Sun02232020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 08 July 2012
பணக்கார நாடுகளில் வயிறு பெருத்துச் செல்ல, ஏழைநாடுகளின் வயிறோ சிறுத்துச் செல்கிறது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 19:31
பி.இரயாகரன் - சமர் / சமர் - 20 : 01 -1997

10-4-96 ல் ஐ.நா ஆய்வறிக்கை ஒன்றின் புள்ளி விபரத்தின்படி ஓர் ஏழைநாட்டில் வாழ்பவனின் வருமானத்தை விட பணக்கார நாடொன்றில் வாழ்பவனின் வருமானம் 18 மடங்கு அதிகமாகவுள்ளது. இது 1960களில் 13.3 மடங்காக மட்டுமே இருந்தது.

Read more...

போல்போட் ஒடுக்கப்பட்ட மக்களினதும் உலகப்பாட்டாளிவர்க்க போராட்ட வரலாற்றிலும் மா. லெ. மாவோயிஸ்டாக இறுதிவரை போராடிய உறுதி மிக்கத் தலைவர். PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 19:23
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

99.9 வீதமான   செய்தி அமைப்பு ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும்  விடாப்பிடி யாகத் தொடர்ச்சியாக  போல்போட் டிற்கு எதிரான அவப் பிரச்சாரத்தை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.   கம்ப+ஜிய ஒடுக்கப்ட்ட மக்களின் தலைவராக  இருந்த போல் பொட் மிது  நடத்தப்படும் இச் சேறடிப்பு மூலம்  கம்ப+ஜிய மக்களின் வர்க்கப் போராட்ட வரலாற்றையும்  அதன் வீரம் மிக்க போராட்ட வரலாற்றையும்  அதன் வீரம் மிக்க போராட்டத்தையும் நசுக்கிவிட முடியும் எனக் கனவு காண்கின்றனர்.  இந்த வகையில் பாட்டாளிவர்க்க அணிகளும் தமக்கான அணிகளை ஊடுருவி இனம் கண்டு  உருவாக்கிய தன் மூலம் கட்சிகளும்  உள் முரண்பாட்டை மூட்டிவிட்டனர். இதன் தொடர்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் நடந்த உட்கட்சி மோதலின் பின்   பாட்டானிவர்க்க அணிகள் ஒடுக்கப்பட் டன. இந்நிலையில் போல்போட் உட்பட முன்னணி பாட்டாளி வர்க்க  தலைவர்களைக் கைது செய்துள்ள  கட்சியின் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ அணிகள்   போல்போட்டை அமெரிக்க ஏகாதிபத்திய செய்தி நிறுவனமும்  முன் 18 வருடத்தில் பின் நிறுத்தி தமது    பிரச்சாரம் செய்கின்றனர்.

Read more...

கேள்வி பதில் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 19:17
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

சமரானது கேள்வி-பதில் பகுதி ஒன்றை தொடர்ச்சியாக வெளியிட உத்தேசித்துள்ளது. உங்கள், எங்கள் கேள்விகளை, கேள்விக்கு உட்படுத்தி, எமது சமுதாய அறிவை உயர்த்துவது என்ற அடிப்படையில் வெளிவரும் இப்பகுதிக்கு, உள்கள் கேள்விகளையும் சமர் வெளியிடவும் பதில்தரவும் தயாராகவுள்ளது. நண்பர்களே எழுதி அனுப்புங்கள்.

Read more...

ஏகாதிபத்தியத்துடன் நடக்கும் சிங்கள இனவெறி தாக்குதல் தேசிய விடுதலைப்போரை முட்டுச் சந்திக்கு நகர்த்தியுள்ளது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 19:14
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

தமிழ் இன அழிப்பை சந்திரிகா அரசு  தலைமையில் வேகப்படுத்தும் வகையில் சமாதானத்திற்கான யுத்தம் என கூறிய படி சிங்கள் இனவெறி காட்டுத்தாபார் கட்டவிழ்த்து விட்டுள்ளது. யாழ் நோக்கிய முன்னேற்றத்தாக்குதல்கள்  தமிழ்மண்ணை மேலும் மேலும்  கூறு போடுதல் பொருளாதாரத்தடை , கலாச் சாரச்சிதைவு, பெண்கள் மீதான பாலி யல் வன்முறைகள் ,  சொத்துக்களை எரித்து சுடுகாடாக்குவது என என்ன வெல்லாம்  செய்ய முடியுமோ எல்லாவற்றையும்  தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது சிங்கள இனவாதிக ளால். பெண்களைப் பாலியல்வதைக்குட் படுத்திவிட்டு புலிகளின் உறுப்பினர்க ளாக்குவது, சிறையில் தள்ளுவது , காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ப்பது, மோதலில் இறந்தவர்களாக் குவது புதைப்பது, பெண்உறுப்புக்குள்ளே குண்டுவைத்துத் தகர்ப்பது, எனத் எதைச் செய்ய முடியுமோ அதையெல்லாம் ஆணாதிக்க இனவெறியர்கள் கையாளுகின்றனர். இதை விசாரிக்க ஜனாதிபதி சந்திரிகா வின் ஆணைக்குழு ஆணாதிக்கவாதிக ளைப்பாதுகாக்க இனவாதிகளை நியா யப்படுத்துபவர்களாக அப்படியெதுவும் நிகழவில்லை  அல்லது தாமாகவே நிகழ்ந்தன என அறிக்கை எழுதிக் குவிக்கின்றன.

Read more...
Last Updated ( Sunday, 08 July 2012 19:23 )

துருக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் ஈராக்கில் புகுந்து நடத்திய படுகொலைகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 19:11
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

குருஷ்டிஷ்தான் தொழிலாளர் கட்சியை அழிக்கும் நோக்கில் துருக்கிய  பாசிச இராணுவசர்வாதிகாரிகள் தமது எல்லையைக் கடந்து ஈராக்கினுள் புகுந்து  தாக்குதலை நடாத்தி 998 பேருக்குமேல் படுகொலை  செய்துள்ளதுடன்,  தொடந்து ஆக்கிரமிப்பை நடாத்திவருகின்றனர்.

Read more...
Last Updated ( Sunday, 08 July 2012 19:22 )

ஏற்றத்தாழ்வை போற்றுவது அது அழகியலாக இருந்தாலும் இவை இன்றைய உலகத்தின் ஆளும் வர்க்கத்தின் கோட்பாடே! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 19:08
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

சரிநிகர் 122 இல் ''ஆணில்ப+த்த கலாப+ர்வமும் முகிழ்த்த ரசனையும்'' என சுவீஸ்  ரவீந்திரன் ஒரு விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார்.   அதில் வரும் மார்க்சிய விரோத கருத்துத் திணிப்பபை அம்பலப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரையை சமரில் எமுதுகிறோம்.   சரிநி கர்   திட்டமிட்டு எமது கருத்தை பிரசுரிக்க மறுத்து வருகின்ற நிலையில், எமது கருத்தை சரிநிகரில் எழுதமுடி யாத நிலையிலேயே  நாம் இதனை சமரில் எழுதுகின்றோம். நாம் அனுப்பிய பல கட்டுரைகள் இதுவரை பிரசுரிக்கப்  படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...
Last Updated ( Sunday, 08 July 2012 19:22 )

உலக வங்கி தீர்மானிக்கும் விலை அதிகரிப்புப் பற்றி.......... இலங்கை அமைச்சர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 19:03
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதித் தலைவர் சு.று.ஆவ விNதிலக்கா நீர், மற்றும் தொலைபேசி விலை உயர்வு தொடர்பாக குறிப்பிடும் போது, உலக வங்கியின் கட்டாயப்படுத்தலாலே இந்த விலை அதிகரிப்பு என்று குறிப்பிட்டு, இந்த அதிகரிப்பை கடந்த வருடமே அமுல்படுத்த கோரியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார். அமச்சர்களின் இழுத்தடிப்புத்தான் இந்த ஏப்பிரலில் அமுலுக்குவர காரணமென்று வேறு அறிவித்தார். இன்று அமைச்சர், அரசுக்கு மீறிய அரசாக உள்ளது. உலக வங்கியே ஆகும். இதன் இயக்கம் அமெரிக்காவின் கையில் உள்ளது.  ஏகாதிபத்தியங்கள், உலக வங்கி ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஏழையாக்கியும் பணக்காரரை மேலும் பணக்காரனாக்கும் இன்றைய உலக சனநாயகத்தை உடைக்காதவரை மக்களுக்கு சனநாயகம் இல்லை என்பதை இது காட்வில்லையா? இது உங்கள் மூளைகளில் உறைக்கவில்லையா?

Read more...

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தம் இலங்கைக்கு ஒரு மாற்று அல்ல PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 19:00
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தத்தை இலங்கையில் இனப்பிரச்சனைக்கு மாற்றாக முன்வைக்கக் கோரி பல வேறுபிரிலும் முன் தள்ளப்படுகிறது. இஸ்ரேல் பலஸ்தீனம் வழியில்  ஈழப் போராட்டத்தைக் கைவிடப் புலிகளைக் கோருகின்றனர். இந்த வேண்டுகோளை இலங்கை வந்த அரபாத் கூடவிட்டு வைக்கவில்லை.

Read more...
Last Updated ( Sunday, 08 July 2012 19:21 )

போலந்து போலிக் கம்யூனிஸ்டுக்களின் அம்பலமாகும் சுய உருவம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 18:59
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

மாவோ சொன்னார் '' பொருட்களின் சாராம்சத்தை உள்ளடக்கத்தில் தேடவேண்டும்  உலுவத்தில் அல்ல'' என்றார். ஆம் போலந்து போலிகள் உருவத்தில் கம்யுனிஸ்ட்டுக்கள்  .உள்ளடக்கத்தில் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள். உலக பன்னாட்டு நிறுவனத்தின் எடுபிடிகலாக வலம்வரும் இந்தப்பிரதிநிதிகள்  கம்யுனிசத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்க முயலும் கயவாளிக ளே.

ஜனநாயகத்தை மீட்ட அதாவது கொள்ளையடிக்க கதவுகளைத் திறந்த,  வலேசவுக்கு எந்த விதத்திலும் தாம் சளைத்தவர்கள் அல்ல, என்பதைப் போலிகள் உலகளவில் இனம் காட்டத் தீவிரமாக அலைந்தனர். அலைகின்றனர்.

மக்களை விட கொள்ளையடித்தவனைக் திருப்த்ப்படுத்தும் இந்தப் போலிகளையிட்டு,  பிரஞ்சு போலிக் கம்யுனிஸ்ட் டுக்கள்  இவர்களை '' சமூகசனநாயக வாதிகள் '' எனக் குற்றம் சாட்டி தம்மைப் பாதுகாக்க முனைந்தனர்.

அண்மையில் உலகை இரட்சிக்க வந்ததாக கூறிக்கொள்ளும் போhப் பாண்டவர் விஜயம் செய்தபோது போலிகள்; ஓடோடி வந்து கைகோர்த்தனர். எமது குறிக்கோளும் ஆண்டவனின் குறிக்கோளும் ஒன்றுதான் என பிரகடனம் செய்தனர். உலகை எப்படிக் கொள்ளையடிக்கலாம்  மக்க ளை எப்படி எப்படி ஏமாற்றலாம்  என்பதில் கருத்து முரண்பாடு இல்லையென  பிரகடனம் செய்தபடி தமது நோக்கத்தைத் தெளிவுபட விளக் கினர்.

ஆம் கம்யுனிச ஜனநாயக விரோதமா னது எனக் கூறி, மக்களின் அடிப்படை வசதியைக் கோருவது பயங்கரவாதம் என அறிவித்து, சிலர்  வாழும் வாழ்வு இறைவனின் கொடை என்றனர்.

அதை நிறைவு செய்ய முன்பு வலேசா மூலம் போப்பாண்டவர் நேரடியாகப்  போலந்தில்  இரகசியக் குழுக்களை அமைத்தும்,  அச்சகங்களை நிறுவியும்  இரகசிய அரசொன்றை நடாத்திய, இந்தக் கும்பல் தான் உலகை மீட்க வந்த இரட்சகர்களாகப் பிரகடனம் செய்கின்றனர்.

அதேவகையில் போலிக்கம்யுனிசக் கட்சியும்  தனது எல்லாவித புரட்சிகரக் கோசங்களையும் கைவிட்டு  விபச்சாரத் தில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. இந்தத் துரோகத்தை நாம் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோமா அல்லது எதிர்த்துப் போராடப் போகிறோமா என்பது எம்முன்னுள்ள ஒரேஒரு கேள்வி.

Read more...
Last Updated ( Sunday, 08 July 2012 19:21 )

சிவசேகரம் தேடும் நடுநிலைக் கோட்பாடு பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரானது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 July 2012 18:58
பி.இரயாகரன் - சமர் / சமர் - 22 :11 - 1997

சரிநிகர் 109 இல் ( நவம்பர் 07 நவ 20 ) புதியஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த சிவசேகரம் மூன்றாம் உலகில் சோவியத் தலையீட்டையொட்டி கூறுவதைப்பார்ப்போம்.

"சோவியத்ஒன்றியம் ஒரு சமுக ஏகாதிபத்தியம் என்ற  கருத்து எனக்கு உடன்பாடான ஒன்றல்ல. அது மூன்றாம் உலக நாடுகளின் ஒரே இரட்சகன் என்ற விதமான கருத்து. அதே அளவுக்கு நிராகரிக்கத்தக்கது." என சிவசேகரம் கூறுகிறார்

அப்படியாயின் தமிழ் தேசியவிடுத லைப்போராட்டத்தில் இந்தியத் தலையீட்டை  ஒரு பிராந்திய ஆதிக்க சக்தி என்பதிலும் உடன்பாடில்லை. இந்தியா தேசியவிடுதலைப்போரின் ஆதரவாளர் என்பதிலும்   உடன்பாடில்லை என்ற கூற்றுக்கு ஒப்பானது.

அப்படியாயின் அது என்ன? இந்தியா ஒரு பிராந்திய ஆதிக்க சக்தி என்பதை  எப்படி மறைக்க சிலர் முனைகின்றனரோ அதேபோல் சோவியத் ஒரு சமூக ஏகாதிகத்தியம் என்பதை மறைப்பது சிலருக்கு  அவசியமாகவுள்ளது.

சீனாவில் மாவோவை மறுத்ததைத் தொடர்ந்து  இவர்களும் ( சிவசேகரம் மற்றவர்களும் ) மறுக்கின்றனர். அதன் காரணத்தால்  மாவோவும் சில கொம்யுனிஸ்ட்டுக்களும்  கலாசட்சாரப் புரட்சி எதற்காக தொடங்கினரோ அதை மறுத்துப் புதிய ஜனநாயககட்சியும்  சிவசேகரமும் அடிப்படை வர்க்க முரண்பாட்டை  மறுதலிக்கின்றனர். அதனால் தான் சோவியத் சமூகஏகாதிபத்தியமாக இருந்ததை மறுத்து இரண்டுக்கும் இடைப்பட்ட  ஒரு வடிவம் தேடுகின்றனர்.

அதாவது தமது அரசியல் பிழைப்புவாதத்துடன்  வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட ஒரு வடிவம் தேவை. அதற்கு ஒரு கோட்பாடு தேவை,  அது இரண்டுமல்லாத ஒன்றாகக் காட்டுவதான் தமது இருப்பை  தக்கவைக்க உதவும் என்ற கனவு.

Read more...

Page 1 of 2