ஜெனிவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரிக்க, தமிழக அரசியல்வாதிகள் மகிழ்ச்சிக்கடலில் திகைத்துப்போனார்கள்.
"தமிழீழம்" உருவாகும்வரை என் போராட்டமும் இருக்கும் -- கருணாநிதி
உலகத் தமிழர் சார்பாக பிரதமருக்கு நன்றி ----ஜெயலலிதா
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், மதுரை உயர்நீதிமன்ற கிளை வக்கீல்கள் திரண்டு பட்டாசுகளைக் கொளுத்தியும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அதேபோல மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வக்கீல்கள் திரண்டு இனிப்புகளை வழங்கினர்.
உயிர்வாழும் உரிமைக்காய் அணுஉலைக்கெதிராய் போராடும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு மத்திய, மாநில அரசுக்களின் கூலிப்படைகளின் சுற்றிவளைப்புக்குள். இடிந்தகரை மக்களிற்காய் வக்கீல்கள் சட்டப்புத்தகத்தை பிரட்டியாவது பார்ப்பார்களா?
-முரளி 23/03/2012