Sat02222020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
June 2010

Wednesday, 30 June 2010

இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 30 June 2010 11:42
பி.இரயாகரன் - சமர் / 2010

தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே அர்த்தமற்றதாக்கி விட்டது. அண்ணளவாக 25000 பேர், அதாவது நேரடியாக இராணுவத்துக்கு எதிரான போராட்டத்திலும் உள் இயக்க ஜனநாயக போராட்டத்திலும் மாற்றியக்கப் படுகொலைகள் (துரோகத்துக்கு முன்பாக) என்று, நேரடியான போராட்ட நடவடிக்கையில் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். 150000 முதல் 250000 மக்கள் இராணுவ அழித்தொழிப்பு, மற்றும் இயக்கப் படுகொலைகள், இனப் படுகொலைகள் என்ற எல்லைக்குள் தம் உயிரை இழந்துள்ளனர்.

Read more...
Last Updated ( Thursday, 01 July 2010 10:13 )

செம்மொழி மாநாடும் நானும் – மாநாட்டு சிறப்பு புகைப்படங்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 30 June 2010 06:11
அரசியல்_சமூகம் / கலகம்

அவசர அவசரமாய் பேருந்து நிலையத்திற்குள் சென்றேன்.முந்தைய நாள் பயணக்களைப்பின் காரணமாக தாமதமாகிவிட்டது. பேருந்துகள் வரிசையாய் கோயம்புத்தூருக்கு நின்றிருந்தன. நான் நோட்டம் விட்டேன். மூன்று பேருந்துகள் கழித்து “உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு பேருந்து ” ஒன்று மிக மிக பரிதாபமாய் நின்று கொண்டிருக்க, அதில் ஏறி உட்கார்ந்தேன். செம்மொழி மாநாட்டிற்கு பயணக்கட்டணம் 5 ரூபாய் என்றும் அருகிலிருந்தவர் சொன்னார். சரி 23 ரூபாய் மிச்சம் என்றபடி அந்த டப்பாவில் ஏறி அமர்ந்தேன். என்ன செய்வது 23 ரூபாய் சம்பாதிப்பது சாதாரண விசயமா என்ன?

Read more...
Last Updated ( Wednesday, 30 June 2010 06:14 )


Tuesday, 29 June 2010

பேரினவாத புலி கே.பி. மூலம், புலம்பெயர் நாட்டில் முன்நகர்த்தும் மற்றொரு அரசியல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 29 June 2010 09:05
பி.இரயாகரன் - சமர் / 2010

அரச நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்ட பல புலம்பெயர் நிகழ்வுகள் ஏற்கனவே உள்ளது. அதனுடன் கே.பி ஊடான புதிய நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது. தேசம்நெற்றின் லிட்டில் எய்ட் எப்படியோ, அப்படித்தான் இதுவும். தலித், கிழக்கு என்று எத்தனை வேசம் போட்டாலும், அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் தான் அனைத்தும் அரங்கேறுகின்றது. இதுதான் கே.பி ஊடானதும் கூட. வேறுபாடு கிடையாது.     

Read more...
Last Updated ( Tuesday, 29 June 2010 09:08 )

சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 29 June 2010 07:33
பி.இரயாகரன் - சமர் / 2010

இலங்கையில் இனவாதம் என்பது காலனித்துவ வரலாற்றுடன், வரலாற்று தொடர்ச்சியுடையது. பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் இலங்கையை தமது ஆக்கிரமிப்பின் ஊடாக அடிமைப்படுத்தியிருந்தனர். செல்வத்தையும் உழைப்பையும் சூறையாடிய வரலாற்று வளர்ச்சியிலேயே, இந்த இனவாத நாற்று பிரித்தாளும் தந்திரம் மூலம் ஊன்றப்பட்டது. தேசிய வளங்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்வை பறித்தவர்கள், மக்களின் கோபத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. கோபம் போராட்டமாக வளர்ச்சி பெற்றபோது, அதற்கு தலைமை தாங்கிய பிரிவுகள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்களுடன் நின்று போராடுவதற்கு தயாராகவிருக்கவில்லை. அவர்கள் போராட்டத்தை நடத்துவதாக காட்டியபடி, பிரிட்டிஸ் அரசுடன் கூடிக்குலாவியபடி நக்கித் திரிந்தனர்.

Read more...
Last Updated ( Tuesday, 29 June 2010 07:37 )


Monday, 28 June 2010

திருமணங்கள் “சொர்க்கத்தில்” நிச்சயிக்கப்படுகின்றன என்கின்றார்கள். இலங்கையில் அதை பொலிசார் நிச்சயிக்கின்றார்கள்! - செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 21-06-2010 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 28 June 2010 19:25
அரசியல்_சமூகம் / அகிலன்

இவ்வுலகில் போராட்டம் தவிர வேறும் பல உள்ளன –கோத்தபாய

புனர்வாழ்வு அளிப்பதன் மூலம், புலி உறுப்பினர்களுக்கு சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வெலிகந்த சேனபுர புனர்வாழ்வு மையத்தில் வீட்டு மின்சாரப் பொறியியல், மேசன்வேலை, தச்சுவேலை, நீர்க் குழாய் பொருத்துதல் போன்ற பல்வேறு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 300-ற்கு மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டள்ளன. இந் நிகழ்விலேயே கோத்தபாய மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார்.

Read more...
Last Updated ( Monday, 28 June 2010 19:35 )

மழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்…… PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 28 June 2010 09:05
அரசியல்_சமூகம் / கங்கா

தொட்டில் அற்று தூக்கம் அற்று
தோள்கிடத்தித் தட்டித் தூங்க வைக்க நாதியற்று
வெட்டியபதுங்கு குழியும் விழும்குண்டால் இடியும்
மடியில் பொத்திய மழலைகள் வீரிட்டு அலறும்
கத்திடும் அவலக் குரல் ஜயோ என்று
காத்திடும் எந்தமீட்பன் காதையும் எட்டவில்லை

Read more...

Last Updated ( Monday, 28 June 2010 09:06 )

ஆரிய பாடல்களோ கொள்ளையிட்டு வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது : சாதியம் குறித்து பாகம் - 08 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 28 June 2010 05:38
பி.இரயாகரன் - சமர் / 2010

வேத ஆரிய மக்களின் இருப்பு, மற்றைய சமுதாயத்தை கொள்ளையிட்டு வாழ்தல்தான். இதற்கு மாறாக அவர்கள் கால்நடைகளை வளர்த்த நாடோடிச் சமூகம் என்பது, முற்றிலும் தவறான ஒரு எடுகோள்.

வேத-ஆரியச் சடங்குப் பாடல்கள் எதைக் கோருகின்றது? அது உழைத்து வாழும் மக்களின் உழைப்பு பாடல்களல்ல. அதுபோல் உழைப்புப் பற்றிய சடங்குகளுமல்ல. உழைப்பை வளப்படுத்தக் கோரிய சடங்குகளுமல்ல. மாறாக கொள்ளையடிக்கும் யுத்தவளத்தையும், அந்த ஆற்றலையும் கோரிய சடங்குகளையே, ஆரிய-வேத பாடல்கள் வெளிப்படுத்;தி நிற்கின்றது.

Read more...
Last Updated ( Monday, 28 June 2010 05:42 )


Sunday, 27 June 2010

சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 27 June 2010 09:00
பி.இரயாகரன் - சமர் / 2010

சமஸ்கிருதம் வேதகால ஆரிய சடங்குகளை செய்யக் கூடியவர்களின் மொழியாகியது. ஆரிய வழிவந்த பூசாரிப் பிரிவுகள் சமூகத்தில் சிதைந்த போதும், சமுதாயத்தில் சுரண்டும் சமூக அமைப்பின் தேவையுடன் உருவான மதங்கள் ஆரிய பூசாரிகளுக்கு புத்துயிர் அளித்தது. தம் பூசாரித் தன்மையூடாக, தனிச்சலுகை பெற்றவராக மாறினர். இந்தியச் சமூக அமைப்பில் அவர்கள் ஒரு சலுகைக்குரிய சுரண்டும் வர்க்கமாக, தனிச் சலுகையுடன் நீடிக்கத் தொடங்கினர். தனிச்சொத்துரிமை அமைப்பில் தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், இதற்கு மூலமாக இருந்த மந்திரத்தை இரகசியமாக பேணவும் முனைந்தனர். தமது பழைய மொழியின் சிதைவில் இருந்தும், அவர்கள் சிதைந்து வாழ்ந்த புதிய மொழியில் இருந்தும் உருவாக்கிய ஒரு மந்திர மொழியான சமஸ்கிருதத்தை, பார்ப்பனர் சுரண்டி வாழ உதவியதால் அதை இரகசியமாக்கினர். அதை தமக்குள், தம் சாதிக்குள் தக்கவைத்தனர். இந்த மொழி தான் சமஸ்கிருதம்.

Read more...
Last Updated ( Sunday, 27 June 2010 09:13 )


Saturday, 26 June 2010

பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 26 June 2010 11:12
பி.இரயாகரன் - சமர் / 2010

யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனந்தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கை கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலிகளின் வதைமுகாமில் இருந்து, 16.7.1987 மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை விரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.

Read more...
Last Updated ( Saturday, 26 June 2010 11:16 )


Friday, 25 June 2010

நக்சல் சவால் – புத்தகப்பார்வை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 25 June 2010 19:02
அரசியல்_சமூகம் / கலகம்

மொட்டைத்தலையன் விகடன் பிரசுரம் சார்பில் கடந்த செப்டம்பர் 2009 வெளிவந்த புத்தகம் தான் நக்சல் சவால். தண்டகாரண்யா பகுதிகளில் அரசு நடத்தும் போருக்கு முன்னோடியாக வெளிவந்த புத்தகம். 200 பக்கங்களுடைய இப்புத்தகம் மிகவும் எளிய மொழி நடையில் ஆளும் வர்க்க கருத்துக்களை சுமந்து வந்திருக்கிறது. உலக அளவில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை என்ற வழிமுறையே தீவிரவாதம் என்ற அளவில் ஆளும் வர்க்கத்தின் மிகச்சிறந்த பிரச்சாரக்கருவி இது. முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி கேட்டால் தனது வாயை முடிக்கொள்ளும் ஆளும் வர்க்க ஊடகங்கள் நக்சல்பாரிகள் மீதும் மாவோயிஸ்டு இயக்கத்தினரின் மீதும் அவதூறினை அள்ளி வீசுகின்றன.

Read more...
Last Updated ( Friday, 25 June 2010 19:04 )

Page 1 of 13