மக்கள் விடுதலையை மறுக்கின்றவர்களை பெரும்பான்மையாக கொண்ட, சமூக விரோதிகளாலானது. சொந்த நடத்தைகளாலும், கருத்தாலும் மனித இனத்தையே வேரோடு அழிக்கின்றவர்கள் தான் இவர்கள்.
மிகக் கணிசமான புலி ஓட்டுண்ணிகள், இதற்குள் பல பெயர்களில் ஓட்டிக் கொண்டு இதற்குள்ளும் வாழப்பழகிவிட்டார்கள். அது செய்வது திடட்மிட்ட வகையில், புலிப்பாசிசத்தை பாதுகாக்க, புலியெதிர்ப்பு கும்பலின் மக்கள் விரோத அரசியலை தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்கின்றது. மக்கள் விடுதலை என்ற கருத்துக்கு எதிராக, புலியும் – புலியெதிர்ப்பும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒன்றாக கூட்டாக சேறடிக்க முனைகின்றது. அத்துடன் புலியெதிர்ப்பு தனிநபர் உள் முரண்பாடுகளை ஊதிப் பெருக்கி மோதவைக்கின்றது.
இணையங்களின் (தமிழ்மணம், யாழ் இணையம்… ) புலி சார்பாக எழுதிக்கொண்ட பலர், தேசத்தின் நிலையெடுத்து குந்தியிருந்தே பாசிசப் பிரச்சாரம் செய்கின்றனர். புனை பெயரில் உள்ள பலர், முன்பு சொந்த பெயரில் புனை பெயரில் புலியாக அசல் பாசிட்டாக அம்பலமானவர்கள்;. தம்மை மூடிமறைத்துக் கொண்டு தான், அம்மணமாகி நிற்கின்றனர்.
சமூக நோக்கமற்ற தேசத்தின் 'தொழில் நேர்மை" போல், புலிகள் தமது 'பாசிசத்தின் நேர்மையை" தேசத்தின் துணையுடன் வியாபாரம் செய்கின்றனர். தேசத்தின் 'தொழில் நேர்மை"க்கு ஏற்ப, பாய் விரித்து தானும் விபச்சாரம் செய்கின்றது.
இதில் இரண்டாவது வகையினர் புலியை எதிர்த்தால் முற்போக்கு என்றும், அது தான் இடதுசாரியம் என்றும் ஊர் உலகத்தையே ஏமாற்றும் கடைந்தெடுத்த ஏமாற்றுப் பேர்வழிகள். இதில் புலியெதிர்ப்பு என்றால் அரசை ஆதரிப்பது, மறுபகுதி புலி எதிர்ப்பு என்றால் தமது சொந்த சமூகச் சீரழிவுக்கு ஏற்ப கோஸ்டி கட்டி அதை மோதலாக்குகின்ற கும்பல். இவர்கள் தான் தேசத்தில் தஞ்சமடைந்து விட, அது அவதூறாக காழ்ப்பாக வெளிப்படுகின்றது.
இதற்கு ஏற்ப தேசம் இயங்குகின்றது. புலியெதிர்ப்பு அரச பாசிட்டுகள் இன்றி எப்படி இலக்கிய சந்திப்பு நடத்த முடியாதோ, அப்படி தேசம் அரசு மற்றும் புலிப் பாசிட்டுகள் இன்றி தேச 'ஊடகவியலை" நடத்த முடியாது. இது தான், அதன் 'ஊடகவியல்" அறம்.
மக்களின் விடுதலைக்காக நீங்கள் எதை முன் வைக்கின்றீர்கள், எப்படித் தான் அவர்கள் விடுதலையை அடைய முடியும் என்றால், இதில் உள்ள எந்தப் பொறுக்கியும் பதில் அளிப்பதில்லை. அவர்களின் 'தொழில் நேர்மை" அப்படிப்பட்டது. அரசியலில் உள்ள எல்லா சமூக விரோதிகளினதும், கூடாரம் தான் தேசம். எதார்த்தத்தில் புலிப் பாசிசம், அரச பாசிசத்துக்காக யாரெல்லாம் 'தொழில் நேர்மை"யுடன் உண்மையாக உள்ளனரோ, யாரெல்லாம் இதை எதிர்க்க வில்லையோ, அவர்கள் தான் தேசத்திலும் தஞ்சமடைந்து உள்ளனர். இதற்கு வெளியில் எது சமூகத்தில் இல்லையோ, அது தேசத்தில் இருப்பதில்லை.
தேசம் தான் எஜமானனாக இருக்க, பாசிட்டுகளை தனது வேட்டை நாய்களாக்கி சமூகத்தை குதறுவதை 'தொழில் நேர்மை" என்கின்றது.
முன்னாள் காலனித்துவ வாதிகளும், நிலப்பிரபுகளும், முதலாளிகளும் பொழுது போக்கிற்காகவும் தமது வக்கிரமான மனவிகாரம் கொண்ட தமது சொந்த ரசனையை தீர்த்துக்கொள்ளவும், வேட்டை நாய்களை வளர்ப்பார்கள். அவர்கள் மனித உழைப்பை திருடி, வேட்டை நாய்க்கு தீனி போடுவார்கள். இதை அவர்கள் சுற்றி இருந்து ரசிப்பார்கள். அந்த நாய்கள் இழுபட்டு கடிபட்டு சண்டை பிடிப்பதை ரசிக்கின்ற மனவிகாரம் கொண்டவர்களாக, அதை கவுரவமாக கருதி ரசிப்பார்கள். இங்கு நாய் கடித்துக் குதற, அதன் வேட்டைப் பொருளாக வெள்ளையனுக்கு கறுப்பனாகவும், உயர் சாதிக்கு பள்ளுப் பறைகளாகவும் இருந்தது வரலாறு. நவீனம் இதை 'தொழில் நேர்மை" யுடன் பாசிசத்தை சார்ந்து மக்களை குதறுவதை பார்த்து ரசிக்கின்றது. தேசம் என்ற எஜமானனின் 'தொழில் நேர்மை" சார்ந்த விருப்பத்தை புரிந்து கொண்டு, போடுவதை மட்டும் இந்த பாசிச நாய்கள் குதறுவதில்லை. மாறாக கடித்து குதற, வேட்டைப் பொருளை வெளியில் இருந்து கவ்வி வந்து போட்டு குதறுகின்றது. எஜமான் தன் பாசிச நாய்களின் திறமையைக் கண்டு மெய்சிலிர்க்க அதை வாசகரின் 'தொழில் நேர்மை" என்கின்றது. தேசம் தமது மனவிகாரத்தை தீர்த்துக்கொள்வதையே, தமது ஊடகவியல் 'தொழில் நேர்மை" சார்ந்த உரிமை என்கின்றது.
மனிதத்தை குதறுவதை, புலிகள் தமிழ் மக்களின் 'விடுதலை" என்று எப்படி கூற முடிகின்றதோ, அரசு தமிழ் மக்களின் ஜனநாயகத்தை "பயங்கரவாத ஒழிப்பாக" எப்படி கூற முடிகின்றதோ, அதேபோல் இவ்விரண்டையும் அண்டிப்பிழைக்கும் தேசம் தனது சொந்த மனவிகாரத்தை 'ஊடகவியல்" என்கின்றது. அவர் அவர் நிலையில் நின்று இதைத்தான் 'தொழில் நேர்மை" என்கின்றனர்.
இதனால் மக்களுக்கு என்ன நன்மை? மக்கள் தமது சொந்த விடுதலையை எப்படி அடைவார்கள்? இதை புலியின் 'விடுதலை" தத்துவமும், அரசின் 'பயங்கரவாத ஒழிப்பும்" தேசத்தின் 'ஊடகவியலும்" கூறுவது கிடையாது. கூறப்போவதும் கிடையாது.
பாசிச நடத்தைகள், கருத்தாடல்கள் கொண்ட தமது சொந்த மனவிகாரங்களுடன் தான் மக்களை அணுகுகின்றனர். இப்படி தமிழ் மக்களின் அவலங்களை இழிவுபடுத்தும் இவர்கள், தமது சொந்த குறுகிய நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்துகின்றனர். மக்கள் போராட்டம் என்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று என்றும், அது வெறும் 'புனைவு" என்றும் கூறிக்கொள்ளும், கூட்டுக் கயவாளிப்பயல்கள் தான் இவர்கள். மொத்தத்தில் மனித சமூகத்துக்கு எதிராக செயல்படும், சமூக விரோதிகள் தான் இவர்கள்.
பி.இரயாகரன்
16.06.2008
தொடரும்