பட்டதாரிகளின் வேலை வாய்ப்பினை அரசிடம் கோரி நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடையாள கவனயீர்ப்பின் ஓர் அங்கமாக வடக்கு மாகாணத்தில், வருகின்ற 01.02.2016 (திங்கட்கிழமை) அன்று காலை 09.00 மணிக்கு யாழ். மாவட்ட செயலக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிங்க உட்டபட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வதோடு பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பற்றிய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும் கலந்துரையாடுவார்.
வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த பல்கலைக்கழக (உள்வாரி, வெளிவாரி) பட்டதாரிகள், தேசிய உயர் தொழில் நுட்பக் கல்லூரிப் பட்டதாரிகள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.