Language Selection

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது. 

நவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான்  இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும். மோதலின்போது நேரடியாக தலையிட்டவர்களில் 1997ல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்ப்பில் பிரதேச சபைக்கு போட்டியிட்ட மற்றும் எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்கும் இலங்கை பொதுஜன முன்னணியின் சார்ப்பில் போட்டியிட எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு பௌத்த பிக்குவும், பிரதேச சபையில் தலைவராகும் கனவுடன் போராடிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள மற்றும் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருப்பது இதற்கு சாட்சியாகும்.  கடந்த 16ம் திகதி இரவு நடந்த தீ வைப்பு சம்பவத்துடன் இந்த ஐதேக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதோடு, 17ம் திகதி நடந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்டவர்களை கோபமூட்டியிருப்பது இலங்கை பொதுஜன முன்னணியில் தேர்தல் வேட்பாளராக எதிர்ப்பார்த்திருக்கும் இருவராகும். எவ்வாறாயினும், இந்த வன்முறையை தூண்டியிருப்பது ஒரே ஊரில் வசிக்கும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களல்ல, வெளியிடங்களிலிருந்து வந்த அரசியல் ஆதரவாளர்கள்தான் என்பதை பொலிஸாரும் ஏற்றுக் கொள்கின்றனர். இச்சம்பவத்தில் அரசாங்கம் மோதலை தவிர்க்கும் திசையில் அல்லாது அதனை தூண்டிவிடும் திசைக்கு திருப்பிவிடுவதற்காக குழப்பநிலை அதிகரித்திருந்த சந்தர்ப்பத்தில் பிரதேச பொலிஸை அகற்றிக் கொண்டது. நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் வாய்ச்சவாடல் விட்டாலும் பிணைமுறி மோசடி உட்பட தனது நெருக்கடியை மறைத்து சமூக கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக எந்தவொரு நாசகார நடவடிக்கையையும் எடுக்க பின்வாங்காது என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது.

 

பிரச்சினை, வாகன விபத்தல்ல. பொதுவாக உலகம் முழுவதும் வாகன விபத்துகளால் 1.24மில்லியன் பேர் மரணிப்பதோடு, அது நாளொன்றிற்கு 3400 என்ற வகையில் கூடிய மதிப்பீடாகும். இலங்கையில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு வாகன விபத்து நடப்பதுடன், நாளொன்றிற்கு 6-7 பேர் மரணிக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு 4 மணித்தியாலயங்களுக்கும் ஒருவர் வாகன விபத்தினால் மரணிக்கிறார். சர்வசாதாரணமாக நடக்கும் வாகன விபத்து கூட இனவாதத் தீயை மூட்டக் கூடிய நிலைமை நாட்டில் இருப்பதுதான் பிரச்சினை. பிரச்சினை, தமது அதிகார வேட்கைக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே ஆபத்தில் தள்ளுவதற்கு பின்வாங்காத வலதுசாரிய அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களல்ல. அது அவர்களது அரசியல். அவர்களது பாரம்பரியம். அவர்களது பண்பாடும் தொழிலும் அதுதான். நவ தாரளமயமானது இந்த 21ம் நூற்றாண்டில் நிலைக்கக் கூடிய ஒரே வழியும் அதுதான். பிரச்சினை, இந்த அரசியல் குண்டர்கள் தமக்குத் தேவையாவாறு எந்தவொரு விளையாட்டையும் விளையாடக் கூடிய விதத்தில் சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருப்பதுதான். எந்தவொரு சிறு சம்பவத்தினாலும் தீப்பற்றி பரவக் கூடியளவிற்கு குழப்ப நிலையொன்று சமூகத்தில் நிலவுகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி சகல மக்களும் இந்த நவ தாராளமய முதலாளித்துவ சமூகத்தில் தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் சிக்கி, வாழ்க்கை நெருக்கடிக்குள் பலியாகி, தமது இன கலாச்சாரங்களின் எதிர்கால நிலைத்தல் சம்பந்தமாக அச்சத்தில் உள்ளனர். வலதுசாரிய அரசியலானது தனது நிலைத்தலை நியாயப்படுத்திக் கொள்வதற்கு இந்த குழப்ப நிலையைத்தான் பயன்படுத்துகின்றது.

எவ்வாறாயினும், முப்பது வருட யுத்தத்தில் பலிக்கடாக்களாகி துன்பப்படும் இலங்கை சமூகம் அவ்வாறானதொரு தீ பரவுவதை தடுப்பதற்கு முன்வர வேண்டும். அதேபோன்று இந்த சம்பவத்தால் ஏற்பட்ட காயங்களை ஆறவைத்து பிரதேசத்தில் மீண்டும் சகஜ நிலையை கொண்டுவருவதற்கு சகலரும் தியாகம் செய்ய வேண்டும். அது மாத்திரமல்ல, இவ்வாறான தீ பற்றுவதற்கு ஏதுவான காரணங்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். இங்கே முக்கியமான காரியம்  என்னவென்றால் இனவாதிகளினதும், வலதுசாரிய அரசியல்வாதிகளினதும் கோபமூட்டல்களுக்கு எதிராக மக்கள் பங்கேற்பு அமைப்பொன்றை உருவாக்குவதுதான். ஆகவே சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரினதும்  பங்கேற்புடன் பிரதேசத்தில் சமாதானக் குழுக்களை உருவாக்குமாறும், சமூகம் என்ற வகையில் இந்த தீயை அணைப்பதற்கு முன்வருமாரும் சகல முற்போக்கான மக்களிடமும் வேண்டிக் கொள்கின்றோம். இப்படியான அறுவறுக்கத்தக்க சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு முன்வருமாறும் சம உரிமை இயக்கம் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சகல மக்களிடமும் வேண்டிக் கொள்கின்றது.  

 

ரவீந்திர முதலிகே

அழைப்பாளர்

சம உரிமை இயக்கம்

2017. 11. 19

(தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 071

 

පසුගිය දින කිහිපය තුළ ගාල්ල දිස්ත්‍රික්කයේ ගිංතොට ආශ්‍රිතව ඇතිවී තිබෙන නොසන්සුන්කාරී තත්වය සහ ජාතිවාදී- ආගම්වාදී ගැටුම්කාරීත්වයක් වර්ධනය වීම පිළිබඳව සම අයිතිය ව්‍යාපාරය ලෙස අපි සමාජයේ දැඩි අවධානය අපේක්ෂා කරමු.

වාර්තා වන අන්දමට මේ වනවිට සිංහල සහ මුස්ලිම් ජනතාවගේ නිවාස ගණනාවකට සහ අනෙකුත් දේපල වලට හානි සිදුවී තිබෙන අතර ජීවිතයක්ද අහිමිවී තිබේ.

මෙම ඛේදවාචකය සඳහා ආරම්භක සිදුවීම ලෙස සැලකෙනුයේ නොවැම්බර් මස 13වැනිදා ගාල්ල මහහපුගල ප්‍රදේශයේ සිදුවූ රිය අනතුරකි. එම රිය අනතුරේ එක් පාර්ශවයක් සිංහල වන අතර අනෙක් පාර්ශවය මුස්ලිම් වේ. රිය අනතුර පාදක කර ගනිමින් ඇතිවූ මතභේදය මත දෙපිරිස අතර ගැටුමක් ඇතිවී තිබෙන අතර එය ජාතිවාදී ගැටුමක ස්වභාවය දක්වා වර්ධනය වී ඇත්තේ ඉන් අනතුරුවය. පෞද්ගලික ආරවුලක් මත ඇතිවූ ගැටුම ජාතිවාදී ගැටුමක් දක්වා වර්ධනය කිරීමට ප්‍රාදේශීය දේශපාලඥයන් බරපතල මැදිහත්වීමක් සිදු කර තිබෙන අතර එය ඉදිරියේදී පැමිණීමට නියමිත පළාත් පාලන මැතිවරණයේ බල පොරයට අදාලය. ගැටුමට සෘජුව මැදිහත් වුවන් අතර 1997දී පොදුජන එක්සත් පෙරමුණෙන් ප්‍රාදේශීය සභාවට තරඟ කළ සහ ඉදිරි මැතිවරණයේදී මහින්ද රාජපක්ෂ විසින් නායකත්වය දෙනු ලබන ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණෙන් ඉදිරිපත් වීමට අපේක්ෂාවෙන් සිටින භික්ෂුන් වහන්සේ නමක්ද, ප්‍රාදේශීය සභාවේ සභාපති වීමේ සිහිනය සහිතව බල අරගලයක සිටින එක්සත් ජාතික පක්ෂයේ සිංහල සහ මුස්ලිම් ප්‍රාදේශීය දේශපාලඥයන් දෙදෙනෙකුද වීම ඊට සාක්ෂියකි.

පසුගිය 16වැනිදා රාත්‍රී ඇතිවූ නිවෙස් ගිණි තැබීමේ සිදුවීමට මෙම එජාප දේශපාලඥයන් සම්බන්ධ අතර 17වැනිදා සිදුවූ ප්‍රචණ්ඩ ක්‍රියාවන්ට සම්බන්ධ පිරිස් ප්‍රකෝප කරවා ඇත්තේ ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ මැතිවරණ අපේක්ෂකත්වය අපේක්ෂා කරන දෙදෙනෙකි. කෙසේ වෙතත් මෙම ප්‍රචණ්ඩකාරී සිදුවීම අවුළුවා ඇත්තේ එකම ගමේ වාසය කරන සිංහල සහ මුස්ලිම් ජනතාව නොව පිටස්තර ප්‍රදේශ වලින් පැමිණි දේශපාලන ආධාරකරුවන් බව පොලීසියද පිළිගනී. මෙම සිද්ධියේදී ආණ්ඩුව ගැටුම සංසිඳුවන දිශාවට නොව ගැටුම අවුළුවන දිශාවට මැදිහත් වෙමින් ආතතිය වැඩිම අවස්තාවක ප්‍රදේශයෙන් පොලීසියද ඉවත් කර ගන්නා ලදී. ආණ්ඩුව සංහිඳියාව ගැන වාග්‍පාඨ දෙඩවුවද බැඳුම්කර මගඩිය ඇතුළු සිය අර්බුද වසන් කර සමාජ අවධානය වෙනතක යැවීම වෙනුවෙන් ඕනෑම විනාශකාරී පියවරක් ගැනීමට පසුබට නොවන බව මෙන්ම ඔප්පුවී ඇත.

ප්‍රශ්නය වන්නේ මේ රිය අනතුර නොවේ. සාමාන්‍යයෙන් ලෝකය පුරා වසරකට රිය අනතුරු වලින් මිලියන 1.24ක් මියයන අතර එය දිනකට 3400ක් තරම් ඉහල අගයකි. ලංකාවේ සෑම මිනිත්තු 10කටම වරක් රිය අනතුරක් සිදුවන අතර දිනකට 6-7 දෙනෙකු මියයයි. එනම සෑම පැය 4කටම වරක් පුද්ගලයෙකු රිය අනතුරකින් මියයයි. ප්‍රශ්නය එතරම් සුලභ අත්දැකීමක් වන රිය අනතුරක් පවා ජාතිවාදී ගින්නක් අවුළුවන නිමිත්තක් වියහැකි තත්වයක් රට තුළ පැවතීමය. ප්‍රශ්නය සිය බලය වෙනුවෙන් සමස්ත සමාජයම අවදානමකට හෙලීමට පසුබට නොවන දක්ෂිනාංශික දේශපාලනඥයන්ගේ තක්කඩිකම නොවේ. එය ඔවුන්ගේ දේශපාලනය, ඔවුන්ගේ සම්ප්‍රදාය, ඔවුන්ගේ සදාචාරය සහ ඔවුන්ගේ වෘත්තියයි. ඒ නව ලිබරල් ධනවාදයට මේ 21 වන සියවස තුළ පැවතිය හැකි එකම ආකාරයයි. ප්‍රශ්නය මේ දේශපාලන මැරයන්ට තමන්ට අවශ්‍ය පරිදි ඕනෑම ක්‍රීඩාවක් කළ හැකි අන්දමේ සමාජයක් ගොඩනැගී තිබීමයි. ඕනෑම කුඩා සිදුවීමකින් මහා ගින්නක් ඇවිලී පැතිර යන තරමේ ආතතියක් සමාජය තුළ තිබේ. සිංහල-තමිල්-මුස්ලිම් භේදයකින් තොරව සියලු ජනයා මේ නව ලිබරල් ධනවාදී සමාජ රටාව තුළ විසඳුම් නැති ප්‍රශ්න සමුදායක පැටලී, ජීවන අර්බුදයක ගොදුරු බවට පත්ව, සිය ජාතික සංස්කෘතීන්ගේ අනාගත පැවැත්ම පිලිබඳ භීතියකින් මුසපත් වී සිටී.

දක්ෂිනාංශික දේශපාලනය සිය පැවැත්ම සුජාතකරණය කර ගැනීමට භාවිතා කරන්නේ එම ආතතියයි.

කෙසේ වෙතත් තිස් අවුරුදු ජාතිවාදී යුද්ධයක ගොදුරක් බවට පත්ව පීඩා විඳි ලාංකේය සමාජය වහාම යලි එවැනි ගින්නක් ව්‍යාප්ත වීම නතර කිරීමට මැදිහත් විය යුතුය. එමෙන්ම මෙම සිදුවීම තුළ ඇතිවූ තුවාල සුව කර ප්‍රදේශය යළි සාමාන්‍ය තත්වයට ගෙන ඒම වෙනුවෙන් සියලු දෙනා කැප විය යුතුය. එපමණක් නොව මෙවැනි ගිණි ඇතිවන හේතුමූලයට ප්‍රතිකාර කළ යුතුය. එහිදී වැදගත්ම කාර්ය කොටස වන්නේ ජාතිවාදීන්ගේ සහ දක්ෂිනාංශික දේශපාලනඥයන්ගේ ප්‍රකෝපකාරීත්වයන්ට එරෙහි ප්‍රජා සහභාගී ව්‍යුහයන් නිර්මාණය කිරීමයි. එනිසා සිංහල-තමිල්-මුස්ලිම් සියල්ලන්ගේ සහභාගීත්වයෙන් ප්‍රදේශය තුළ ප්‍රජා සාම කමිටු ගොඩ නගන ලෙසද, සමාජයක් ලෙස මෙම ගින්න නිවීමට මැදිහත් වන ලෙසද සියලු ප්‍රගතිශීලී ජනතාවගෙන් ඉල්ලා සිටිමු. මෙවැනි නින්දා සහගත සිදුවීම් යළි යළිත් ප්‍රතිනිර්මාණය වීම වැලැක්වීම සඳහා මැදිහත්වන ලෙසද සම අයිතිය ව්‍යාපාරය සමාජ වගකීමක් සහිත සියළු ජනයාගෙන් ඉල්ලා සිටී.

රවීන්ද්‍ර මුදලිගේ 

කැඳවුම්කරු 

සම අයිතිය ව්‍යාපාරය 

2017.11.19

(සම්බන්ධීකරණ දුරකථන අංකය - 0717414408)'