மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ்பாணத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பட்டதாரிகளிற்கு வேலை வழங்க தேசிய கொள்கை ஒன்றை வகுக்கும் படியும் கேட்டு போராடும் பட்டதரிகளிற்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இன்று 07-03-2017 மட்டக்களப்பு பல்கலைக்கழக நுழைவாயிலின் அருகே கூடிய பட்டதாரி மாணவர்கள், வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்துள்ளமை அரசிற்கு நெருக்கடியினை ஏற்படுத்தி உள்ளது.