இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவை ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவும், மாலபேயில் அமைந்துள்ள சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை உடனடியாக இழுத்து மூடக்கோரியும் மக்கள் - மாணவர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கொழும்பு வீதிகளில் இன்று நடாத்தினர். விஜயராம, களனி, வத்தளை, தெகிவளை ஆகிய நான்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் - மாணவர்கள் இணைந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கொழும்பு நகரத்தின் மையப்பகுதியான கோட்டையினை நோக்கி புறப்பட்டன.
கோசங்களை விண்ணதிர முழங்கியவாறு புறப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுடன் பெருமளவிலான பொது மக்கள் இணைந்து கொண்டனர்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையததினை இந்த ஊர்வலங்கள் வந்தடைந்து, அங்கு கண்டன கூட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் ஏறத்தாள ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.