இன்று மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம், முன்னிலை சோசலிக கட்சியால் கொழும்பு புறக்கோட்டையில் மாபெரும் எழுச்சிக் கூட்டமாக நிகழ்த்தப்பட்டது. மேலும் இத்தாலி, பரிஸ் மற்றும் லண்டன் நகரங்களில் சமவுரிமை இயக்கமும் முன்னிலை சோசலிச கட்சியும் இணைந்து மேதின ஊர்வலங்களில் கலந்து கொண்டன. "ஏகாதிபத்திய நவதாராளமய திட்டத்திற்கு எதிராக உழைக்கும் மக்களே எழுவீர்!" என்ற கோசத்தை பிரதான முழக்கமாக இந்த வருட சர்வதேச தொழிலாளர் தினத்தில் முன்வைத்து முன்னிலை சோசலிச கட்சி இந்த எழுச்சி கூட்டங்களை நடத்தியதுடன், இதே கோசத்துடன் சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற ஊர்வலங்களிலும் கலந்து கொண்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை கண்டி மற்றும் காலியில் இருந்து கொழும்பு நோக்கி வாகன எழுச்சி பேரணி மற்றும் தெருமுனை கூட்டங்களையும் முன்னிலை சோசலிச கட்சியில் தோழர்கள் மேற்கொண்டிருந்தனர். இன்றைய மேதின கூட்டத்தில் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் உட்பட துமிந்த நாகமுவ, சமீர கொஸ்வத்த, நிலான்கனி அபயரத்தன, தர்மலிங்கம் கிருபாகரன், சுஜித்த குருவிட்ட, சஞ்சீவ பண்டார எனப்பலர் உரையாற்றியிருந்தார்கள். இறுதி நிகழ்வாக விடுதலை எழுச்சி கீதங்கள் இசைக்கப்பட்டன.