நமது பாதுகாப்புக்காக
நாம் அவர்களின் பற்களை உடைப்போம்
நமது பாதுகாப்புக்காக
அவர்களின் தலைகள் மீதும்அவர்களின் பாதுகாப்பின் மீதும்
அவர்களின் பழத் தோட்டங்களின் மீதும்
அவர்களின் திராட்சைக் கொடிகளின் மீதும்
அவர்களின் வீடுகளின் மீதும்
அவர்களின் பெருமிதத்தின் மீதும்
நாம் தொன் கணக்கில் குண்டு வீசுவோம் —
அனைத்தும் நமது பாதுகாப்புக்காக மட்டுமே.
ஆயினும் நமது பாதுகாப்பு எங்கே?
அவர்களுடைய பாதுகாப்புக்கு என்னாயிற்று?
மெய்யாக நமது பாதுகாப்பும்
அவர்களுடைய பாதுகாப்பும்
ஒட்டிப் பிறந்த இரட்டையர்.
மெய்யாக ஒன்றை அடியாமல்
மற்றதை அடிக்க இயலாது
-Ada Aharoni
நன்கறியப்பட்ட ஒரு இஸ்ரேலிய எழுத்தாளரான பேராசிரியர் ஆட அஹரொனி (Ada Aharoni) இது வரை 22 நூல்களை வெளியிட்டுள்ளார். மேற்காணுங் கவிதை இஸரேலியப் படைவீரர்கள் லெபனானிலிருந்த போது எழுதிய கடிதங்களின் அருட்டுணர்வால் 2001 மேயில் எழுதப்பட்டது.
நன்றி :செம்பாதகை 13