"எந்த வகை ரத்தமானாலும், மிதிபடுவது சேர்ந்தே நித்தம்" என்ற இனவாதத்திற்கு எதிரான துண்டுப்பிரசுரம் இன்று கொழும்பு நகரில் விநியோகிக்கப்பட்டது. சமவுரிமை இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே அவர்கள் தலைமையில் துண்டுப்பிரசுர விநியோகம் நிகழ்ந்ததுடன் மக்களுடனான இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடலும், ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது.
இத்துண்டுப்பிரசுர விநியோகமும், மக்களுடனான இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல், தெருமுனைக் கூட்டங்கள் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு இடம்பெறவுள்ளது. இதை சமவுரிமை இயக்கம் முன்னெடுகின்றது.
எந்த வகை ரத்தமானாலும் மிதிபடுவது சேர்ந்தே நித்தம்