22.06.2014 இன்று மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நாட்டில் எழுச்சி பெற்றிருக்கும் இன வன்முறைக்கு பொருத்தமான தீர்வு ஒன்றை காணும் நோக்கில் சம உரிமை இயக்கத்தினால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலான புத்திஜீவிகள், பேராசிரியர்கள், சமூகபற்றாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அர்த்தபுஷ்டியாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பலதரப்பட்ட கருத்துக்களும் முன்வைக்கப்படன. 30 வருட யுத்தத்திற்குள் சிக்கி சீரழிந்த எமது நாடு மீண்டும் ஒரு யுத்ததிற்கு வாய்ப்பான இன, மதவாதம் எழுச்சி பெறுவதை முற்றாக தோற்கடிப்பதற்கு ஏற்புடையதான பல யோசனைகள் இக்கருத்தாடலில் கலந்து கொண்டோரால் முன்வைக்கப்பட்டது. யோசனைகள் பற்றி ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக மீண்டும் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
காலத்தின் தேவை கருதி இவ்வாறானதொரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த சம உரிமை இயக்கத்தினருக்கு கூட்டத்தில் கலந்து கொண்டோர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.