Sat02222020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 10 June 2010
மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும் (புளாட்டில் நான் பகுதி - 12) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 10 June 2010 21:21
அரசியல்_சமூகம் / சீலன்

தோழர் தங்கராஜாவை எம்மிடமிருந்து பிரித்தனர். அவரை முகாம் பொறுப்பாளர்களுடன் தனியாக களஞ்சியசாலையில் தங்க வைத்தனர். அன்று பகல், பாதி மயக்கத்துடனும் உடல் உபாதைகளுடனும் நாம் எல்லோரும் அவதிப்பட்டோம். இரவானதும், மீண்டும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. அன்றிரவு வாமதேவன், செந்தில், பாபுஜி, மாணிக்கதாசன் இன்னும் இருவர் வந்தனர். வந்தவர்களோ, எம்மை வெளியே வரும்படி கத்தினர். நாங்களோ நடக்க முடியாமல் இருந்ததால், அரக்கி அரக்கி வெளியே சென்றோம். மீண்டும் அடிக்க ஆரம்பித்தனர். வந்தவர்கள் எம்மை மனிதர்களாகவே நினைக்கவில்லை. ஏன் மிருகங்களுக்குக் கூட அன்பு காட்டியிருப்பார்கள் ஆனால் அவர்கள் எம்மை வெறுக்கத்தக்க துரோகக் கும்பலாகவே கணித்தார்கள். அதற்கேற்றாற் போல் ஈவு இரக்கமின்றி எம்மை நடத்தினர். மக்கள் அமைப்பு என்றார்கள், மக்களுக்கான விடுதலை என்றார்கள், மாணவர்களை அணிதிரட்டினார்கள். ஆனால் அதற்காக புறப்பட்டவர்களை கொல்லவும் செய்தார்கள். இதுதான் இவர்களின் விடுதலைப் போராட்டமாகவும் இருந்தது.

Read more...
Last Updated ( Thursday, 10 June 2010 21:36 )

மக்கள் குரலை ஒட்டக்கருவறுக்கும் கூட்டு…….. PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 10 June 2010 19:14
அரசியல்_சமூகம் / கங்கா

சொந்த நிலமென்று அம்பெடுத்து எய்யாதே
சொற்கேட்டு கற்பாறையில் போய் உட்காரு
எப்படி முடியுமென்று எழுவதாயின்
இலங்கைத் தமிழன் இரத்தம் உறையாத கரங்களை
உயர்த்திச் சொல்கிறது இந்தியப்பேய் அடங்கிப்போ………

Read more...
Last Updated ( Thursday, 10 June 2010 19:17 )

திருமணத்தில் இனவாதத்தைத் திணிக்கும் பிரிட்டிஸ் அரசு PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 10 June 2010 08:43
பி.இரயாகரன் - சமர் / 2010

தனிமனிதனிடம் "காதலை", "திருமண பந்தங்களையும்" வடிகட்ட கோருகின்றது. நிபந்தனை போடுகின்றது. நீ நிபந்தனை பூர்த்தி செய்யாவிட்டால் சேர்ந்து வாழமுடியாது என்கின்றது. இப்படியொரு கொடுமையான பிரிட்டிஸ் சட்டம். தனிமனித உரிமைகளை மறுக்கும் சட்டம். நீயே அதை செய், இல்லையென்றால் சட்டப்படி சேர்ந்து வாழ இடமில்லை என்கின்றது. 

அது என்னடா சட்டம் என்றால், ஆங்கிலம் தெரியாதவர்களை நீங்கள் திருமணம் செய்யக் கூடாது என்கின்றது. அப்படிச் செய்தால் அவர்கள் சேர்ந்து வாழ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டம் போட்டு சொல்லுகின்றார்கள். அன்று செவ்விந்தியர்களைக் கொன்றால் தலைக்கு இவ்வளவு பணம் என்று சட்டம் போட்ட ஆண்ட பரம்பரை இது. அன்று ஆண், பெண், குழந்தை, செவ்விந்திய பிரிவுகளை வகைப்படுத்தி, ஒவ்வொரு தலைக்கும்  இவ்வளவு என்று கூறி, கொன்று குவித்ததற்கு பணம்கொடுத்து இதில் கொழுத்த பரம்பரைதான், இந்த சட்டத்தைப் போடுகின்றது.

Read more...
Last Updated ( Thursday, 10 June 2010 08:46 )

நாங்கள் தாகமாய் இருந்தோம். நீர் நஞ்சு தருகிறீர். -விஜயகுமாரன் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 10 June 2010 06:24
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

நக்கீரன் இதழில் ஜெகத் கஸ்பர் எழுதும் மறக்க முடியுமா? என்ற தொடரில் அள்ள அள்ளக் குறையாத பொய்களை தொகுத்து தருகிறார். “உலகம் ஆறு நாட்களில் படைக்கப் பட்டது ஏழாவது நாளாகிய ஞாயிற்றுக்கிழமை இறைவன் ஓய்வெடுக்கின்றார” என்ற உலகப் பெரும் பொய்யை சொல்லிக் கொண்டிருப்பவருக்கு, ஈழத்தைப் பற்றிய பொய்களை அவித்து விடுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. ஆனால் பல மில்லியன் வருடங்களை கடந்த உலக வரலாற்றை ஆதாரங்கள் எதுவும் இல்லாத கிறிஸ்துவின் பிறப்பினை வைத்து முன் பின் என அளப்பது போல், எமது காலத்தில் எமது கண் முன் நடக்கின்ற ஈழப் போராட்டத்தினை வைத்து கதையளக்க முடியாது. இந்தப் பாதிரியார் பற்றி வினவு தளத் தோழர்கள் மிக விரிவாக அம்பலப்படுத்தி இருந்தார்கள். ஆனால் கத்தோலிக்க மதத்தினது கற்பனைகளை பரப்புவது போல் ஈழம் பற்றிய பொய்களை கூச்சமின்றி பரப்பி வருகின்றார்.

Read more...
Last Updated ( Thursday, 10 June 2010 05:58 )

இது பதினோராவது தாள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 10 June 2010 05:51
அரசியல்_சமூகம் / கலகம்

உண்மையில் நான்
என்னதான் எழுதப்போகிறேன்
இது பதினோராவது தாள்

Read more...
Last Updated ( Thursday, 10 June 2010 05:57 )