இன்று 6-2-2016 சனிக்கிழமை லண்டனில் உள்ள மத்திய வெம்பிளி நகர சதுக்கத்தில் குமார் குணரத்தினம் மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் இடம்பெற்றது. அத்தோடு துண்டுப்பிரசுர விநியோக பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் அந்நகரில் பொருட்களை வாங்க வந்திருந்த அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது. பல வெளிநாட்டவர்கள் இலங்கை இன்றைய நிலவரங்களை கேட்டறிந்ததுடன் பதாகையில் கையெழுத்து இட்டும் சென்றனர்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஜந்நூற்றிற்கும் அதிகமான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.