அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சமவுரிமை இயக்கமானது நாடுமுழுவதும் சுவரொட்டிப் பிரச்சாரம் மற்றும் அரசியல் கைதிகைளின் விடுதலை பற்றிய கோரிக்கைகளை முன்வைக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.
இன்று யாழில். சமவுரிமை இயக்க உறுப்பினர்களால் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்கு, யாழ்.நூல்நிலைய உணவக வளாகத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி விசேட கருத்தரங்கு ஒன்றும் நடைபெறவுள்ளது.