மலையக மக்களுக்கான 20 பேர்ச் காணி, வீட்டுரிமையை வலியுறுத்தியும் உயிரிழந்த மீரபெத்த மக்களுக்கான அஞசலிப்பேரணியும் 2014.11.13 வியாழனன்று மாத்தளை, எல்கடுவ, உண்ணஸ்கிரிய தோட்டத்தில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.
இதன் போது உண்ணஸ்கிரியவிலுள்ள 4 பிரிவுகளையும் சேர்ந்த தோட்ட மக்கள் அணி திரண்டு பேரணியில் கலந்து கொண்டதுடன், 20 பேர்ச் காணி கொடு, வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம், பாதுகாப்பான இடத்தில் தனி வீட்டுரிமை வேண்டும், நாங்களும் மனிதர்கள் தான், மின் ஒழுக்கால் எரிவது லயங்கள் மட்டுமல்ல எங்கள் எதிர்காலமும் தான் போன்ற கோசங்களுடன் உண்ணஸ்கிரிய தேவாலய சந்தியிலிருந்து தேயிலை தொழிற்சாலை வரை பேரணி தொடர்ந்தது.