Sat02222020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 20 June 2010
வலதுசாரிய (புலி) ஏகாதிபத்திய சார்பு அரசியலை மறுக்கும் "மார்க்சிய" சண்முகரத்தினம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 20 June 2010 09:28
பி.இரயாகரன் - சமர் / 2010

நடந்த போராட்டம் என்ன என்று கூறாது, "மார்க்சியம்;" மூலம் அதை "தமிழ் மக்களின் போராட்டம்" என்கின்றார். "மார்க்சியம்" பேசிய பேராசிரியர் சண்முகரத்தினம். புலியிசம் பேசுகின்ற அரசியல்தளத்தில் நின்று தான் இதை இன்று உரைக்கின்றார். புலியையும், இதன் வலதுசாரிய அரசியல் அடித்தளத்தையும், அதன் ஏகாதிபத்திய ஓட்டுண்ணித்தனத்தையும் காப்பாற்ற, சண்முகரத்தினம் என்ற "மார்க்சிய" சந்தர்ப்பவாதி தன் முற்போக்கு வேட்டியை கோமணமாக்கிக் கொண்டு புதிதாக களத்தில் இறங்கியுள்ளார்.

Read more...
Last Updated ( Sunday, 20 June 2010 17:32 )

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 20 June 2010 05:50
புதிய ஜனநாயகம் / 2010

அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை - நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு - தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்ற தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பொது உளவியலை, பளிச்சென்று காட்டுகிறது.

Read more...
Last Updated ( Sunday, 10 February 2013 10:41 )