யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவன ஈர்ப்பு ஒன்று கூடல் இடம்பெற்றது. இதில் இடதுசாரிகள் மற்றும் மனித உரிமைகள் ஆதரவாளர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு; கேப்பாபுலவு மற்றும் ஏனைய பிரதேசங்களில் பலவந்தமாக ராணுவத்திற்காகவும், பல்தேசிய நிறுவனங்களிற்காகவும் பறித்து எடுக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்லங்கள் உட்பட அனைத்து காணிகளையும் மீள கையளிக்குமாறு வற்புறுத்தி பதாகைகளை ஏந்தி கோசங்களை முழங்கினர்.