சம உரிமை இயக்கதினால் நாடு பூராகவும் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களுல் ஒரு நிகழ்வாக நேற்று ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள என்.எம். பெரேரா ஞாபகார்த மண்டபத்தில் ஏன் இந்த குழப்பம் சிங்கள - முஸ்லிம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள சிங்கள,முஸ்லிம்,தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே...
தற்பொழுது நாட்டில் பிரச்சாரம் ஒன்று பரப்பட்டு வருகின்றது.அது முஸ்லிம் கடைகளில் மிட்டாய் வாங்கவேண்டாம் அவ்வாறு வாங்கி சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத் தன்மை உன்டாகின்றது இதனால் சிங்கள மக்களின் சனத்தொகை குறைவடைகின்றது என்று கூறப்படுகின்றது மற்றும் குறிப்பிட்ட முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டாம்.அந்த கடைகளில் உடை மாற்றும் அறைகளில் கமரா பொருத்தப்பட்டிருக்கின்றது. என்றதொரு பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்ல ஹலால் சம்பந்தமான பிரச்சினையும் இதனுடன் இணைகின்றது.
உண்மையிலேயே நாட்டில் என்ன நடக்கின்றது.
எமக்கு நண்றாகத் தெரியும் அன்மைக்காலங்களில் ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்த செய்திதான் சிங்கள புடைவைக்கடையொன்றின் உடை மாற்றும் அரையில் உடை மாற்றிணய யுவதி ஒருவரை படம்பிடித்து கடை உரிமையாளர் அந்த யுவதியை உடலுறவு கொள்ள அழைத்ததை நாம் செய்திகள் மூலம் அறிந்தோம்.அதுமட்டுமல்ல முஸ்லிம்களில் கடைகளில் விற்கப்படும் மிட்டாய்களை வாங்கி சாப்பிட்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்ற சந்தேகம் இருப்பின் எதற்கெடுத்தாலும் கொமிசன் அமைத்து விசாரனை நடத்தும் ஜனாதிபதி இதற்கும் கொமிசன் ஒன்றை அமைத்து விசாரித்தால் உன்மையை கண்டு பிடித்து விடலாமே.ஆனால் அப்படி அவர்களால் செய்ய முடியாது ஏனெனில் இந்தப்பிரச்சினை முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு தேவையானது.
இனவாதம் எமது நாட்டில் எப்படி வளர்ந்திருக்கின்றது என்பதற்கு உதாரணமாக நிமல் சிறிபாலடி சில்வா சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அவரது மாவட்டத்தைச் சேர்நதவர்களுக்கே சுகாதாரத்துறையில் தொழில் வழங்கினார். அவ்வாறுதான் மின்சார அமைச்சராக இருந்த சம்பிக்க ரனவக்க கெல உறுமயவில் இருந்த தனது ஆதரவாளர்களுக்கு மின்சார சபையில் தொழில் வழங்கினார்.ஏன் ரவூப் ஹக்கீம் தான் நீதி அமைச்சரானதும் தனது ஆதரவாளர்களுக்கே நீதித்துறையில் தொழில் வழங்கினார்.இப்படியாக முதலாளித்துவ ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்றார்கள்.அவர்களுக்கு ஆட்சியை தொடர்ந்து நடத்திச் செல்ல இனவாதம் தேவையாக உள்ளது.
எமது நாட்டை ஆட்சி செய்த தற்போது ஆட்சி செய்யும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு அவர்களது ஆட்சியை தொடர்சியாக கொண்டுசெல்வதற்காக இனவாதம் பயன்படுத்தப்பட்டிருப்பது அவர்களில் காலத்தில் நடந்த சம்பவங்களும் தற்போது நடக்கும் நிகழ்வுகளும் எமக்கு சாட்சியாக நிற்கின்றன.
இந்த நாட்டை ஆட்சி செய்த ஒல்லாந்தர்,போர்த்துக்கீசர்.ஆங்கிலேயர் போன்ற ஆட்சியாளர்கள் என்று வந்து தொடர்ந்து போலி சுதந்திரம் என்ற போர்வையில் இங்குள்ள முதலாளித்துவ வர்க்கத்திடம் அவர்களது ஆட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். அன்றிலிருந்நு அவர்களின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக இனவாதத்தை போசித்து வந்துள்ளார்கள்.அது முன்பிருந்த ஆட்சியாளர்களினாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பண்டார நாயக்க முதல் தற்போது ஆட்சியில் இருக்கும் மகிந்தவரை இந்த இனவாத ஆட்சி தொடர்கின்றது.
உலக நாடுகளின் வரலாற்றை எடுத்துக்கொள்வோமாயின் சோவியத் ரஸ்யா ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்கள் நடை முறையில் இருந்தன. இதனை மக்கள் மத்தியில் தவரான பிரச்சாரம் மூலம் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் காட்டத்துவங்கின.அன்று ரஸ்யப்படைகளை கொள்வதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளையும் பண உதவியையும் வழங்கியது.ஆளால் அதே அமெரிக்கா 2011 உலக வர்த்தகமையம் தாக்குதலுக்குப்பின் தாலிபான்கள் பயங்கர வாதிகள் அவர்களை அழிக்க வேண்டும் என்று கூறி அதனது மனிதப் படுகொலையை ஈராக்கில் துவங்கி ஆப்கான் லிபியா எகிப்து யெமன் பாலஸ்தீன் ஏன் இன்னும் பல மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அதனது திட்டத்தை எடுத்துச்சென்று அதனது மனிதப்படுகொலையை நிகழ்த்தியது.மேலே நான் கூறியவை எமது நாட்டுப் பிரச்சினைக்கும் இந்தப்பிரச்சினைக்கும் தொடர்பு இருக்கின்றது.அதுதான் முதலாளித்துவ இனவாதம்.
ஆகவே தற்போது எமது நாட்டில் நடப்பது அப்படிப்பட்ட ஒன்றுதான் மக்கள் இதனை சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும். முஸ்லிம் சிங்கள மக்களுக்கடையில் அல்ல பிரச்சனை அது இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களிடத்தில் உள்ள பிரச்சினை. ஆகவே நாம் உண்மையான எதிரி யார் என்பதை இனங்கான வேண்டும். எமக்குள்ள பிரச்சனை முஸ்லிம் சிங்கள பிரச்சினை அல்ல அது எங்களுக்கு தேவையில்லாத ஒன்று.முன்பு யுத்தம் இருந்தது அது பல்லாயிரம் மனிதப் படுகொலையோடு முடிவுக்கு வந்தது. தற்பொழுது இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு ஆட்சியை நடத்திச்செல்ல இன்னொரு இனவாத வடிவம் தேவைப்படுகின்றது அதை வளர்த்து குளிர் காயவே அவர்கள் விரும்புகின்றார்கள்,எனவே சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களாகிய நாம் இவற்றை தோற்கடிப்பதுடன் உண்மையான எதிரி யார் என்பதையும் கண்டு பிடித்து அதற்கு எதிராக செயற்பட வேண்டும். என்று கூறி அவரது உரையை முடித்துக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய சம உரிமை இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஹைதர் ...
இந்தக் காலகட்டத்தில் இந்தத் தலைப்பில் கட்டாயமாக பேசியே ஆகவேண்டும். மௌனமாக இருக்கும் ஒவ்வொருவரும் கடந்த கால நிலைமையை கருத்திற் கொள்ளவேண்டும். இனவாதம் வளர்ந்து கடந்த காலங்களில் நடந்த அச்சமான நிலைமைக்கு இட்டுச் செல்வதை சிங்கள முஸ்லிம் தமிழ் மக்கள் ஆகிய நாம் அனைவரும் இணைந்து தடுத்திடவேண்டும்.
உலக நாடுகளில் முதலாளித்துவம் வளர்சிடைந்ததைத் தொடர்ந்து அது எமது நாட்டையும் வந்தடைந்தது.அதனால் எமது நாட்டில் பல பிரச்சனைகள் தோன்றின முஸ்லிம் சிங்களஇனப் பிரச்சனை நடந்தது. அதன்பின்னர் தமிழ் சிங்கள இனப் பிரச்சினை நடந்தது மீண்டும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முஸ்லிம் சிங்கள இனப் பிரச்சினையை வளர்த்து அவர்கள் இலாபமடைய விரும்புகிறார்கள் சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களாகிய நாம் இதனை கருத்திற் கொண்டு ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டும்.
இனவாதத்தை போசித்து அதனால் வரும் இளப்புக்களை பற்றி கவலைப்படாது இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். இவைளை நாம் தோற்கடிக்க வேண்டும்.முதலிள் நாங்கள் பிரச்சினைகளை சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும்.யுத்தம் நடைபெறுகின்றது என்று கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களை இந்த முதலாளித்து அரசியல் தலைவர்கள் கொண்று குவித்தார்கள்.அதற்கு அவர்கள்கள் சொன்ன பதில் பயங்கரவாதம் என்று .LTTE இயக்கம் இனவாதத்திற்குல் விழுந்து யாழ்ப்பாணத்தில் இருந்த 135000 முஸ்லிம் மக்களை இரவோடு இரவாக வெளியேற்றி அதனது இனவாதத்தை வளர்த்துக்கொண்டது மொத்தத்தில் இனவாதிகளை வகைகப்படுத்த முடியாது அவர்கள் எது எப்படி ஆனாலும் பரவாயில்லை இலாபநோக்கை மட்டும் கருத்திற்கொண்டு செயற்படும் முதலாளித்துவ இனவாதிகள் என்பதை நாம் விளங்கிக்கொண்டு உண்மையான இனவாத எதிரியை தோற்கடிக்க சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று படவேண்டும்.
நன்றி லங்கா விவ்ஸ்