Thu12122019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
July 2012

Tuesday, 31 July 2012

மரணங்களின் நினைவு கூர்தல் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 31 July 2012 06:26
அரசியல்_சமூகம் / விருந்தினர்

மரணங்களின் நினைவு கூர்தல்

Scarborough Village Recreation Centre

3600 Kingston Road

Scarborough ON

MIM IR9

August 19,2012

2:00 PM

கருமையம்

 

Read more...
Last Updated ( Tuesday, 31 July 2012 06:42 )


Monday, 30 July 2012

ஆபத்தான அணு உலை வேண்டாம்-கலை நிகழ்ச்சி -பு.மா.இ.மு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 30 July 2012 16:51
ஒலி/ஒளிப்பேழைகள் / கலைநிகழ்வுகள்(ஒளி)

ஆபத்தான அணு உலை வேண்டாம்-கலை நிகழ்ச்சி -பு.மா.இ.மு (சென்னை)

 

Read more...
Last Updated ( Tuesday, 22 January 2019 13:11 )


Sunday, 29 July 2012

முஸ்லிம் மக்களே! இன ஐக்கியத்தை கோருங்கள்!!, இனவாதத்தை நிராகரியுங்கள்!! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 29 July 2012 10:54
பி.இரயாகரன் - சமர் / 2012

சிங்கள மக்களை நேசியுங்கள், சிங்கள அரசை நிராகரியுங்கள். தமிழ் மக்களை நேசியுங்கள், தமிழ் இனவாதிகளை நிராகரியுங்கள். அதுபோல் யாரெல்லாம் முஸ்லிம் மக்களை நேசிக்காமல் முஸ்லிம் இனவாதத்தை முன்னிறுத்துகின்றனரோ, அவர்களை நிராகரியுங்கள். குறிப்பாக யாரெல்லாம் முஸ்லிம் மக்களைச் சாராது அரசுடன் நிற்கின்றனரோ, அவர்களை முதலில் நிராகரியுங்கள். இவர்களின் இன, மத கோசங்கள், உங்களை மோதவிட்டு, அவர்கள் அதில் குளிர்காய்வது தான். தங்கள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து, தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிரித்துப் பிளந்து மோதவிடுகின்ற அரசியல் சதிக்கு துணை போகாதீர்கள், மற்றவர்களைத் துணைபோக அனுமதிக்காதீர்கள்.

Read more...
Last Updated ( Sunday, 29 July 2012 17:00 )

பாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 29 July 2012 10:00
ஒலி/ஒளிப்பேழைகள் / விபரணங்கள்-இந்தியா(ஒளி)

பாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு

 

Read more...
Last Updated ( Sunday, 29 July 2012 19:55 )

குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 29 July 2012 05:38
அரசியல்_சமூகம் / செங்கொடியின் சிறகுகள்

கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், கடைசி ஊர்வலம் என பொது மக்கள் தன்னுந்துதலில் தாங்களாகவே தங்களின் அனுதாபத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். நேரில் கண்ணுற்ற மக்கள் தங்களின் கோபத்தை பேருந்தை எரித்து தீர்த்துக் கொண்டனர். தொடர்ந்து, மக்களிடையே நிகழ்வு குறித்து யார் பொறுப்பு எனும் கேள்விகள் எழுந்தன. பள்ளி நிர்வாகிகளே காரணம் என்றனர் சிலர். பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியமே காரணம் என்றனர் சிலர். குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமற்று இருந்த பெற்றோர்களும் காரணம் என்றனர் சிலர். சரியாக சோதனை செய்யாமல் சான்றிதழ் அளித்த மண்டல போக்குவரத்து அலுவலரும் காரணம் என்றனர் சிலர். இன்னும் சிலரோ இரக்கமற்று குழந்தையும் காரணம் என்றனர். நீதி மன்றம் தன் பங்குக்கு ஏன் இதை கொலை வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டு வைத்தது.

Read more...
Last Updated ( Sunday, 29 July 2012 05:44 )


Saturday, 28 July 2012

வாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி, டோனேசன் பணத்திலே, நடன பெண்களுடனே PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 28 July 2012 17:01
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

மிகக்குறுகிய நிலப்பரப்பு,ஆறுகள் இல்லை,பெரியு குளங்கள் இல்லை. தொண்டைமான் ஆறு என்ற உப்புக்கடல் வாய்க்காலும்,வழுக்கியாறு என்கிற மழைக்கால வெள்ளவாய்க்காலும் மட்டுமே ஆறுகள் என்ற பெயரோடு இருப்பவை. உச்சிமரத்திற்கு ஏறி கள்ளும்,தெங்காயும் இறக்க பயப்படாதவன் கடன்காரனிற்கு பயந்து ஒழிக்க வேண்டிய வாழ்நிலை. துணி வெளுப்பவரும்,முடி திருத்துபவரும்,தச்சரும்,கொல்லரும்,குயவரும் சின்னஞ்சிறு ஊர்களின் குறுகிய பொருளாதார வளையங்களிற்குள் காவல் கிடந்து வேலை பெற வேண்டிய நிலை; உரத்து அடிக்கும் வாடைகாற்றிலும் உறுதியோடு வள்ளத்தில் கால் பதித்து நிற்கும் கடல்தொழிலாளர்கள் ஊரிலே பசியோடு காத்திருக்கும் மனைவி,பிள்ளைகளை நினைத்தால் ஊசலாடுவார்கள்.

Read more...
Last Updated ( Saturday, 28 July 2012 17:49 )

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 67 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 28 July 2012 06:43
அரசியல்_சமூகம் / நேசன்

உடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தால் யாழ்ப்பாணம் - கண்டி வீதி (A9) என்றுமில்லாதவாறு சனநெருக்கடிமிக்கதாக மாறிக்கொண்டிருந்தது. தமது மண்ணையும், மனையையும் விட்டு அனைத்தையும் இழந்து அநாதரவாக, அகதிகளாக வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் நம்பிக்கையற்றதொரு எதிர்காலத்தை நோக்கியவர்களாக சென்றுகொண்டிருந்தனர்.

Read more...
Last Updated ( Saturday, 28 July 2012 06:50 )


Thursday, 26 July 2012

இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 05 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 26 July 2012 15:50
பி.இரயாகரன் - சமர் / 2012

தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்ததுதான், சமூகத்துடன் தன்னை இணைத்து போராடாத இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியலாக வெளிப்படுகின்றது. அதன் தத்துவம், கோட்பாடு, நடைமுறை அனைத்தும் இந்த அடிப்படையிலானது. சமூகத்துக்குள் தனிநபரா அல்லது சமூகத்துக்கு மேல் தனிநபரா என்ற அடிப்படை வேறுபாடு தான், தனிச் சொத்துடமையைப் பாதுகாக்கும் எல்லைவரை அவர்களை இட்டுச்செல்வதுடன் பாசிசத்தை எதிர்க்காத இலக்கிய மற்றும் இலக்கிய அரசியற் செயல்பாடுகளாக பரிணாமம் பெறுகின்றது. இப்படி பிரமுகர்களின் சமூக இருப்பு, தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்தது. இதுதான் தனிச்சொத்துடமையில் எங்கும் காணப்படுகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 29 July 2012 16:59 )


Tuesday, 24 July 2012

தமிழரங்கத்தின் விமர்சனம் தொடர்பான விமர்சனங்களும், எமது அரசியலும் - மா.நீனா, சீலன் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 July 2012 19:44
அரசியல்_சமூகம் / மா.நீனா

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக, தமிழரங்கம் சார்ந்த நாங்கள், அச்சு ஊடாகவும் இணயத்தளங்கள் மூலமும் எமது இடைவிடாத அரசியல் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமுள்ளோம்.

எமது விமர்சனம் சம்பந்தமாக பலவகையான விமர்சனங்களையும், திட்டுக்ளையும், ஏளனங்களையும், அவதூறுகளையும் பலவருடங்களாகச் சந்தித்தபடி உள்ளோம். இந்த விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் தீண்டத் தகாதவர்களாக எங்களை ஒதுக்க முயன்றவர்களையும், பிரச்சாரம் செய்தவர்களையும் சந்தித்திருக்கின்றோம். இன்றும் சந்திக்கின்றோம். இவை மட்டுமல்லாமல் புலிகளிடமும், இலங்கை - இந்திய அரச பாசிசத்திடமும், உயிர்ப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்டிக் கொடுக்கப்பட்டதையும், இன்றும் காட்டிக் கொடுக்கப்படுவதையும், அதனால் ஏற்பட்ட - ஏற்படுகின்ற பாதிப்புகளையும் நாம் அனுபவித்த வண்ணமுள்ளோம்.

Read more...
Last Updated ( Tuesday, 24 July 2012 19:47 )


Monday, 23 July 2012

சயந்தனின் "ஆறா வடு" நாவலின் அரசியலும், பிரமுகராக தன்னை தகவமைக்கும் முயற்சியும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 23 July 2012 19:42
பி.இரயாகரன் - சமர் / 2012

அதிகார சூழலுக்கு ஏற்ப தன்னைத் "தகவமைப்பதே" மனிதன் என்று கூறும், ஒரு அற்ப மனிதனின் அற்பத்தனமான கதைகள். இப்படி "தகவமைத்து" வாழ்தல் மனித "இயல்பே" ஒழிய அது "பிழையல்ல" என்று கூறி, அதுவே தன் கதைகள் என்கின்றார். இந்த வகையில் தன்னை அதன் ஒரு பிரதியாகவும் முன்னிறுத்துகின்றார். இன்று தன்னையும் ஒரு பிரமுகராக தகவமைத்துக் கொள்ள எழுதுகின்றார். "அதிகாரத்துக்கு தகவமைத்து" வாழ்தல் தான், மனித இயல்பும் இருப்பும் என்று கூறக் கூடிய ஒருவரின், அந்த இருப்பு சார்ந்து எழும் கதைகள். மனித இனத்தை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற கூட்டத்துடன் தன்னை தகவமைத்துக் கொண்ட வக்கிரமான குரலாக இவை வெளிவருகின்றது. மனிதனுக்கு மனிதன் அடங்கிப் போகும் வண்ணம் "தகவமைப்பை" விளக்குகின்ற, கோருகின்ற அடித்தளத்தை, மனித "இயல்பு" என்கின்றார். இது "பிழையல்ல" என்று, தங்கள் சந்தர்ப்பவாத பிழைப்பை நியாயப்பபடுத்துகின்றார். மனிதனை மனிதன் அடக்குவதும், ஒடுக்குவதும் ஏன்? மனிதன் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தன்னை தகவமைக்க மறுப்பதால் தான், அடக்குவதும், ஒடுக்குவதும் எங்கும் எதிலும் காணப்படுகின்றது. இப்படி எதார்த்தம் இருக்க, அடங்கி ஒடுங்கி தகவமைத்துக் கொண்டு அதையே பிறமனிதன் மீது செய்யும் தங்களை ஒத்த அற்பர்களை நியாயப்படுத்தி முன்னிறுத்தும் கதை. இதுதான் அவர்கள் அளவில் காணும் எதார்த்தம்.

Read more...
Last Updated ( Monday, 23 July 2012 20:27 )

Page 1 of 13