நேற்றைய தினம் (27/7/16) கொழும்பில் மருத்துவ கல்லூரிக்கு எதிராகவும், இலவசக் கல்வியை அழிப்பதற்கு எதிராகவும் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தினை நடாத்தியிருந்தனர்.
இந்நிகழ்விற்கு ஆதரவாக நேற்றைய தினம் மட்டக்களப்பு கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் மருத்துவம், சுகாதாரம் மற்றும் சுகாதார கவன சேவைகள் பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை நடாத்தி இருக்கின்றார்கள்.