சைட்டம் திருட்டு பட்டக்கடையை ரத்து செய்யுமாறும், கல்வியை தனியார்மயப்படுதலை நிறுத்துமாறும், பல்கலைக்கழக அனுமதியை அதிகரிக்குமாறும் வற்புறுத்தும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடைபயண பேரணி மீது மிலேச்ச காட்டுமிராண்டித்தன தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
சைட்டம் திருட்டு பட்டக்கடையை தடை செய்ய வற்புறுத்தி வருடக்கணக்கில் மாணவர் இயக்கங்கள், உழைக்கும் மக்கள் உட்பட பொதுமக்கள் அரசை வற்புறுத்தி வந்தாலும் முன்பிருந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் மக்களின் கருத்தை உதாசீனப்படுத்தி செயற்பட்டுவருகிறது.
அதுமட்டுமல்ல தமது கோரிக்கைகளை முன்வைக்கும் சக்திகளை போலீசை கொண்டு மூர்க்கத்தனமாக தாக்கி மட்டுப்படுத்த முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
கல்வியை தனியார் மயப்படுத்தலினால் உள்ளூர், வெளிநாட்டு வியாபாரிகள் ஒரு சிலரின் வங்கி கணக்கு அதிகரிக்கிறதே தவிர இலங்கை பிள்ளைகளின் கல்விக்கு எவ்வித நன்மையையும் கிடைக்கப்போவதில்லை என்பது தெளிவு.
சனத்தொகையில் பாதிக்குமேல் ஒரு நாள் வருமானம் 500 ரூபா என்று அரசாங்கமே கூறும் போது, கல்வியை தனியார் மயப்படுத்தினால் பெரும்பாலான மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். அதனால் எதிர்கால சந்ததியினரை இருளில் தள்ளிவிட்டு, ஒரு சில வியாபாரிகளின் இலாபத்தை நோக்காக கொண்டு கல்வியை தனியார்மயபடுத்தல் வேலை திட்டத்திற்கு எதிராக சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டுமென நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். பல்கலைக்கழக அனுமதியை அதிகரிக்கவும், உயர் கல்வி வாய்ப்புகளை விரிவு படுத்தவும் நாங்கள் அரசாங்கத்தை வற்புறுத்துகிறோம்.
அரசியல் சபை
முன்னிலை சோஷலிஸக் கட்சி
2017.5.17