நேற்றைய தினம் ஜூன் 30 பிற்பகல் 3 மணிக்கு முன்னிலை சோசலிச கட்சியின், "இடதுசாரிய நடவடிக்கை" எனும் தமிழ் மொழி மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள உணவக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இடதுசாரி கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வட பொது மக்கள் என 75 பேர்கள் அளவில் கலந்து கொண்டனர்.
முன்னிலை சோசலிச கட்சி பொதுச் செயலாளர் சேனாதீர புத்தகத்தை வெளியிட்டு வைக்க, முதலாவது பிரதியினை புதிய ஜனநாயக மாக்சிய லெனிய கட்சி செயலாளா தோழர் செந்தில்வேல் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் புத்தத்தினை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து நிகழ்ந்த கருத்தரங்கில் தோழர்கள் புகுது ஜெயகொட, கிருபாகரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.