முன்னிலை சோஷலிச கட்சியின் முன்னணிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் இனவாதத்திற்றிற்கு எதிராக இயங்கும் அமைப்பான சமவுரிமை இயக்கம், மார்கழி 18 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை, கொழும்பு புகையிரத நிலையத்திற்கு எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டம் யாழ். பல்கலைகழகத்தில் நடந்த ராணுவ அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் நடாத்தப்படுகிறது. அத்துடன், இவ்வகை ஆர்ப்பாட்டங்கள், மற்றும் போராட்டங்களை தெற்கில் நடத்துவதன் மூலம், இலங்கையின் வடக்கு- கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்படும் இனம் சார்ந்த ஒடுக்கு முறையை, சிங்கள மக்களிடம் விளக்கிக்கூறி, இனவாத சிந்தனைக்கு எதிராக நடைமுறையில் போராட முடியுமென்று சமவுரிமை இயக்கம் நம்புகிறது.
இவ்வார்ப்பாட்டத்தில் முன் வைக்கப்படும் கோசங்கள் :
* கைது செய்யப்பட்ட அனைத்து யாழ் -மாணவர்களையும் விடுதலை செய் !
*வடக்கு மற்றும் கிழக்கில் நடை பெறும் இராணுவ ஆட்சியை உடனே நிறுத்து !
*அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய் !
இனவாததிற்கு எதிராகவும், பாசிச அரசிற்கு எதிராகவும் போராட, அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்! இந்த ஆர்ப்பாட்ட செய்தியினை பரப்புவதுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இனவாதத்தினையும், இனஒடுக்கு முறையினையும் எதிர்க்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்
-சம உரிமை இயக்கம்
அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம்