யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை கோரி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிகழ்ந்தது. இந்நிகழ்வில் அனைத்து பீட மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அரசியல் கைதிகள் என யாரும் சிறைகளில் கிடையாது என அரசு அறித்துள்ள நிலையில், சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிற்கு ஆதரவாக கைதிகள் விடுதலைக்கான போராட்டக்குழு, சமவுரிமை இயக்கம் மற்றும் உறவினர்களின் போராட்டங்களுடன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி யாழ் பல்கலைக்கழகத்தில் அடையாள உண்ணவிரதம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode