Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய "தனியார்" என்ற சொல் மட்டுமே பொதுவாக உள்ள ஒரே காரணத்துக்காக தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும், தனியார் மருத்துவ மனைகளுக்கும் முடிச்சு போடும் ஜீனியஸ்களே!

31.03.2008 அன்று Board of Investment of Sri Lanka இனால் Dr.Neville Fernando Investment Company (pvt) Ltd க்கு SAITM (Managemet) எனும் உயர் கல்வி நிலையத்தை ஆரம்பிக்கவே அனுமதி அளிக்கப்பட்டதேயன்றி SAITM (Medicine) க்கல்ல. இங்கு Health Science கற்பிக்க அனுமதி கோரப்பட அதுவும் Ministry of Health இன் முன் அனுமதியுடனேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையுடனான அனுமதி அளிக்கப்பட்ட போதும் எதுவித முன் அனுமதியும் பெறப்படாது BOI இன் ஒப்ந்தத்தை மீறி SAITM இனால் ஒரு Medical School ஆரம்பிக்கப்பட்டதே இப்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாகும்.

2010 இல் Government Medical Officers' Assiciation இனால் Dr.Anuruddha Padeniya தலைமையில் SAITM இனை ஆராய்ந்து வெளியிடப்பட்டு 2012 இல் அன்றைய சுகாதார அமைச்சர் Hon.Mithreepala Sirisena இனால் விரிவாக்கப்பட்டதுமான அறிக்கையில் "the PMC in Malabe is maintaining poor quality, and that there will be a negative impact on the National Health Care delivery system in the future" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் ஸ்தாபித்ததில் ஏற்பட்ட முறைகேடுகளாலும், Lack of Quality இனாலும் 2011 இல் GMOA ஆனது SAITM இனை Private Medical College ஆக அங்கீகரிக்க முடியாது என அறிவித்தது.

04.10.2010 அன்று நோக்கப்பட்ட SAITM இன் வலைத்தளத்தின் படி முதல் 4 வருட கற்கை அங்கும், இறுதி வருட Clinical Training ஆனது Nizhny Novgorod State Medical University, Russia இலும் வழங்கப்படுமென கூறப்பட்டது. "Twining Program" எனப்டும் இம்முறை Medical Ordinance இன் படி உலகளாவிய ரீதியில் நிராகரிக்கப்பட்டது.

இது குறித்து இலங்கையின் standard of medical education and medical practice க்கு பொறுப்பான Sri Lankan Medical Council ஆனது SAITM இன் அதிகாரிகளுக்கு கடிதம் மூலமும் மக்களுக்கு பத்திரிகை மூலமும் மும்மொழிகளில் திரும்ப திரும்ப அறிவித்ததை அறிவீர்களா??

SAITM இன் Mother University என தெரிவிக்கப்பட்ட Nizhny Novgorod State Medical University, Russia இன் Act 16 success rate வெறும் 35% மட்டுமே ஆகும். அத்தோடு SAITM ஆனது Nizhny Novgorod State Medical University இனது கிளை என Russia இன் Medical Council ஆல் உறுதிப்படுத்தப்பட்ட எந்த ஆவணமும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

3 வருட படிப்பையும் ஒருவனின் திறமையையும் 3 மணித்தியால பரீட்சையால் நிர்ணயிக்க முடியாது எனவும், ஓரிரு புள்ளிகளால் மருத்துவத்தை தவற விட்டவன் SAITM இல் படிக்க கூடாதா எனவும் அறிக்கை விடும் அன்பர்களே, SAITM இல் மருத்துவம் பயில யாரும் A/L இல் Biology படித்திருக்க தேவையில்லை என்பதையும், ஏன் A/L exam கூட எடுத்திருக்க தேவையில்லை என்பதையும், அங்கு செலுத்தும் 6.5 மில்லியன் மட்டுமே போதும் என்பதை அறிவீர்களா??

மருத்துவ விரிவுரையாளராக வருவதற்கு ஆகக்குறைந்தது அவர் Act 16 examination இல் சித்தியடைந்திருக்க வேண்டும். SAITM இன் விரிவுரையாளர்களில் பெரும்பான்மையானோர் foreign graduates with basic degree என்பதையும், அவர்களில் Director உட்பட அனேகர் மேற்கூறிய பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதையும் காண்க.

Clinical Practice என்பது மருத்துவ கல்விக்கு இன்றியமையாதது. எனினும் 2009 இல் SAITM இனால் உள்வாங்கப்பட்ட முதலாவது தொகுதி மாணவர்கள் அவர்களுக்கென்று ஒரு Teaching Hospital இல்லாத நிலையிலேயே உள்வாங்கப்பட்டார்கள் என்பதையும், அவர்கள் இன்று பட்டமளிப்பு முடிந்து ஏனைய மருத்துவர்களுள் ஒருவராக மக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதையாவது அறிவீர்களா??

வளரும் நாடாய் இருந்த போதும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையான Health Care System இனை கொண்டுள்ள எம் நாட்டின் மருத்துவ கல்வியானது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதும் இதுவரை எதுவித கேள்விக்கும் உட்படுத்தப்படாததுமாகும். எனவே SAITM போன்ற தரமற்ற PMC களால் சர்வதேச ரீதியாலான எமது மதிப்பு இழக்கப்பட ஒருபோதும் இடமளிக்க முடியாது.

எல்லாம் போன பின்பும் உங்கள் பாரம்பரியத்தை ஹா ஏறுதழுவுதலில் காட்டிக்கொள்ள, நம் இக்கட்டான நேரத்தில் எட்டிக்கூட பார்க்காத இடத்தில் நடக்கும் #WeDoJallikattu க்கு ஈழ மண் நல்லூரிலிருந்து ஆதரவளிக்கும் நீங்கள், எத்தனையோ வகையான போராட்டங்களை முன்னெடுத்தும் சரிவராது இன்று ஆறாவது நாளாகவும் கொக்குவிலில் யாழ் மருத்துவ பீடத்துக்கு முன்னால் அடையாள வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடும் யாழ் மருத்துவ மாணவர்களை ஏறெடுத்தும் பார்க்காது, நம் நாட்டு சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் நடைபெறும் வேளையில் நீங்கள் தமிழ்நாட்டின் கூரையில் எத்தனை ஓடு உள்ளது என்று எண்ணுவது மிகவும் வேதனைக்குரியதே!

ஆக பல்கலைக்கழகத்தை பகிஷ்கரித்து உங்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள் என சாடுபவர்கள் மிகத்தெளிவாக ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், இது அடிப்படையில் மருத்துவ மாணவர்களின் பிரச்சனையே அல்ல!! இது நாட்டினதும் மக்களினதும் சுகாதாரம் மற்றும் உயிர் சம்மந்தப்பட்டதாகும். இதை உணர்ந்தால் ஆங்காங்கே மருத்துவ மாணவர்கள் SAITM க்கெதிராக முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு பாராமுகத்துடன் செல்லாமல் உங்களாலான ஒத்துழைப்பை வழங்குங்கள் DOT

(gmoa.lk வலைத்தளத்தின் "Issues related to PMC Malabe" எனும் கட்டுரையின் தழுவல்......முடிந்தால் மேலதிக தகவல்களுக்காக வாசித்து பார்க்கவும்.

AbolishSAITM

- பா. தனுசன் {நன்றி} B. Thanushan