சமஉரிமை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட விசேட பத்திரிகையாளர் மாநாடு இன்று காலை பத்து மணியளவில் கொழும்பு மருதானை சமூக மற்றும் மதங்கள் கேந்திர நியைத்தில் நடைபெற்றது. இம்மாநாடு தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் பற்றியும் தென்பகுதி மக்களுக்கு விளக்கும் ஊடகப் பிரச்சாரமாகவும் சமஉரிமை இயக்கம் முன்னெடுத்துள்ளது. இதில் சகல தமிழ்-சிங்கள ஊடகங்களும் கலந்து கொண்டன.
இவ் ஊடக சந்திப்பில் சம உரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் யூட் சில்வா புள்ளே ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே மற்றும் உறுப்பினர்களான கே.கிருபாகரன் ப.ரிச்சர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். சிங்கள பத்திரிகையாளர்களின் செவ்விகளுக்கு ரவீந்ர முதலிகேயும் தமிழ் பத்திரிகையாளரின் செவ்விகளுக்கு ப.ரிச்சர்ட்டும் பதிலளித்தனர். பத்திகையாளர் மநாட்டின் விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.