புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சியின் 34வது ஆண்டு விழா பொது கூட்டம் கட்சியின் வடபிராந்திய செயலாளர் கா. கதிர்காமநாதன் தலைமையில் யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி மக்கள் மண்டபத்தில் 2012.08.26 ம் திகதி இடம்பெற்றது. இதில் பு.ஜ.மா.லெ கட்சியின் பொதுச் செயலாளர். சி.கா. செந்திவேல், தேசிய அமைப்பாளர் வே. மகேந்திரன், அரசியல் குழு உறுப்பினர்கள் க.தணிகாசலம், சோ. தேவராஜா, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் த. பிரகாஸ், சு.விஜயகுமார், க.சீலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பல பிரதேசங்களில் இருந்தும் வந்த கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்வில் புத்தூர் கலைமதி கிராம மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் புதிய ஜனநாயக கலைக்குழுவின் புரட்சிகர பாடல்களும் நாடக ஆற்றுகையும் இடம்பெற்றன.