மாலபேயில் அமைந்துள்ள சையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடை செய்யக் கோரியும் இலவச கல்வியை உறுதி செய்யவும் பல்கலைக்கழக மாணவர்கள் நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக உக்கிரமான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டங்களிற்கு தலைமை தாங்கிய 12 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து விசாரணைகள் இன்றி தடுத்து வைக்க நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி அளித்துனள்ளதனை கண்டித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ பீட மாணவர் நடவடிக்கை குழுவும் இணைந்து இன்றைய ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட பேரணியானது நீதி மன்ற உத்தரவை மீறி நிகழ்வதாக தெரிவித்து பொலிசார் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் முதல் நீர்த் தாங்கி பீச்சி அடித்து கொழும்பு வோட்டஸ் ரவுண்ட போட்டில் வைத்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.