Language Selection

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கியூபா புரட்சியில் தீர்மானம் மிக்க பாத்திரத்தை பூர்த்தி செய்த தலைவரான தோழர் பிடெல் கஸ்ட்ரோ தனது பத்து தசாப்தகால வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு எம்மை விட்டும் பிரிந்து சென்றுவிட்டார். தோழர் பிடெலின் வாழ்க்கையும், அவரது வாழ்க்கை முறையும் அவரது அரசியல் நடவடிக்கைகளும் எமக்கும், எமது சந்ததியினருக்கும் கற்க வேண்டிய பல பாடங்களை விட்டுச் சென்றுள்ளது.

தோழர் பிடெல் கஸ்ட்ரோவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த சமூக கட்டமைப்போடு சம்பந்தப்படுத்தியே வரலாறு தீர்ப்பளிக்கும். அவர் தனது ஆரம்பகால வாழ்க்கையில் பெடிஸ்டாவின் சர்வாதிகாரத்தை துணிச்சலுடன் எதிர்த்தார். பிற்காலத்தில் அது ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டமாக ஆகியது. மனித வாழ்வையும், மனித உறவுகளையும், மனித நேயத்தையும், இயற்கை சூழலையும் அழித்து நாசமாக்கிக் கொண்டிருந்த ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக அவர் போராடினார். அவரது அரசியல் உடன்பாட்டு அரசியலாக இருக்கவில்லை. தனது மனச்சாட்சியின்படி குற்றமெனவும் தீமையெனவும் கண்டவற்றை தோற்கடிப்பதற்காக தனது வாழ்நாளை தியாகம் செய்தார். சிறைத்தண்டனை, சித்திரவதை மற்றும் மரணத்தின் எதிரில் கிஞ்சித்தாவது தளரவில்லை.

அதேபோன்று தோழர் பிடெல் கஸ்ட்ரோவினது வாழ்க்கை, அவரது நோக்கத்தை கைவிடாத துணிச்சலின் எடுத்துக் காட்டுகள் சமூகமயப்படுத்தப்பட்ட வாழ்க்கையாக இருந்தது. சோவியத் முகாம் விழ்ச்சியடைந்து ஏகாதிபத்தியம் தனது ஆணையை உலகம் பூராவும் விஸ்தரிக்கும்போது, இக்கட்டான நிலையிலும் தளராது நின்றமையும், இன்னல்களுக்கு மத்தியிலும் நோக்கத்தை கைவிடாமல் தீமையின் எதிரில் மண்டியிடாமையும் அவரது வாழ்க்கை பயனீடாக இருந்தது. கியூபாவின் அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்களை கொண்டிருப்பவர்கள் கூட கடந்த 25 வருட காலத்தில் ஏகாதிபத்தியத்தின் உலக பலவானாகிய அமெரிக்காவை அண்மித்து அமைந்துள்ள இந்த சிறிய தீவு தளராது வீழ்ந்திடாது இருப்பதைக் கொண்டு காட்டிய தைரியம் எம்மை பெருமைப்பட வைக்கின்றது. அங்கே தோழர் பிடெல் கஸ்ட்ரோவின் கடமை மிகப் பெரியது என்பதில் விவாதமில்லை.

தோழர் பிடெல் கஸ்ட்ரோ தனது வாழ்க்கையின் மூலம் தனியுரிமையின் குறுகிய சுவர்களுக்குள் முடங்கிவிடாமல் சமூக நோக்கங்களுக்காக தியாகம் செய்ய வேண்டிய பயணத்தில் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தை எமக்கு கற்பித்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஏகாதிபத்தியமானது சுற்றுச் சூழல் அழிப்பதிலும், நாகரிகத்தை அழிப்பதிலும் ஈடுபட்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது வாழ்வின் எடுத்துக்காட்டல்களை ஈர்த்துக் கொள்வதோடு மட்டுமல்ல அதனையும் கடந்த செயற்பாட்டின் ஊடாகத்தான் இந்த அழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தோழர் பிடெல் கஸட்ரோவின் அரசியல் வாழ்வில் ஏற்க முடியாக பக்கங்களை அறிந்து அவற்றை தோற்கடிப்பதிலும், ஏற்கக் கூடிய பக்கங்களை வளர்ப்பதிலும் பொதுவாக அவரது அரசியலையும் கடந்து செல்ல வேண்டிய சவால் இன்றைய பரம்பரையின் முன்னால் உள்ளது.

இந்த நிலையில் அவரது இழப்பு மிகப் பெரியது. இச்சந்தர்ப்பத்தில் தோழர் பிடெல் கஸ்ட்ரோவின் இழப்பால் சோகத்தில் ஆழ்ந்திருக்கம் கியூபா மக்களோடு இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களும் இணைந்து கொள்வதோடு, சகல கஷ்டங்களுக்கும் முன்னால் ஒன்றுசேர்ந்து போராடுவதே மாற்றீடு என்பதையும் வலியுறுத்துகிறோம்.

அரசியல் சபை

முன்னிலை சோஷலிஸக் கட்சி

2016 - 11 - 27