Sat02222020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 06 June 2010
மகிந்த எடுபிடிகள், றமேஸ் சிவரூபனை மறுபடியும் கொன்ற குரூரம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 06 June 2010 19:25
பி.இரயாகரன் - சமர் / 2010

கொன்றவனை மறுபடியும் கொல்லும் குரூரம், மகிந்த சிந்தனையில் தான் எழுகின்றது. பாரிய மனிதப் படுகொலைகள் மூலம் போர்க்குற்றத்தைச் செய்த கூட்டம், செய்யாத கொலையைச் செய்ததாக மற்றவன் மேல் பழி சுமத்துகின்றது. முறைகேடான சமூக விரோத பேரினவாத அரசியல், இப்படித்தான் புலத்தில் அரங்கேறுகின்றது. பேரினவாத பாசிசம் உண்மைகளை புதைப்பதும், பொய் புரட்டுகளில் அரசியல் செய்வதைத் தவிர, அதற்கு வேறு எந்த அரசியல்  வழியுமிருப்பதில்லை. தமிழ்மக்களின் உரிமைகளை வழங்கி, புலியை எதிர்கொள்ள அரசியல்  அதற்கில்லை.

Read more...
Last Updated ( Sunday, 06 June 2010 19:27 )

புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 06 June 2010 19:13
அரசியல்_சமூகம் / ஐயர்

விடுதலைப் புலிகள் அமைப்பினுள் ஜன‍‍நாயகம் ஏற்பட வேண்டும் என்பதில் மிகுந்த‌ அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயற்பட்டவர்களில் மனோமாஸ்டர், அழகன், நந்தன், மாத்தையா,சுந்தரம் ஆகியோரைக் கோடிட்டுக் காட்டலாம் . இவர்கள் புலிகளின் உள்ளே ஜனனாயக வெளி ஒன்றை ஏற்படுத்துவதே முதலாவதும் முக்கியமானதுமான தேவை என்பதைக் குறித்துக் காட்டியவர்கள். மனோமாஸ்டர் ஓரளவு தெளிவான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஏனைய உறுப்பினர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதிலும், ஆர்வத்தை உருவாகுவதிலும் இவரின் பங்கு அளப்பரியயதாக அமைந்திருந்தது. மனோமாஸ்டர், புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பதாகவே இடதுசாரி அரசியலுடன் பரீட்சயமானவர்.

Read more...
Last Updated ( Sunday, 06 June 2010 19:12 )

வினவுவை எதிர்ப்பவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்ன? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 06 June 2010 07:08
பி.இரயாகரன் - சமர் / 2010
வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையே எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு என்பது பொதுவானது. குறிப்பாக இந்த விடையத்தில் ஆணாதிக்கம் அம்பலமாவதைத் தடுத்து, ஆணாதிக்கத்துக்குள்ளேயே தீர்வைக் காட்ட முனைகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை, தமது வலைக்குள் கட்டி வைக்க முனைகின்றனர். இந்த வகையில் வினவுவை நோண்டி, இந்தா இதைப் பார் என்று தங்கள் ஆணாதிக்க வக்கிரத்தை மூடி மறைத்துக்கொண்டு காட்ட முனைகின்றனர். வினவு தளத்தைக் கடந்து, அதன் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். இந்த வகையில் வினவு தளம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்பதால், ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலமானதாக உள்ளது. இதனால் வினவுக்கான எதிர்ப்பு, பலமாக பல முனையில் வெளிப்படுகின்றது.
 
Last Updated ( Sunday, 06 June 2010 07:30 )