போராட்டம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் "மாற்றத்துக்கான வழி திறக்கின்றது" என்ற பெயரில் இன்று புத்தகமாக - தொகுப்பாக வந்துள்ளது. இன்று (19.08.2015) வட்டுக்கோட்டையில் நடைபெற்ற காலஞ்சென்ற சிவசிங்கராசா சிவசம்பு மற்றும் அவரது துணைவியார் நாகம்மா ஆகிய இருவரினதும் முறையே இரண்டாவது, முதலாவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி "மாற்றத்துக்கான வழி திறக்கின்றது" எனும் நூல் வெளியீட்டின் போது, முதற்பிரதியினை முன்னணிப் பதிப்பகத்தின் சார்பில் தோழர் வன்னியசிங்கம் வெளியிட்டு வைக்க, திரு.இரத்தினம் ஜெயராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நூலினை வாசித்துப் பயன்பெற யாழ் 411, ஸ்ரான்லி வீதியிலுள்ள படிப்பகம் புத்தக நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்நூலில் சமூகப் பொருளாதார கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய பல கட்டுரைகளை வாசிக்கலாம்.
இத்தொகுப்பை வெளியிடுவதற்கான பொருளாதார உதவிகளை தோழர். சிறி வழங்கியிருந்தார். தோழர். சிறி காலஞ்சென்ற தனது தாய் தந்தைக்கு மதம் சார்ந்த நினைவு தினத்தைக் கொண்டாடாமல், அதற்குப் பதிலாக சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பை தனது தாய் தந்தையின் நினைவாக வெளியிட்டுள்ளார்.