இன்று (08.03.2016) சர்வதேச பெண்கள் தினமான பங்குனி 8ம் திகதியினை கொண்ட்டாடும் முகமாக "பெண்கள் விடுதலை இயக்கம்" கொழும்பு பிரதேசத்தில் பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுத்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாகவும் இதனை அண்டிய வீதிகளிலும் இந்த பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் மீதான அடக்குமுறைகளிற்கு எதிராக போராட அழைப்பு விடுக்கப்பட்டதுடன், பெண் விடுதலை குறித்த பிரச்சினைக்கு சரியான தீர்பு சம்பந்தமாக சமூகக் கருத்தாடலை தொடங்குவதற்காக "எதிர்காலத்திற்காக போராடுவோம்" என்ற தொனிப்பொருளிலான வீதி நாடகம், பாடல்கள், தெருமுனை கூட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.