தனது பிரஜா உரிமையினை மீள கோரியதற்க்காகவும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியதற்க்காகவும் இலங்கை பிரஜை குமார் குணரத்தினத்திற்கு; ஓராண்டு கால சிறைத்தண்டனையையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் நீதி மன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
கடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் மீள வந்து செயற்படுவதனை உறுதி செய்வதே தமது முக்கிய பணிகளில் ஒன்று என வாக்குறுதி அளித்தே இந்த அரசு பதவிக்கு வந்தது. மகிந்தா நாட்டு மக்களிற்கு மறுத்த ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதும் தனது முக்கிய பணி எனவும் உறுதி அளித்திருந்தது.
ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் தேர்தலை வெல்வதற்க்காக வழங்கப்பட்ட பொய்கள் என்பது உறுதியாகியுள்ளது.
ஊழல் பேர்வழிகள், கொலைகாரர்கள், நாட்டை கொள்ளை அடித்தவர்கள், உலக பயங்கரவாதிகள், சர்வதேச பொலிசான இன்ரபோலினால் தேடப்படுபவர்கள் என அனைத்து கிரிமினல்களும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.
இதுதான் இலங்கையில் நிகழும் ,நிகழவுள்ள நல்லாட்சி...