கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி நாளை 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் பங்கேற்பதுடன் மகஜர் ஒன்றும் கையெழுத்திடப்பட்டு ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா அவர்களிடம் கையளிக்கப்பட இருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு அரசிற்கு, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அழுத்தம் கொடுக்க அழைக்கின்றோம்.