எதிர்வரும் ஞாயிறு 15-01-2017 அன்று மாலை 2 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின் கிளை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.
பல்வேறு பண்பாடு சார்ந்த உணவு வகைகளுடன் கூடிய கலை நிகழ்வுகளும் கொண்ட இந்த பொங்கல் விழா மாலை 7 மணி வரை இடம்பெறவுள்ளது.