அரசு தனது பொருளாதார கொள்கைக்காக மலையக பெண்களை மட்டுமன்றி நாட்டில் அனைத்து பிரதேச பெண்களையும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பில் ஈடுப்படுத்த அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி மஜ்கெலியா நகரில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (2/4/2017) ஈடுபட்டிருந்தனர்.
அண்மையில் மஸ்கெலியா பிரதேசத்தில் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்று பிணமாக கொண்டு வரப்பட்ட மொட்டிங்கஹம் தோட்டம், பிரவுன்ஸ்விக் என்ற முகவரியில் வசித்த கந்தையா தர்ஷனி குடும்பத்தாரையும், மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரிந்து பாதிக்கபட்ட மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த பெண்களுடைய குடும்பங்களையும் இணைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வெளிநாட்டில் அடிமை தொழில் செய்வதற்கு பதிலாக பாதுகாப்பான தொழிலை உறுதி செய், மலிவான பணியாளர்களாக பெண்கள் வெளிநாட்டுக்கு விற்கப்படுவதை நிறுத்து, வெளிநாட்டில் அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கு, வெளிநாட்டிலுள்ள பணிப்பெண்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்´ போன்ற பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மத்திய கிழக்கு ... அடிமை உழைப்பு...
பாலைவன ... அடிமை உழைப்பு......
உயிரை கொல்லும் ... அடிமை உழைப்பு....
தடுத்து நிறுத்து ...! அடிமை உழைப்பை.
மத்திய கிழக்கில் .. துன்பப்படுவது...
எமது தாய் ... எமது சகோதரிகள்...
குரல் கொடுக்க .... யாரும் இல்லை ...
முன்வரவும்... யாரும் இல்லை .....
ஆணி அடித்து... மண்டை உடைத்து ....
சம்பளம் இன்றி..... சிறையில் அடைத்து....
வாழ்வுதனை ... அர்ப்பணிப்பு செய்யும் ..
நாம் மறக்கப்பட்டோம்... மறக்கப்பட்டோம்....
தர்ஷனிகள் .... றிஷானாக்கள்....
மரணத்துக்குள்... சிறைப்பட்டு....
வாழ்வுதனை.... இழப்பு செய்து....
உழைக்கும் பணம் தன்னில். .. சுகபோகம் அனுபவிப்பது
ஆட்சியாளர்களே... ஆட்சியாளர்களே ....
ஆட்சியாளர்கள்.... நித்திரையில்........
அமைச்சர் அம்மாவுக்கோ.... ஒன்றும் தெரியாது....
நாம் உழைக்கும் பணம் தன்னில் ..
நாட்டை தின்று..... ஏப்பம் விடுகிறார்கள்
மரணத்தை அல்ல ... வாழ்க்கையை...
கேட்பது ...... எந்நாளுமே......
வெளிநாட்டில் ........ துன்பப்படும்...
நாம் எப்போது..... மீட்சிபெறுவது.......
இன்று .... கொல்லப்படுகிறோம்...
நாளையும்.......... கொல்லப்படுவோம்
என்று இது ...... நிறுத்தப்படும்...
எமது வாழ்க்கையை ... அடகு வைக்கும்...
அவர்கள் சுகத்தில்... திளைக்கிறார்கள்...
ஏஜென்சி.... உரிமையாளரை.....
பாதுகாக்கிறார்கள்.... ஆட்சியாளர்கள்......
துன்பப்பட்டு..... பணத்தை தேடும் ....
உழைப்பாளிகளை....... தெரியாது அவர்களுக்கு.....
மத்திய கிழக்கு... அடிமை உழைப்பு....
பிராந்தியத்தின் ...... அடிமை உழைப்பு....
தோட்டப்புற ..... அடிமை உழைப்பு...
நிறுத்திவிடு..... அடிமை உழைப்பை...
அவர்கள் மட்டுமே ..... அனுபவிக்க....
நாம் எப்போது... மகிழ்வுறுவது....
வாழ்வில் ... எந்நாளும்...
மிதிப்படுவது ... நாம் மட்டுமா.....
போராடுவோம் ......போராடுவோம்...
எதிர்த்து நிற்போம்..... எதிர்த்து நிற்போம்...
மத்திய கிழக்கு ..... அடிமை உழைப்பை
தடுத்து.... நிறுத்தும்வரை....
போராடுவோம்... போராடுவோம்.....