பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்க்காக போராட பெண்கள் விடுதலை இயக்கம் இன்று களுத்துறை வீதிகளில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. பங்குனி -08 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களை தமக்கு எதிரான ஆணாதிக்க அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பவற்கு எதிராக போராட இந்த பிரச்சார நடவடிக்கை அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் காலியில் ஆரம்பித்து இன்று களுத்துறை நாளை கொழும்பு நாளை மறுநாள் கம்பகா என இந்த எதிர்காலத்துக்காக போராட அழைக்கும் பிரச்சார நடவடிக்கை தொடரவுள்ளது.
ஆணாதிக்கம் மற்றும் முதலாளித்துவத்தால் ஒடுக்கப்படும் பெண்களின் விடுதலைக்கான போராட்டம் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வீதி நாடகம் நனட பாடல்கள் தெருமுனை கூட்டங்கள் இன்று களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடைபெற்றன.