Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து RSSன் கருத்தியல் வழிகாட்டின் அடிப்படையில் இந்துத்துவ சக்திகளின் செயல்முறைத் திட்ட வகுப்புவாதமாக தனிப்படுத்தி காட்டும்படி மாறியுள்ளது. தோழர் பன்சாரே அல்லது பேராசிரியர்க ல்பர்கி ஆகிய பகுத்தறிவாளர்களை கொல்வதின் மூலமாகவும், தற்புனைவு பசுப்பாதுகாவலர்கள் மக்கள் முன்னிலையில் தலித்துகளை அடிப்பது, இஸ்லாமியர்களை கொலை தண்டனை விதித்துக் கொல்வது போன்றவற்றின் மூலமாகவும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இலக்காக்கி வகுப்புவாத வெறியைத் தூண்டிவிடுவதற்காக பெரும்பான்மை வகுப்புவாதம் ஒன்றிணைந்த திட்டமிட்ட முயற்சிகளை தொடர்ந்து வருகின்றது. போதிய சான்றில்லாமல் கற்பனையான எதிரிக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்தும் இயல்புக்கு மாறான இந்த வெறுப்புப்பாங்கு 1930களின் ஐரோப்பாவின் பண்பிற்கு ஒத்ததாக உள்ளது.

இந்துத்துவா சக்திகளின் நிகடிநச்சி நிரல் அரசியல் சார்ந்தது, அவர்களின் இலக்கு எதேச்சாதிகார அரசை நிறுவுவது என்ற உண்மை பல்வேறு ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கு அவர்களின் எதிர்வினையில் இருந்து தெளிவாகிறது. தொழிலாளர்களின் ஒன்றுகூடுவது மற்றும் சங்கம் அமைக்கும் உரிமைகள், கருத்துரிமைகள் போன்ற அனைத்தும் சத்தமில்லாமல் பறிக்கப்பட்டுவிட்டன. அரசியல் அமைப்புச்சட்டத்தின் 19ம் பிரிவில் உள்ள அடிப்படை உரிமைகளை தாக்குவதான சட்டவிரோத நடவடிக்கை (தடுப்பு) சட்டம் (UAPA), காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் குடிமக்கள்மீது மிக மோசமான மனித உரிமை மீறலை நடத்த இராணுவத்தை அனுமதிக்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA) போன்ற கொடூரமான சட்டங்கள், அமைதியான அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்கி தண்டிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

சாதாரண மக்கள் தேசப்பற்றை வெளிப்படையாக காட்சிப்படுத்தவேண்டும் என்று காரணமின்றி வற்புறுத்துகின்ற வேளையில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவளிக்கும் அரசின் நடவடிக்கைகளும், 2015ம் ஆண்டு அன்னிய நேரடி முதலீட்டை உள்வாங்கியதில், உலக படிநிலையில் இந்தியாவின் நிலை உச்சநிலைக்கு உயர்ந்ததும் சர்வதேச மூலதனத்தின் முன்பு அடிபணியும் அரசின் ஒட்டுமொத்த அடிவருடிப்பண்பை நிரூபிக்கின்றது. புதிய தாராளவாத சீர்திருத்தங்களின் கீடிந மேன்மேலும் மக்கள் ஏடிநமையடைந்து வருவதையும், திறன்மிக்க செயல்பாடு என்ற பெயரில் அரசு பொதுமக்களுக்கான நலத்திட்டங்களான இலவசக் கல்வி, இலவச மருத்துவம், உத்தரவாதமுள்ள வேலைவாடீநுப்பு காப்புறுதி ஆகியவற்றிலிருந்து விலகிக்கொள்வதை நாம் காண்கிறோம். மக்களுக்கான இந்த அடிப்படை சேவைகள் அனைத்தையும் பண்டமாக்குவதன்மூலம் தனியார் முகவர்கள் வளம் கொழிக்க வழிவகுத்துள்ளது. துரதிஷ்டவசமாக மக்களுக்கு எதிரான பாசிச சக்திகள் தமது பொடீநுமையான தேசியவாதத்தை வணிகம் செடீநுவதுடன் ஊடகங்களில் ஒரு பிரிவினரின் பக்கத்துணையுடனும் வெறும் நுகர்வுத்தன்மையுள்ள மேல்தட்டு, மேல்நோக்கி நகரும் நடுத்தர வர்க்கத்தினரின் அக்கறையற்ற, தற்குறியான மனப்பான்மை ஆகியவற்றினாலும் பாசிச சக்திகள் மக்களை ஜாதி, மத கலாச்சார அடிப்படையில் பிளவுபடுத்தி எதிர் எதிர் அணியாக திரளச்செடீநுயும் தமது பிரித்தாளும் நிகடிநச்சிநிரலை கொண்டு செல்ல முடிகிறது.

அரசு எதேச்சதிகாரம் மிக்கதாகவும், அரசு ஆதரவுடனான வகுப்புவாதம் வளர்ந்துகொண்டு வரும் சக்தியாகவும் ஆகிவரும்போது இந்த சோதனை மிக்க காலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீடிந உத்தரவாதப்படுத்தப்பட்ட ஜனநாயக மதிப்பீட்டை உயர்த்திப் பிடிக்கவும், ஜனநாயக மதிப்பீடுகளை உயர்மட்ட வடிவில் நிறுவுவதற்குமான அத்தியாவசிய தேவையை கருதி அறிவாளிகளும், முற்போக்காளர்களும் தன்னலமின்றி ஒன்றிணைய வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பின்னணியில்தான் சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு - தமிடிநநாடு, இந்த அறைக்கூட்டத்தை நடத்துகிறது. அதிகரித்து வரும் சனநாயக உரிமை மீறல்களுக்கு எதிராக சனநாயக உரிமை இயக்கத்தை வலுப்படுத்த அனைத்து சனநாயகப்பூர்வமான மக்களும் இதில் பங்கேற்குமாறு நாங்கள் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை - விஞ்ஞானி முனைவர் நந்தி ஜோசப், தலைவர், CPDR-TN

அறிமுக உரை - சு.கோபால், பொதுச்செயலாளர், CPDR-TN

கருத்துரை - பேரா. முனைவர் ஆனந்த் டெல்டும்ப்டே,CPDR-மகாராஷ்ட்ரா

பேரா. முனைவர் இராம் புன்யானி, எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்

தோழர் பொன்.சந்திரன், சமூக செயல்பாட்டாளர், தமிழ்நாடு

பேரா. கருணாநந்தன், துணைத் தலைவர், CPDR-TN

நெறியாளுகை - பேரா.முனைவர் இலட்சுமணன், துணைத் தலைவர், CPDR-TN

இடம் : சீனுவாச சாஸ்திரி அரங்கம்,

(இரானடே நூலகம், சௌத் இந்தியன் நேஷ்னல் அசோசியேஷன்)

40, லஸ் சர்ச் ரோடு, மைலாப்பூர், சென்னை-4.

நாள் : 29.04.2017 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 8.30 மணிவரை

 

சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு - தமிழ்நாடு

தொடர்பு எண். : 9445162365, 9487431174