சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களே
அனைவரும் கேளுங்கள்...
எல்லோருடைய உரிமைகளை
வென்றெடுக்கமுன்னே வாருங்கள்.....
சாதி, மத, வர்க்க பேதத்தை
இல்லாதொழிக்க போராடுவோம்....
விடுதலையை தாருங்கள்
அரசியல் கைதிகளுக்கு....
இனவாத குழுக்களின் யுத்தம்
எனும் தீயினால் பாதிக்கப்பட்ட
தமிழ் மக்களுக்கு இன்னும் நிலை
சிறைச்சாலையோ????
இரத்தம் சிந்தப்பட்ட பயங்கர
யுத்தத்திற்கு இழப்பீடு செலுத்துபவர்கள்
இவர்களா????
இனவாதத்தை தூண்டியவர்கள்
புண்ணியவான்களா????
ஜனநாயகத்தை ஏற்படுத்துவேன் என்று
கூறிய சுதந்திரம் எங்கே????
காட்டிற்குள் புல்லாய் போனதோ????
அரசியல் கைதிகளுக்கு
அந்த ஜனநாயகத்தில் உரிமை
இல்லையோ????
சுதந்திரம் நாட்டிற்குள் எவ்வாறு
ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்???
ஜனநாயகத்தை ஏற்படுத்தும் இந்த
அரசாங்கத்தின் போதனை
வேடர்களின் போதனையை ஒத்ததோ.....
எங்களுக்கு விடுதலையை தா....
ஜனாதிபதி அவர்களே இதை கேளுங்கள்..
பிரதமரே இதை கேளுங்கள்..
இனியும் வேண்டாம் பொய் பித்தலாட்டம்...
விடுதலையை கொடுங்கள்
அரசியல் கைதிகளுக்கு..
நாங்கள் சொல்கிறோம் அரசாங்கத்திற்கு
எங்கள் கோரிக்கையை கேட்குமாறு...
கேட்கும் விடுதலையை அவர்களுக்கு
கொடுக்கா விட்டால் நாங்கள் தயார்
இறுதி வரை போராட......