ஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை அணுகும்போதெல்லாம், இயல்பு மொழியானது சிங்களமாகவே உள்ளது. நீmgங்கள் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தும் போதெல்லாம், சாலைகள் மற்றும் இடங்கள், இப்போது புகழ்பெற்ற கட்டிடங்களின் பெயர்கள்கூட சிங்களத்தில் தான் தரப்படுகிறது. யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள சுண்ணாகம் என்கிற இடத்தை தேடினால் கூகுள் வரைபடம் அந்த இடத்தின் பெயரை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து ஹ_ணுகம (சுண்ணாம்பு ஊர்) என்று தெரிவிக்கிறது - பல மட்டங்களிலும் தவறானது. தமிழ் இடங்களின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை, யாழ்ப்பாணம் யாப்பன எனும் சிங்களப் பெயரைப் பெறுகிறது, அதே சமயம் அங்கிருந்து ஒரு கல்லெறியும் தூரத்தில் உள்ள நல்லூருக்கு மட்டும் தமிழ் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கூட கூகுள் வரைபடங்களில் ஒரு சேரிடத்தை குறித்து, அங்கு செல்வதற்கான ஓட்டுனர் வழிமுறைகளைப் பாருங்கள்;. உதாரணத்திற்கு நான் வசிக்கும் இடத்தில் இருந்து கொழும்பில் ஒரு இடத்தை அடையவேண்டி கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தினால் கிடைக்கும் அறிவுறுத்தல்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் கலந்த ஒரு விசித்திரக் கலவையாக உள்ளது - நான் செல்லவேண்டிய ஒரு பாதை ஆங்கிலத்தில் சொல்லப்படும் அதேவேளை மற்றொரு அறிவுறுத்தல் முற்றிலும் சிங்களத்தில் தரப்படுகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களில் சிங்களத்தில் உள்ள எழுத்துக்களை சரளமாக வாசிக்க முடியாதவர்கள் ஏன் இதில் மொழிமாற்றம் செய்வதற்கான தெரிவு இல்லை என்று சொல்லி தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
கூகுள் பயன்பாடுகள், சேவைகள் மற்றும் தளங்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்குவதில் உள்ள ஒரு முறையான பாகுபாடு என்ன என்பதற்கான தெளிவான காரணங்களையோ அல்லது வடிவங்களையோ காணமுடியவில்லை, இறுதி பயனாளி ஆங்கிலம் அல்லது தமிழில் அதை மாற்றிக்கொள்வதற்கான தெரிவும் அதில் கிடையாது. மற்றும் கூகுளினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லாத சொற்றொடர்களை சரியாக வழங்க முடியாது என்று இல்லை - வெறுமே பாக்கு நீரிணைக்கு அப்பால் உள்ள தமிழ் நாட்டில் அனைத்து இடங்களும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தரப்படுகிறது. இதற்கு வடக்கில் உள்ள பெங்களுருவில் இடங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் உள்ளது. அதற்கும் மேலே ஹைதராபாத்தில் அது ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் உள்ளது, அதற்கு மேலே உள்ள இடங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் உள்ளது.
கூகுளில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த யாரோ அங்குள்ள பிராந்தியங்களில் பேசப்படும் மொழிகளிலும் மற்றும் அதேபோல ஆங்கிலத்திலும் தகவல்களை வழங்குவதற்கான நேரத்தையும் முயற்சியையும் எடுத்துள்ளார். மறுபக்கத்தில் ஸ்ரீலங்காவில் கூகுள் வரைபடத்தின் மொழியாக சிங்களம் மற்றும் ஆங்கிலம் என்பனவே தீவு முழுவதும் இயல்பான மொழியாகப் பயன்படுத்தப் படுகிறது, இதனுடன் ஒப்பிடும்போது வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வெகு சில இடங்களின் பெயர்களே தமிழில் தரப்பட்டுள்ளது.
ஆனால் இது வெறுமே கூகுளில் மட்டும் நடக்கவில்லை. ஒரு மைக்கிரோ சொப்ட் பயனாளியாக எனது கைத் தொலைபேசி ஊடாக அதன் முக்கிய சேவைகளுக்கு வழியைப் பெறுவதற்கான ஒரு குறியீட்டை கேட்கும் போதெல்லாம் - இரு காரணி அங்கீகாரம் என அழைக்கப்படுவது - குறுந்தகவல் வழியாக அனுப்பப்படும் குறியீடு மற்றும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் யாவும் சிங்கள மொழியில் மட்டுமே வழங்கப்படுகிறது, ஆங்கிலத்தில் கூட இல்லை.
இது நிரூபிப்பது என்னவென்றால்? ஸ்ரீலங்காவில் கூகுள் மற்றும் மைக்ரொசொப்ட் என்பன அவர்களது முக்கிய உற்பத்திகள் மற்றும் சேவைகள் என்பனவற்றை வழங்குவதில் ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ் மொழிக்கு எதிராக முறையானதும் நீடித்ததுமான பாகுபாட்டில் ஈடுபட்டுள்ளது. உண்மையில் இது தொடர்பாக எதுவித அழுத்தங்களோ அல்லது பெரிய விழிப்புணர்வோ இல்லாமலிருப்பது, ஸ்ரீலங்காவில் நிலவிவரும் மொழி மற்றும் இனப்பாகுபாடு தொடர்பான இயல்பான தன்மையை அறிவுறுத்துகிறது - இந்தப் பாரபட்சம்; மிக ஆழமாக வேரூன்றி இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லை, பெரும்பான்மையினருக்கு விஷயங்கள் யாவும் நன்றாக இருப்பதால் சிறிய அசௌகரியங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் மன்னிக்கவும் முடிகிறது.
2018ல் அரசாங்கம் சிங்களத்தை மட்டும் ஊக்குவிக்க முயல்வதால் இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலாகியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விஷயம் உள்ளுராட்சித் தேர்தல்களுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) ‘நிதகஸ் யுகயக்’ எனும் புதிய இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த இணையத்தளம் கடந்த வாரம், கட்சியின் உத்தியோகபூர்வ செய்திகளை பிரச்சாரத்துக்கான கரமாகப் பயன்படுத்தும் வகையில் சுதந்திர ஊடக மையம் ஒன்றை திறந்து வைக்கும் விழாவில் ஜனாதிபதி சிறிசேனாவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுதந்திர ஊடகம் மற்றும் பிரச்சாரம் என்பனவற்றுக்கு இடையே உள்ள கலப்பு அடிப்படையில் அரசாங்கத்தின் ஆழம் நிறைந்த சிக்கலான மனோநிலையை வெளிப்படுத்துகிறது. ஆனால் நான் இதிலிருந்து வேறுபடுகிறேன். அந்த புதிய இணையத்தளத்தின் முதல்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, 1951ல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி(ஸ்ரீலசுக) சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் நபர்களால் ஒரு கட்சியாக ஆரம்பிக்கப் பட்டது, அது ஒவ்வொருவரையும் மரியாதையுடனும் மற்றும் இனப்பாகுபாடு இன்றியும் நடத்துகிறது என்று. இந்த புதிய யுபிஎப்ஏ இணையத்தளம் இந்த வருடம் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள உள்ளுராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான பிரச்சார மேடையாகும். அந்த இணையத்தளம் முற்றிலும் சிங்களத்திலேயே உள்ளது. அதில் உள்ள ஒரு ஒற்றை வார்த்தையோ அல்லது பிரிவோ ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடையாது. காணொளிகள் யாவும் சிங்களத்திலேயே உள்ளன. அது தொடர்பான சமூக ஊடகக் கணக்குகள் யாவும் சிங்களத்திலேயே உள்ளன. ஜனாதிபதியின் பேச்சுக்கள் கூட அனைத்தும் சிங்களத்திலேயே உள்ளன.
எங்களிடம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை கையாளும் வகையிலான ஏராளமான போட்டியிடும் வரிசையிலான அமைச்சுகள், முகவர்கள் மற்றும் திணைக்களங்கள் என்பனவற்றைக் கொண்ட ஒரு அரசாங்கம் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. கடந்த வருடம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக தொலைக்காட்சி சேவையை நடாத்தும் வகையில் வடக்கில் ஒரு தொலைக்காட்சி கலையகத்தை நிறுவுவதற்கான அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டது. உள்ளுர் மற்றும் சர்வதேச அரங்குகளில் நல்லிணக்கத்துக்கு ஆதரவாக ஜனாதிபதி திரும்பத் திரும்ப பேசி வருகிறார். ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் சொல்லியதும் வழங்கிய வாக்குறுதிகளும் உண்மையில் அது செய்யும் செயல்களால் மீறப்பட்டு வருவதும் மற்றும் உண்மையாக நடப்பனவும் மிகவும் சீற்றத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் இந்த சீற்றம் எல்லாம் எங்கு போனது? கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட்டில் தமிழ் மொழிக்கும் மற்றும் தமிழ் மக்களுக்கும் எதிராக பாகுபாடு காட்டப்படுகையில் சமூக ஊடகங்கள் பெருமளவில் மௌனம் காக்கின்றன. முழு ஸ்ரீலங்காவுக்குமே பிரதானமான உள்ள தென்பகுதியும் மற்றும் பூகோள மற்றும் கற்பனை ரீதியான திட்டத்தில் உள்ள தென்பகுதி வாக்காளர்களும் கூட சிங்களம் மட்டும் இணையத்தளத்தின் வன்முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. யுத்தத்துக்குப் பின்னான இன மற்றும் மொழி ரீதியான பாகுபாடு செழித்து வளருகிறது, தற்போது அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் ஏன் பெருநிறுவன தளத்தில்கூட, அதிகம் சமத்துவமானதும் வளமானதுமான எதிர்கால வளர்ச்சியின் இயந்திரமாக இருப்பதுபோல அடிக்கடி தெரியப்படுத்திக் கொண்டாடப்படுகிறது.
கொடியூன்றிப் போராடுவதை எங்கே ஆரம்பிப்பது
தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன இன்னும் நன்றாகச் செய்யவேண்டும். பாகுபாட்டுக்க எதிரான தெளிவான பொதுக் கொள்கைகளைக் கொண்ட நிறுவனங்கள் சிங்களம் மட்டும் கொள்கைளை மட்டுமல்லாது வேறு முக்கிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளிலும் இவ்வாறான கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன. இது கண்டிக்கப்பட வேண்டியதுடன் நிறுத்தப்பட்டு சரி செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி சிறிசேனவும் அவரது கட்சியும், 2018ல் கூட அனைவருக்கும் பொருத்தமானதாகக் கருதி சிங்களமொழியில் மட்டும் ஒரு இணையத்தளத்தை ஏன் ஆரம்பித்தார்கள் என்பதற்காக ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.1956ன் கொடூரமான மரபு 2018லும் ஏற்கப்படக்கூடாது. அதற்கு எதிராகப் போராட வேண்டும், இனம் மற்றும் மொழி பற்றிய பாகுபாடு தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் விவாதிக்க கூடிய விதத்தில் கவனம் செலுத்தம் வகையில் சிங்களத்தை எழுதவோ, படிக்கவோ மற்றும் விளங்கிக் கொள்ள முடியாதவர்களின் நிiலை பற்றி தெற்கில் உள்ளவர்களிடம் பச்சாத்தாபம் ஏற்படுத்த வேண்டும். மோசமான காலநிலை எச்சரிக்கைகள் மற்றும் அவசர வெளியேற்ற எச்சரிக்கைகள் என்பனவற்றிலிருந்து அரசாங்க அலுவலகங்களின் முக்கிய அறிவிப்புகள், குடிவரவு மற்றும் குடியகல்வு கவண்டர்களில் உள்ள அலவலர்கள், முதல் அரசாங்க அமைச்சகங்களினால் அனுப்பப்படும் அழைப்பிதழ்கள் வரை, நீதிமன்றம் முதல் காவல்துறையினர் ஒரு வாக்குமூலத்தை பெறுவதற்கு பயன்படுத்தும் மொழி வரையில் சிங்களம் மட்டும் கொள்கையே இன்று நாளாந்த நடைமுறையில் உள்ளது, இது போருக்குப் பிந்திய ஸ்ரீலங்கா எவ்வாறு உரையாட ஆரம்பிக்கவேண்டும் மற்றும் இனவாத மொழிப் பாகுபாடுகளை முற்றிலும் அழித்து ஒதுக்கிவிட வேண்டும் என்பதை அப்பட்டமாக நினைவு படுத்துகிறது.
மோசமான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன பாகுபாட்டை தீர்த்து வைப்பதில் முன்னணியில் திகழவேண்டும், மொழிமாற்றம் மற்றும் மொழிபெயர்ப்பு என்பனவற்றுக்கு பரந்த தொழில்நுட்ப ரீதியிலான றொசாட்டோ ஸ்ரோண்ஸ் போன்ற கட்டளைகளைப் பயன்படுத்தி இந்த மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். ஆனால் இவை அனைத்தக்கும் மேலாக எங்கள் முன்னணி அரசியல்வாதிகள் சொல்லுவதைச் செய்ய வேண்டும். ‘யுபிஎப்ஏ’ யின் சிங்களம் மட்டும் இணையத்தளம் உண்மையில் பழமைவாத, ஆரோக்கியமான, உண்மையான விவசாயியான பௌத்த சிங்கள ஜனாதிபதியை வார்த்தைகளால் கொண்டாடுகிறது, அந்தச் செய்கை முட்டாள்தனமான மதவாத, தனிமையான,பெரும்பான்மை மனப்பாங்கு நமக்கு பெற்றுத்தந்த 30 வயதான யுத்தம் இன்னும் உயிரோடிருக்கின்றது என்பதை பரிந்துரைக்கிறது. அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது, எங்கள் ஜனநாயக சாத்தியங்களின் முக்கியத்துவம் இன மேலாதிக்கத்தில் தங்கியிருக்கவில்லை ஆனால் அது சமத்துவம் மற்றும் பாகுபாடற்ற நிலை என்பனவற்றிலேயே தங்கியுள்ளது.
சஞ்சனா ஹட்டோட்டுவ
நன்றி தேனீ இணையம்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்