மோசமான காலநிலை காரணமாக வெள்ளி முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றமையால் பெரும்பாலான தென்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 122 பேர் இறந்து போயள்ளனர். 99 பேரை காணவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையான இழப்பு அதிகமாக இருக்கும் என தெரியவருகின்றது.
மோசமான வானிலை காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இந்த பேரழிவு நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
புயல் காற்றுடன் கூடிய பெரு மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தொடரும் பேரழிவினால் இது வரை 493இ455 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.