தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா மாத ஊதியம், காணி மற்றும் ஒரு வீட்டு உரிமைகளை வலியுறுத்தி, இன்று 14-08-2016 நுவரெலியா மாவட்டத்தில் மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முழு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த பிரச்சார நடவடிக்கை ஒன்றுபட்டுள்ள தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையின மேற்கொண்டன. ஐக்கிய தோட்ட தொழிலாளர் யுனியன், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், கிறிஸ்த்தவ தொழிலாளர் சகோரத்துவம், ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட தொழிலாளர் சேவை நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, மலையக ஆய்வகம், தோட்ட சமூகத்தின் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், நவயுக சமூக அபிவிருத்தி மன்றம், பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம், ஆட்ஸ் சமூக அமைப்பு ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டன.
தலவாக்கலையில் ஆரம்பித்து ஹட்டன், கொட்டகல, பொகவந்தலாவை பிரதேசங்களில் இந்த பிரச்சார நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.