெளிக்கிட்டு இருக்கின்றது. எப்படிப்பட்ட பாலியல் வன்முறையாளர்களைக் கொண்ட குற்றவாளிகள், மத சமூகத்தில் புரையோடிப் போய் இருப்பதை இவை எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மேல் இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கம் திணிக்கும் சாறியும், அதில் வெளியில் தெரியும் சதையை பாலியல் பொருளாக இஸ்லாமிய அடிப்படைவாதம் முஸ்லிம் மக்களுக்கு காட்டுகின்றது. இதன் மூலம் வெளித் தெரியும் சதை பெண்ணின் "ஒழுக்க கேட்டின்" அடையாளமாகக் காட்டி, முஸ்லிம் பெண்ணுக்கு "அபாயா"யை இஸ்லாமிய அடிப்படைவாதம் திணிக்கின்றது.

 

இதை மறுக்காது ஏற்றுக் கொள்ளும் எந்த முஸ்லிமாகட்டும், இஸ்லாமியனாகட்டும், அவர்கள் பெண்களை பாலியல் சதைப் பிண்டமாகவே கருதுகின்றனர். தங்கள் குடும்ப பெண்களை அப்படித்தான் நடத்துகின்றனர். பெண்கள் குறித்த இந்து - இஸ்லாமிய கலாச்சாரமாக இருப்பது, பெண்கள் குறித்த ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டின் இழிந்த நடத்தைகளே. தங்கள் ஆண் உறுப்பைக் கொண்டு தீர்மானிக்கும் சுய மனவக்கிரங்களை. பெண்கள் மேல் திணிக்கும் ஆணின் ஒழுக்கக்கேடுகளுடன் கூடிய சுய நடத்தைகளே. தனது ஒழுக்கக்கேடான சிந்தனையும் -  நடத்தையையும், பெண்ணின் "ஒழுக்கக் கேடாகக்" காட்டி திணிக்கின்றனர்.

தங்கள் கலாச்சார கட்டுப்பாட்டை மீறும் இந்து - இஸ்லாமிய பெண்களைக் கண்டாலே, புணருகின்ற உணர்வுடனே, தங்கள் ஆண் உறுப்பை தூக்கித் திரிகின்ற வன்முறையாளராக இவர்கள் இருக்கின்றனர். பெண்ணின் உடை தான் தங்கள் பாலியலைத் தூண்டுவதாகவும், வன்முறைக்கு காரணமாக இருப்பதாகவும் கூறிக் கொண்டு, சதைகளை புணர்வதற்கான மனவக்கிரத்துடன் அலையும் ஓநாய்களாகவே, அடிப்பவாத மதவெறியர்கள் அலைகின்றனர்.

இந்த சமூகப் பின்னணியில் கொல்லப்பட்ட வித்தியாவின் படத்தையே பாலியல்ரீதியாக புணர்ந்து குதறும் முஸ்லிம் அடிப்படைவாத ஆணாதிக்க வக்கிரங்கள், முஸ்லிம் சமூகத்தில் ஆதிக்கம் வகிக்க முனைவது, அந்த சமூகத்தின் வெட்கக் கேடு.

இந்த சமூகப் பின்னணியில் "அபாயா" அணியாத முஸ்லிம் பெண்களை ஒழுக்கமற்றவராக கருதுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாதம், பிற உடைகளை அணியும் பெண்களின் சதையை பாலியல் பொருளாக முன்னிறுத்துகின்ற வெட்கக் கேடு, முஸ்லிம் சமூகத்தை அடிமைப்படுத்துகின்றது. இதை முன்வைக்கின்றவர்கள் தான் இஸ்லாமிய மதக் காவலராகவும், பெண்கள் எதைச் செய்ய வேண்டும் என்று கட்டளை இடுபவராகவும் இருக்கின்றனர். பெண்கள் உடைக்கு வெளியில் தெரியும் சதையை ஒழுக்கக்கேடாக காட்டி புணர்கின்றதன் மூலம், முஸ்லிம் பெண்களை மூடிக் கட்டிய "அபாயா"யை அணிய நிர்ப்பந்திகின்றனர். இதை மீறினால் உன்னைப் புணர்வேன் என்கின்றது, இஸ்லாமிய பெயரிலான அடிப்படைவாத அறநெறிக் கோட்பாடு.

பெண்ணின் "நடத்தையையும் - ஒழுக்கத்தையும்" வரையறுக்கும் காட்டுமிராண்டித்தனமான சுய ஆணாதிக்க மத வன்முறை மூலம், முஸ்லிம் பெண்களையே தமக்கு அடிமையாக்குகின்றனர். ஆண் கூறும் உடையை பெண் அணிய வேண்டும் என்ற மத நிர்ப்பந்தம் மூலம், பெண்ணின் பிற விடையங்கள் அனைத்தையும் ஆண் தீர்மானிக்கின்ற உரிமையை பெறுகின்றான். பெண்ணின் உழைப்பைச் சுரண்டுகின்ற மத அதிகாரத்தைப் பெறுகின்றான்.

பெண் உடலை பாலியல் பண்டமாக்கும் நுகர்வாக்கச் சந்தை காட்டுவது போல், மத வெறிபிடித்த ஆணாதிக்க கூட்டமும், பெண் சதையை முன்னிறுத்தி தான் மட்டும் நுகர்வதற்கான ஒரு பாலியல் பண்டமாக பெண்ணைக் காட்டுகின்றது. இந்து அடிப்படைவாதமானது இது போல் பெண்ணுக்கு சாறிகட்ட வேண்டும் என்று கூறுகின்ற பின்னணியும்; இதுதான். வெள்ளாளிய இந்துத்துவம் இந்துப் பெண் காற்சட்டை போடுவதை எதிர்க்கின்ற போது, இஸ்லாமிய அடிப்படைவாத பாலியல் கண்ணோட்டத்தில் தான் குதறுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் வெள்ளாளிய இந்து ஆணாதிக்கவாதிகள் கலாச்சாரத்தின் பெயரில் கோரியது இதைத்தான்.

மத அடிப்படைவாதம் பெண்கள் குறித்து தமக்குள் வேறுபடுவதில்லை.  திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் "சாறியா -  அபாயா" என்ற இரு உடைகளை முன்னிறுத்திய பின்னணி, மத அடிப்படைவாத ஆணாதிக்க வக்கிரத்தைக் கொண்டு இருந்ததுடன், அதை மூடிமறைக்க இனத்தையும் - இனவாதத்தையும் தமக்கு கவசமாக்கிக் கொண்டனர் என்பதே உண்மை.