Thu11212019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 24 June 2010
எம்மை புதைக்க, நாம் வெட்டிய குழி – (புளாட்டில் நான் பகுதி 14) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 24 June 2010 23:15
அரசியல்_சமூகம் / சீலன்

தோழமைக்கு இலக்கணம் வகுத்த அந்தத் தோழர்களில் ஒருவர், காவற்கடமையில் இருக்கும் போது எம்முடன் கதைத்ததை சசியும் வளவனும் கண்டனர். உடனே அத்தோழரை அழைத்து என்ன கதைத்தாய் என விசாரித்துவிட்டு, அவருக்கு தண்டனை வழங்கினர். முகாமில் உள்ளவர்கள் எம்முடன் கதைத்தால், இவ்வாறு தான் அவர்களுக்கும் நடக்கும் என்று வளவன் முகாம் தோழர்களை எச்சரித்தான். இதனால் ஒரு சில நாட்களாக, முகாம் தோழர்கள் எம்முடன் கதைக்க பயந்தார்கள். இருப்பினும் எம்மை வெளியில் அழைத்துச் செல்லும் போது, அவர்கள் எம்முடன் கதைத்தார்கள். இவர்களில் பலரிடம் எமது சொந்தப் பெயர், ஊர் விலாசம் என்பவற்றை கூறிவைத்தோம். காரணம் எம்மை எந்த நேரத்திலும் கொன்று புதைத்து விடுவார்கள் என்ற ஜயப்பாடு, எமக்கு இருந்தது.

Read more...
Last Updated ( Thursday, 24 June 2010 23:43 )

உங்களைச் சுட்டி விரலை நீட்டினால் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 24 June 2010 14:06
அரசியல்_சமூகம் / சிறி
உங்களைச் சுட்டி
விரலை நீட்டினால்
கல்விமான் என்ற
கவசம் காக்கும்.
ஆங்கிலம் எமக்கோ
அன்னிய மொழி தான்
அன்னை ஊட்டிய பாலொடு
பருகிய தமிழும் கூட
வேசி மொழியாமே
 
Last Updated ( Thursday, 24 June 2010 14:12 )

போலி "ஊடகவியலாளர்" கேட்க, போலி "மார்க்சிய" பேராசிரியர் சொன்னதுதான் என்ன? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 24 June 2010 09:53
பி.இரயாகரன் - சமர் / 2010

அறிவு, நாணயம், உண்மை என அனைத்தையும் அடகுவைத்த பின், இருவர் பேசிக்கொண்டது தான் தேசம்நெற்றில் வெளிவந்துள்ளது. என்னவோ தெரியவில்லை, தேசம்நெற்  எமக்குள் பரிமாறிய ஈமெயிலை எப்படி பெற்று வெளியிட்டதோ, அதே வழியில் இப் பேட்டியும் வெளிவந்துள்ளது ஆச்சரியமானதல்ல. அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாது தேசம்நெற் என் பெயரில் கூட ஈமெயில் தயாரித்து, அதை வெளியிட்டு அம்பலமானது பழைய கதை.

இந்த வகையில் பேராசிரியர், "ஊடகவியலாளர்" என இருவர் சேர்ந்து, எம்மை எதிர் கொள்ளுகின்றனர். சம்பவத்தை திரித்து புரட்டுவதன் மூலம், கதை சொல்லுகின்றனர். கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் இணைந்து நேராவது போல், இங்கு கேள்விகள்  பதில்கள் மூலம் தங்களை நேராக்கிக் காட்ட முனைகின்றனர்.    

Read more...
Last Updated ( Thursday, 24 June 2010 10:13 )