சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை கொழும்பில் நடாத்தவுள்ளது. இனவாதத்துக்கு எதிராக -குறிப்பாகத் தெற்கில் வேலைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, இலங்கையில் அனைத்துப் பகுதியிலும் முளைவிட்டுக் கிளர்தெளுந்துள்ள மதவாததுக்கும், ஏற்கனவே ஆழ வேரூன்றியுள்ள சாதியத்துக்கு/ குலவாதத்துக்கு எதிராகவும் தனது வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது .
இந்த ஒடுக்குமுறைகளைப் பற்றி விவாதிக்கவும், கருத்துப்பரிமாற்றத்தை நிகழ்த்தவும், இதன் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பல்முனைப் போராட்டத்தை நடைமுறைப்படுத்தவுமே இம்மாநாடு நடாத்தப்படவுள்ளதாக இலங்கை சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திசீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் களப்பணியாற்றும் தோழர்களும் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இம் மாநாட்டில் பங்கு கொள்ளவுள்ளனர்.
மாநாடு விபரம் :
இடம் : கொழும்பு பொது நூலக மண்டபம்
காலம் : ஜூலை 15, பிற்பகல் 3 மணிக்கு
சமவுரிமை இயக்கம் - இலங்கை ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகப் போராடும் அனைவரையும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் அழைக்கிறது!