Tue02252020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 28 November 2008
திட்டமிட்ட பொருளாதார கொள்கையில் கூட திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:48
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

இலங்கையில் உலக வங்கியின் ஆதிக்கம் உள்ளுர் தேசிய செல்வங்களை முடக்குவது அல்லது தனியார் ஆக்குவது என்ற அடிப்படைக் கொள்ளையாகும்.

 

இந்த வகையில் வாழைச்சேனையிலிருந்த காகிதத் தொழிற்சாலை மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இங்கு தொழில் புரியும் 1350 தமிழ், முஸ்லீம் ஊழியர்கள் தமது வேலையை இழக்கும் அபாயத்திலுள்ளனர்.

 

தமிழ்பகுதியிலிருந்த மூன்று முக்கிய பெரிய தொழிற்சாலைகளான பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை என்பன மூடப்பட்ட நிலையிலும் இறுதியில் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையை மூடிவிட இனவாத சிங்கள அரசு முயல்கின்றது.

 

40 வருட பழமைவாய்ந்த இந்த தொழிற்சாலையை திட்டமிட்ட இனவாத சூழ்ச்சியில் கடந்தகாலத்தில் நலினப்படுத்தப்பட்டிருந்தபோதும் அங்கிருந்த பழைய இயந்திரங்களின் மூலம் ஊழியர்களின் சொந்த முயற்சியில் உச்ச உற்பத்தியைப் பெற்று வந்தனர்.

 

இந்த தொழிற்சாலையைக் கொண்டு கிடைக்கப்பெற்ற வருமானத்தில் கட்டப்பட்ட எம்பிலிபிட்டிய காகித ஆலை நட்டத்தில் இயங்கிய காலத்திலும் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை கைகொடுத்துப் பாதுகாத்தது.

 

இன்று திறந்த பொருளாதாரக் கொள்ளையின் ஒரு வடிவமான உலகமயமாதலின் தொடர்ச்சியில் காகிதம் மீதான சுங்க தீர்வையை அரசு ரத்துச் செய்வதன் மூலம் வெளிநாட்டுக் காகிதம் மலிவு விலையில் வெள்ளமாக இலங்கைக்குள் பாய்கிறது.

 

இதனால் அரச நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்கள் வாழைச்சேனைக் காகிதத்தை வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் வாழைச்சேனைக் காகித ஆலையில் உற்பத்தியான 3500 தொன் காகிதம் தேங்கி பாதுகாக்க வசதியின்றியுள்ளதுடன், மீள் உற்பத்தியாக சேமித்த காகிதமும் தேங்கத் தொடங்கியுள்ளது. மீள் உற்பத்தியைத் தடுக்குமாயின் அல்லது வெளிநாட்டு உற்பத்திக்கு மலிவு விலையில் செல்லுமாயின் இதைச் சேகரிக்கும் வறுமையிலுள்ள குடும்பங்கள் மேலும் பட்டினிச் சாவுக்கு நகர்த்தப்படுவர்.

 

இன்று உலகவங்கியின் கட்டளையை நிறைவு செய்ய அதுவும் அதைத் தமிழ்ப்பகுதியில் நடத்திவிட இனவாத அரசு தனது சிங்கள மேலாதிக்க நிலையில் நின்று செயல்படுகிறது. இன்று இலங்கையில் தேவை தமிழ் சிங்கள் மக்கள் இணைந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாகும். இதை விடுத்து தமிழ்ப்பகுதி என கண் மூடின் மறுபுறம் இருப்பதை இழப்பதற்கு முதல்காலடி எடுத்து வைப்பதாக இருக்கும்.

 

Read more...

உங்களுடன் சமர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:46
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

இன்றைய தமிழீழப் போராட்டத்தின் தேக்கநிலையும், இந் நிலைக்கு உரிமையுடைய பாசிச சக்திகளின் வளர்ச்சியை முறியடித்து ஒரு சரியான போராட்டத்தை முன்னெடுத்து நெறிப்படுத்த ஒரு தலைமையின் தேவை நம்மெல்லார் முன்னுமுள்ளது. இத் தேவையின் பிரதிபலிப்பாகவே ஜரோப்பிய நாடுகளில் பல சஞ்சிகைகளும், தனிநபர் கருத்துக்களும் வெளிவருகின்றன.

 

அனேகமான இச்சஞ்சிகைகளின் வெளியீட்டாளர்களும், தனிநபர்களும் கடந்தகாலப் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் பங்கு கொண்டவர்களாகவே உள்ளனர்.

 

இவர்களது தேடலும், விமர்சனங்களும் போராட்டத்தை விளங்கப்படுத்தி, நெறிப்படுத்த வேண்டும் என்பதே, சமூக நோக்கம் கொண்டவர்கள் அனைவரினதும் விருப்பபாகும்.

 

இன்று வெளிவரும் கருத்துக்கள் தொடர்பாகவும், குறித்த கருத்துக்களைச் சொல்பவர்கள் தொடர்பாகவும் சமர் கடந்த இதழ்களில் கருத்துச் சொல்ல முற்பட்டது. இக் கருத்துக்கள் தொடர்பாக விமர்சித்த பலரில் ஒரு சாரார் எம்முடன் கடந்தகாலங்களில் கொண்டிருந்த சாதாரண உறவைக் கூடத் துண்டித்துக் கொண்டனர். சமர் பற்றி ஆதாரமற்ற வகையில் வதந்திகளைப் பரப்பும் சக்திகளில் கணிசமான பங்கு மேற்குறிப்பிட்ட நபர்களுக்குண்டு. இவை பற்றி சமரின் நிலை யாதெனில், குறித்த எந்த விமர்சனத்தையோ வதந்தியையோ, எழுத்தில் முன்வைக்காது வெறும் திண்ணைப் பேச்சோடே முடிந்து விடுவது ஆரோக்கியமான விமர்சனமல்ல என்பது மாத்திரமல்லாமல் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடுமாகும். சமர் தொடர்பான எக்கருத்தையும் நாம் திறந்த மனத்துடன் விமர்சனம், சுயவிமர்சனத்துடன் அணுகத் தயாராகவுள்ளோம்.

 

கடந்ததகாலத்தில் எமது விமர்சனங்கள் தொடர்பான எமது நிலையை தெளிவுபடுத்துவது அவசியமானது. எதிர்காலத்தில் கருத்துக் கூறுபவர்கள் யாராக இருப்பினும் எமது விமர்சன அணுகுமுறையைச் செய்யத் தவறின் ஒரு சரியான தலைமையை உருவாக்க முடியாதென திட்டவட்டமாக நாம் கூறுகின்றோம். இன்று வருங்காலப் போராட்டத்தை தனிநபர்களின் கடந்தகாலம் அத்துடன் இன்றைய அவர்களின் கருத்துக்களையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். இவ் விமர்சனத்தை மறுக்க அல்லது அவர்கள் தொடர்பான விமர்சனத்தை ஜீரணிக்க மறுப்பதென்பது ஒரு சரியான அரசியல் தலைமைக்கப்பால் ஒரு புலியையோ, அல்லது ஒரு சில பிரமுகர்களையோ உருவாக்கவே முயல்பவர்களாகவே இருப்பார்கள். குறித்த கருத்துக்கள் தொடர்பாக அக் கருத்தின் முழுப்பக்கத்தைவும் எந்த ஒளிவுமறைவுமின்றிச் சொல்லல் வேண்டும். அப்படிச் சொல்லும் போது அவை நாகரீகமில்லை, முற்போக்குக்குள் இப்படிப்பட்ட விவாதமா? இது புலிகளைப் பலப்படுத்தவே உதவும், இது பத்திரிகை தர்மமில்லை, இது முத்திரை குத்தல் ....... இப்படிச் சொல்லப்படும் எந்த வாதமும் விமர்சனத்தை தடுக்கும் செயற்பாடு மாத்திரம் அல்லாமல் ஒரு ஆரோக்கியமான சரியான தலைமையின் உருவாக்கத்தை தடுக்க முயலும் செயலுமாகும். ஒரு கருத்தின் மீது பிழையான விமர்சனம் வைப்பின் அதைக் கூட விமர்சிக்கும் உரிமையுண்டு. விமர்சனமென்பது சமூக இறுக்கத்துடன், ஆதாரங்களுடன் அமைவதாகயிருக்க வேண்டும். அப்போது தான் ஒரு சரியான தலைமை உருவாகும்.

 

 

Read more...

வானரங்களின் பாசிசம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:44
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

நாம் எதிர்பார்த்தது போல் 450 வருடங்கள் பழைமை வாய்ந்த முஸ்லீங்களின் பாரம்பரியம் மிக்க பாபர் மசூதியை, பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிசத், பஜ் ரங்தத் ஆகிய பிழைப்புவாத அரசியல் மத வெறி கும்பல்களால் பாமர உழைக்கும் மக்கள் வெறியூட்டப்பட்டு மசூதி உடைப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மனித நாகரீகத்துக்கு சவாலாக நடத்தபட்ட இச்சம்பவத்தில் ஆயிரத்தி நூறு மனித உயிர்கட்கு அதிகமாகவும், இது சம்மந்தமாக ஏற்கனவே தொடர்ந்து வந்த தாக்குதலில் 3000 மனித உயிர்கட்கு அதிகமாகவும் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

 

வறுமை, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசிய தேவைகள் புறக்கணிப்பு, இனவொடுக்குமுறை, பொலிஸ் அடக்குமுறை ஆகிய முரண்பாடுகளால் வர்க்கரீதியில் அணிதிரண்டு வரும் உழைக்கும் பாமர மக்களை நிலபிரபுத்துவ, தரகுமுதலாளித்துவ சக்திகள் பந்தாடி கூறுபோடும் பிழைப்புவாத அரசியலில் இது ஓர் அங்கம் மாத்திரமே.

 

ஆளும் காங்கிரஸ் பிழைப்புவாதிகள் மசூதி கட்டித் தரப்படும் என அறிவித்ததை நோக்குமிடத்து, எதிர்காலத்தில் தொடரவிருக்கும் பேச்சுவார்தையிலோ உயர்நீதி மன்ற தீர்ப்பின் மூலமோ, மசூதியையும் ராமர் கோயிலையும் ஒரே நேரத்தில் அமைத்து சமன் செய்ய முயற்சிக்கலாம். எது எப்படி அமைந்த போதிலும் இராமர் கோயில் அமைவது உறுதியாகியுள்ளது. இதுகாலவரையிலும் சிறுபான்மை முஸ்லீம்கள் ஆங்காங்கே மதத்தின் பெயரரல் தாக்கபட்டபோதிலும், அயோத்தியின் அதிரடி நடவடிக்கை மூலம் போலிமதச்சார்பின்மை முழு உலகத்திற்க்கும் அம்பலப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு பிணைந்துள்ள மதம் மக்களின் அழிவுகளை மாத்திரமே காலத்திற்கு காலம் நமக்கு பெற்றுத் தந்துள்ளது.

 

நாட்டைச் சூறையாடவும், மக்களின்; வாழ்வை அபகரிப்பதற்கும் புராண கால இராமரை நாடிநிற்கும் இப் பிழைப்புவாதிகளுக்கு உழைக்கும் மக்களால் மாத்திரமே சரியான தண்டனை வழங்கமுடியும்.

 

 

Read more...

வாசகர்களும் நாங்களும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:39
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

உங்கள் சமர் 5-6- வாசித்தேன். அதில் நீங்கள் புலிகள் மீது வைத்துள்ள கருத்துக்கள் நீங்கள் புலிகள் மீது கொண்டுள்ள தெளிவு புரிகின்றது. அவர்கள் பாசிச தலைமையே. அவர்கள் தேசிய விடுதலை அமைப்பு என்பது தவறானது. ஆனால் உங்கள் விமர்சனங்கள் யாவும் தேவையானதே. ஆனால் உங்கள் விமர்சனங்கள் கடும் போக்கை கொண்டவையாகவுள்ளது. குறிப்பாக தோழமை சஞ்சிகைகளான மனிதம், உயிர்ப்பு மீதான விமர்சனங்கள்.

விமர்சனம், சுயவிமர்சனம் ஏற்றுகொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அது முத்திரை குத்துவது போல் அமையக் கூடாது. திரிபுவாதிகள் என்ற நிலையில் உள்ளது என்று கூறியுள்ளீர்கள். இனியாவது முற்போக்குச் சக்திகள் ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டும். இல்லையேல் அது புலிகளை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

அடுத்து உங்கள் தோழர் நாவலன் மீது நீங்கள் வைத்துள்ள விமர்சனம் எந்த ஓர் சூழ்நிலையிலும் விமர்சனம் வைக்கப்பட வேண்டியதே. அது உட்கட்சிக்குள் உட்கட்சி விமர்சனமாய் அமைய வேண்டும். அதை விடுத்து உங்கள் சஞ்சிகையில் விமர்சிப்பது கடுமையான ஆபத்து. இன்று உங்கள் எதிரிகள் நிறைய இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந் நிலையில் அவரை விமர்சிப்பது என்பது அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமையும். நீங்கள் எவரையும் வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சிகள் எடுக்காதிருப்பது நன்று.

மேலும், தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் மீது நீங்கள் விமர்சனம் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் அவர்களின் மத்தியகுழு உறுப்பினர் மீது வைத்துள்ள தனிநபர் குண நலன்களை விமர்சிப்பது மிகவும் கண்டனத்திற்குரிய விடயம். என்.எல்.எவ்.டி-யினர் புத்தகத்தைப் புரட்சியாக்க முனைந்தவர்கள் என்பது ஒரளவு உண்மை தான் ஆனாலும் அவர்கள் நாட்டில் மக்கள் மத்தியில் (கூலி விவசாயிகள், நகர சுத்திகரிப்பாளர்கள், கடற்தொழிலாளர்கள் மற்றும் நசுக்கப்பட்ட மக்கள் மத்தியில்) இறங்கி அரசியல் வேலைகளில் ஈடுபட்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனாலும் இவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் கவனத்தில் எடுத்து ஆராயப்பட வேண்டியதே. இவர்களது நகர்வும் மிகவும் இரகசியமாகவும் இறுக்கமாயும் இருந்தும் கூட எதிர்ப் புரட்சியாளர்களால் எப்படி முறியடிக்க முடிந்தது என்பதை கண்டறிய வேண்டுமே தவிர தனிநபர்களை விமர்சிப்பது சரியான ஆபத்தான முயற்சியே என கவலைப்பட வேண்டியுள்ளது. முற்போக்கு அணியின் முகாமுக்குள் ஆராயப்பட வேண்டியதே ஒழிய நடு வீதியில் அல்ல.

87 களில் அழிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கச் சிந்தனையை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் உங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

லோகன்-சுவிஸ்

 

இதே போன்ற கருத்துப்பட்ட ஒரு கடிதம் இலங்கையிலிருந்து கிடைக்கப் பெற்றோம். அதற்கான விமர்சனத்தையும் உள்ளடக்கியதே கீழுள்ள பதில்.

 

ஆசிரியர்குழு

 

உங்கள் விமர்சனங்கள் பொதுப்படையாக இன்று ஜரோப்பாவிலும், நாட்டிலும் உள்ள முற்போக்குச் சக்திகள் மீதான எமது விமர்சனம் தொடர்பானதே. முற்போக்குச் சக்திகள் தொடர்பான எமது பார்வை உங்கள் பார்வையை விட மாறுபட்டது. இன்று முற்போக்குச் சக்திகள் என்பது புலிகளுக்கு எதிராகவுள்ள அனைவரையும் உள்ளடக்கியதே. இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை ஆதரிப்பவர்கள் கூட இலைமறை காயாக மறைந்தே உள்ளனர். அவர்களை விடுத்து மிகுதியாகவுள்ள அனைவரும் ஓர் அணியாக நீங்கள் உட்பட சிலர் சுட்டிக்காட்டுகிறிர்கள். இந ;நிலைமை என்பது 1983 இல் இலங்கையரசுக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் தம் மீதான விமர்சனங்களை நிராகரிக்கக் கோரியது போன்றதே. அதன் விளைவு இறுதியில் இன்று நாம் பாசிசத்திற்க்குள் பலியானதிற்கு இட:டுச் சென்றது. இக் கோரிக்கை 1ம் உலகயுத்த காலத்தில் 2ம் அகிலத்தைச் சேர்ந்தோர் தந்தை நாட்டை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிப் புரட்சியை கை விட்டது போன்றதே. இன்று வெறும் புலி எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ் அணிதிரட்டப்படும் எந்த அமைப்பும் மீண்டும் ஒரு புலியை உருவாக்கும்.

 

இதற்கு எதிர்மறையாக ஒவ்வொரு நபரின் ஒவ்வொரு கருத்தும் விமர்சனத்திற்குள்ளாக வேண்டும். நீங்கள் உடன்படலாம். இதை பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்வது என்பதே இங்குள்ள பிரச்சனை. இன்று சமரோ அல்லது வேறு எந்த சஞ்சிகையோ தான் தமக்கிடையில் ஒரு கட்சியாக இல்லை. இவர்களுக்கிடையிலான விமர்சனம் என்பது ஒர் அமைப்பு வடிவம் இல்லாத நிலையில் பகிரங்கமாக வெளிவருவது அவசியமானது. மற்றும் இன்று எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் செயற்பட முற்படும் ஒவ்வொரு நபரும் எதிர்காலத்தில் ஒரு கட்சியை கட்ட முனைகின்றனர். அந்த வகையில் அனைத்துக் கருத்துக்களும் எந்த விதிவிலக்கு இன்றி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெரியும் வகையில் ஒளிவு மறைவின்றி இருக்கும் போது மட்டுமே எதிர்காலத்தில் உருவாகும் எந்த அமைப்பும் விமர்சனம், சுயவிமர்சனத்திற்குட்பட்டு உருவாகும். இந்த உருவாக்கத்தில் முன் நிற்கும் ஒவ்வொரு தனிநபருடைய கடந்த கால அரசியல் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சந்தர்ப்பவாதமும், திரிபுவாதமும் பின்னிருந்தே அமைப்பை அழிக்கும். இதை சோவியத் முதல் சீனா வரை உள்ளிருந்த கம்யூனிஸ்ட்கள் எனச் சொன்னோர் மீண்டும் முதலாளித்துவத்தை மீட்டதை அனுபவ ரீதியாக நாம் கண்டுள்ளோம். ஆகவே நாம் எந்த விதிவிலக்குமுன்றி ஒவ்வொரு தனிநபரையும், எல்லாக் கருத்துக்களையும் பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும்.


எமது விமர்சனம் தனிநபர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற உங்கள் கருத்து தொடர்பாக ஆராயும் போது இன்று கடந்த கால அரசியலில் ஈடுபட்ட அனைவரும் எதிரிக்கு அம்பலப்பட்டே உள்ளனர். முற்போக்குச் சக்திகளுக்கு தெரிந்த விடயங்களை விட எதிரி கூடுதலாக தெரிந்தே வைத்துள்ளான். இந்த வகையில் என்.எல்.எவ்.டி., பி.எல்.எவ்.டி. தீப்பொறி.......மற்றும் தனிநபர்கள் யாரும் தப்பிக்கவில்லை. இதில் இவர்கள் மீதான விமர்சனங்கள் முன் வரும் போது விமர்சனத்தை எதிர்கொள்ள திராணியற்ற சிலர் பாதுகாப்பைக் காரணம் காட்டுகின்றனர். எமது விமர்சனம் இன்று எதிரியுடன் ஒரே தளத்தில் நின்று போராடும் யாரையும் காட்டிக்கொடுக்கும் வகையில் அமையவில்லை. எதிரியின் தளத்தை விட்டு விலகி பகிரங்கமாக அரசியல் நடத்துபவர்கள் மீதும் மற்றும் தம் மீதான சுயவிமர்சனத்தை முற்போக்கு சக்திகள் மத்தியில் செய்ய மறுத்து தொடரும் அரசியல் செயற்பாட்டின் பின்பே நாம் பகிரங்க விமர்சனத்தை முன் வைக்கிறோம்.


முத்திரை குத்தல் என்ற விடயம் தொடர்பாக நாம் மனிதம் மீது வைத்த விமர்சனம் முத்திரை குத்தல் அல்ல. அதை மனிதம் வேண்டும் என்று சொல்லி தமது திரிபைப் பாதுகாக்க முயலலாம். உண்மையில் கருத்துக்களை திரிப்பதை திரிபு என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது. வேண்டுமென்றால் முற்போக்கு கருத்துக்களில் இதுவும் ஒன்றெனச் சொல்வதா? முத்திரை குத்தல் என்பது, வைக்கப்படும் கருத்தின் மீது விமர்சனம் வைக்காது பொதுப்போக்காகச் சொல்வதே. அதாவது விமர்சனங்களிலிருந்து தப்ப, கருத்துப்பலமின்றி கருத்தைச் சொல்பவரும், கருத்தை எதிர் கொள்பவரும் கையாளும் வழிமுறைகளே. நாம் மனிதத்தின் கட்டுரையின் மீது (அதாவது கரிகாலன் கட்டுரை) வரிக்கு வரி எடுத்து எப்படி திரிக்கப்பட்டு திணிக்க முயல்கிறார்கள் எனச் சுட்டிக ;காட்டினோம். இதை மறுக்கும் உரிமை விமர்சகர்களுக்குண்டு. அதுவும் பொதுப்படையாகவல்லாமல் எப்படியென விளங்கப்படுத்துவதினூடாகவே.


மற்றும் என்.எல்.எவ்.டி.யின் வரலாறு தொடர்ச்சியாக வெளிவருகிறது. அதில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களும் முன்வைக்கப்படும். மற்றும் என்.எல்.எவ்.டி.யின் மத்திய குழுவின் தனிநபர் மீதான விமர்சனம் அவசியமானது. என்.எல்.எவ்.டியின் வாழ்வில் அவை காத்திரமான பங்கு வகித்துள்ளது. இவை தொடரும் கட்டுரைகளில் புரியும். கட்டுரையை வாசிக்கும் அதேநேரம் மத்தியகுழு உறுப்பினர்களின் பாத்திரத்தை சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், எதிர்கால அமைப்பை உருவாக்க என்.எல்.எவ்.டி யின் கடந்தகால மத்தியகுழு உறுப்பினர்கள் செயற்பட முனையும் இன்றைய நிலையில் முற்போக்குச் சக்திகள் அவர்களிடம் அவர்கள் தொடர்பான விமர்சனத்தை கேட்டுக் கொள்ளவும் எதிர்காலத்தில் உருவாகும் அமைப்பில் அவர்களின் கடந்த கால தவறுகள் உருவாகாமல் விழிப்புடன் ஒவ்வொரு ஊழியருமிருக்க இவ் விமர்சனம் உதவும். புதிய ஒரு அனுபத்தின் பின் சில அழிவுகளின் பின் இதே விமர்சனத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமா? நாம் இன்று அனைத்தையும் பகிரங்கமாக எந்த விதிவிலக்குமின்றி விமர்சிக்க வேண்டும். விமர்சனத்தை எதிர்கொள்பவர்கள் நேர்மையானவராக இருந்தால் திறந்த மனத்துடன் எதற்கும் அஞ்சாது விமர்சனம், சுயவிமர்சனத்தை முன்வைக்க வேண்டும். இதுவே எதிpர்கால புரட்சிக்கான ஓர் அமைப்பின் உயிரோட்டமுள்ள நடவடிக்கை மட்டுமல்ல நம்பிக்கையுமாகும்.

 

ஆசிரியர்குழு

 

Read more...

இது உங்கள் உலகம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:37
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

தற்போது 115 கோடி மக்கள் உலகில் முற்றிலும் வறுமையில் வாடுகின்றனர். இத் தொகை 20 வருடங்களுக்கு முன் 94 கோடியாகவிருந்தது.

 

20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட மேலதிகமாக 6 கோடி சிறுவர்கள் பாடசாலை வசதியின்றி உள்ளனர்.

 

20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட போசாக்கு குறைந்த சிறுவர்கள் தொகை 5 கோடியால் அதிகரித்துள்ளது.

 

தற்போதைய உலகசனத்தொகை 548 கோடி

 

இந்தியாவின் சனத்தொகை 85 கோடி

 

இந்தியாவின் முழுச் சனத்தொகையில் 35 வீதம் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இது இந்திய சனத்தொகையில் அண்ணளவாக 30 கோடிப் பேராவர். இவர்களின் வருட வருமானம் இலங்கை பணத்துக்கு 150 ருபா மட்டுமே.


இந்திய சனத்தொகையில் 1.....3 பகுதியீனர் வருடத்திற்கு ஒரு யார் துணி கூட வாங்க முடியாதுள்ளனர்.


சீனாவில் வருடத்துக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் பிறந்தவுடனே கொல்லப்படுகின்றனர்.

 

 

Read more...

கருத்துக்கள் மீது விமர்சனங்களைக் கோருகின்றோம். PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:35
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

சமர் இதழ்கள் 5-6 இல் தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையினுடாக மனிதத்தின் கரிகாலன் எழுதிய தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையை விமர்சித்தோம். இதைத் தொடர்ந்து மனிதம் இதழ் 18 இல் இவ் விமர்சனத்தை விமர்சனமா? தாக்குதலா? என்ற தலைப்புடன் ஒரு விமர்சனத்தை மனிதம் ஆசிரியர் குழு முன் வைத்திருக்கின்றது

.

குறித்த இவ் விமர்சனத்தில் மாற்றுக். கருத்து உள்ளோரை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் வேண்டும், மாறாக மாற்றுக் கருத்துள்ளோரை எதிரணிக்குத் தள்ளுதல் என குறிப்பிட்டுள்ளது. சமரின் இதே கட்டுரையில் தூண்டில் உயிர்ப்பு மீதான எமது விமர்சனத்தில் மாற்று கருத்துக்களை அங்கீகரித்து ஆரோக்கியமான போக்குகளைக் கொண்டோம். அவர்களைத் திரிபுகள் என்றோ அல்லது வேறு பெயரிலோ நாம் சுட்டிக்காட்டவில்லை. நாம் எப்போதும் மாற்றுக் கருத்துக்களை அங்கீகரிக்கின்றோம். அதேநேரம் அவைகளை விமர்சிக்கின்றோம். குறித்த கரிகாலனின் கட்டுரையில் மாற்றுக்கருத்துக்களாகவே பார்த்து அக் கருத்துக்களையே விமர்சித்தோம். குறித்த கருத்து அடிப்படை மார்க்சியத்தையே நிராகரித்து, மார்க்சிசத்தை திரித்து விடுவதையே மீண்டும் உறுதியாக திரிபுவாதம் என்று சுட்டிக் காட்டுகிறோம். திரிபை திரிபு என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது. கரிகாலனையோ மனிதம் பத்திரிகையையோ நாம் வேண்டுமென்று திரிபுகள் என முத்திரை குத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இது வரை நாம் மனிதத்தையோ கரிகாலனையோ சந்தித்தது கிடையாது. அப்படியிருக்க நாம் ஏன் முத்திரை குத்த வேண்டும். சஞ்சிகையில் வெளிவந்த கருத்துக்களைக் கொண்டு, கருத்துகள் திரிக்கப்பட்டிருந்தால் அவைகளை திரிபுகள் என நாம் கூறுகின்றோம்.

 

இதை மாவோ மார்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மையை நிராகரித்தால் அது திரிபுவாதமாகும். திரிபுவாதமென்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம். சோசலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்துக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை திரிபுவாதிகள் மறுக்கின்றனர்..அவர்கள் வக்காளத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கத்திற்கன்றி சோசலிச மார்க்கத்துக்கல்ல.

 

நன்றி சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மகா நாட்டு உரை(மாவோ 12 மார்ச் 1957)

 

திரிபு வாதம் அல்லது வலது சந்தர்ப்பவாதம் என்பதொரு முதலாளித்துவ வர்க்க சித்தாந்த ஒட்டமே. இது வரட்டுவாதத்தை காட்டிலும் மேலும் அபாயமானது. திரிபுவாதிகள், வலதுசந்தர்ப்பவாதிகள், மார்க்சியத்துக்கு சொல்லளவில் சேவை செய்கின்றனர். அவர்கள் கூட வரட்டுவாதத்தை தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் தாக்குவது மார்க்சியத்தின் மிக அடிப்படை அம்சங்களே ஆகும். அவர்கள் பொருள்முதல்வாதத்தையும், இயங்கியலையும் எதிர்க்கின்றனர். அல்லது திரித்துப் புரட்டுகின்றனர். மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பாத்திரத்தையும் எதிர்க்கினறனர் அல்லது பலவீனப்படுத்த முயல்கின்றனர். சோசலிச மாற்றத்தையும், சோசலிச நிர்மாணத்தையும் எதிர்க்கின்றனர் அல்லது பலவீனப்படுத்த முயல்கின்றனர்.

 

நன்றி மத்தியில் உள்ள முரண்பாடுகளை சரியாக கையாளுவது பற்றி(மாவோ)

 

எதிரணிக்கு தள்ளுதல் என்றால் யார் எதிரி? வெறும் புலிகள் மட்டுமா? இல்லை, புலிகளும் மற்றும் குழுக்களும் போராட்டத்துக்கு நேரடியாக எதிராக தெரியலாம். ஆனால் திரிபுவாதமும், பிழைப்பு வாதமும் முதுகில் குத்தும் எதிரியே. இதுவே சோவியத் முதல் சீனா வரை நடந்தது. முற்போக்கென்று சொல்லும் எல்லோரின் கருத்துக்களின் மீதும் நாம் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க இன்றைய நிலை கோருகின்றது. இது எதிரணிக்கு தள்ளுவதை விட போராட்டத்திற்கும் பலம் கொடுக்கும். இக் கருத்துக்களை எதிரணிக்கு தள்ளுவதென பார்ப்பவர்களே மாற்றுக் கருத்துக்களை மறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

 

"மனிதத்தில் கரிகாலன் எழுதிய கட்டுரை என்று கூறப்படும் பத்திரிகை நெறியை கடைப்பிடிக்க தவறியதே சமர் செய்த கடுமையான தவறு" இது எப்படியென புரியவில்லை. ஒரு பத்திரிகை சில நோக்கங்களை மையமாக வைத்தே வெளிவருகிறது. இதை மனிதம் இதழ் 13 இல் ஆசிரியர் தலையங்கத்தில் ஆக்கங்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பு. என்று கூறும் சமூகப்பொறுப்புணர்வுள்ள பத்திரிகைகள் கூட உதாரணமாக யாழ்நகரிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேறியது சரியான நடவடிக்கையென்று ஒருவர் கட்டுரை வரைந்தால் அதை பிரசுரிக்கவா போகிறது. இந்த வகையில் தான் எமக்கென்றும் சில வரையறைகள் உண்டென்பது உண்மை. சமூகநலனை நோக்கிய ஆக்கங்களையே பிரசுரிக்கின்றோம். தொடர்ந்தும் பிரசுரிப்போம். (ஆக்கங்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பு.)மனிதம் ஆசிரியர்குழு இக் கூற்றை அங்கீகரிப்பதுமில்லை, பத்திரிகையில் தாஙகி வருவதுமில்லை. இக்கூற்றை பத்திரிகைகள் பிரசுரிப்பதன் மூலம் ஆக்கங்களுக்குரிய பொறுப்பை ஆக்கதாரர்களிடமே முழதாக விட்டுவிட்டு, தமது பொறுப்பை தட்டிக் கழிப்பதாக அர்த்தப்படுகின்றது என்ற வரையறையில் மனிதம் இக்கட்டுரையில் கருத்தின் மீது பொறுப்புள்ளதை சுட்டிக் காட்டுகின்றோம். அந்த வகையில் மனிதம் மீது எமது விமர்சனம் பத்திரிகைத் தர்மத்துக்குட்பட்டதே.

 

இக் கருத்து தொடர்பாக மனிதம் குறித்த எமது விமர்சனத்தின் பின் கூட கருத்து கூற மறுப்பதை என்னவென்பது, இதை வேண்டுமென்றால் சந்தர்ப்வாதம் என்றே சொல்ல வேண்டும். இது முத்திரை குத்தல் அல்ல. ஒரு கருத்தின் மீது கருத்து சொல்ல மறுப்பது ஏன்? இது பற்றி எமக்கு தெரியாது அல்லது கற்க வேண்டும் எனில் நாம் சொன்ன கருத்தை திரிபு அல்ல எனச் சொல்லும் தார்மீகப் பலம் உங்களுக்கு கிடையாது. இதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் நடுநிலையென்று ஒன்றுமேயில்லை. ஒரு கருத்தின் மீது சரி, பிழை ஆராயும் சக்தி எல்லா சாதாரண மனிதனுக்குமுண்;டு. மனிதம் இன்று எது சரியெனப்படுகிறதோ அதைச் சொல்லியிருக்க வேண்டும். சொல்லாமல் விடுவது என்பது சந்தர்ப்பவாதமாகும்.

 

ஆக்கங்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பு என்பதை மனிதம் ஏற்பதால் ஒரு ஆக்கதாரரின் கட்டுரையை பிரசுரிக்கும் அதேநேரம் அதில் உடன்பாடில்லாதிருப்பின் தமது விமர்சனத்தையும் முன்வைப்பதனுடாக விவாதத்தைத் தூண்டுவதுடன் மனிதம் சஞ்சிகை மக்களுக்குத் தங்கள் அரசியல் நிலையை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து மௌனமாக விட்டுவிடுவது பொதுப்படையாக திரிபல்ல என சொல்லுவதனுடாக மனிதத்துக்கு அக் கருத்தேயுள்ளதென மக்கள் எண்ணுவார்கள். ஒரு பத்திகையென்பது ஸ்தாபகர் அப் பத்திரிகை தாங்கிவரும் கருத்தை வைத்து மக்கள் அதன் பின் அணிதிரட்டப்டுகிறார்கள். அந்த வகையில் மனிதம் ஒவ்வொரு கருத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். அக் கருத்தில் சரி, பிழையை தங்கள் சார்பில் விடும் (விளம்பரப் பத்திரிகை போல்) நிலையில் மனிதம் இருந்திருக்கின்றதா என்ற சந்தேகம், விமர்சனமா? தாக்குதலா? என்ற விமர்சனத்தினூடாக எழுகிறது. குறித்த கட்டுரையை திரிபுவாதம் என்று குறிப்பிடப்பட்டதை மனிதம் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை என்று சொன்னவர்கள் கரிகாலன் தூண்டில், சமர், உயிர்ப்பு பற்றி சொன்ன மூலவர்கள் சொன்னதை பொருத்தமுயல்வது, பழமைவாதம் எனச் சொன்னதைப் பற்றி மௌனம் சாதிப்பது என்பது மனிதம் அதை ஏற்றுக்கொண்டதாக அர்த்தப்படுகிறது. ஒரு கட்டுரையாளருக்கு கருத்துக்களை பழைமைவாதம் எனச் சொல்லும் உரிமையுள்ளது. அது எப்படி என்பதை ஆதாரத்துடன் புரியவைக்க வேண்டும். அப்படி இல்லையேல் கரிகாலன் சொன்ன முறை தான் முத்திரை குத்தல். எந்தக் கட்டுரையாளரும் எக் கருத்தையும் ஒன்றுடன் பொருத்தும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். ஆனால் அப்படி பொருத்தும் போது அது எப்படி? என புரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது முத்திரை குத்தலாகவே அமையும். இவற்றை ஏறறுக்கொள்ள மறுப்பது பத்திரிகை தார்மீகமாகாது.

 

மற்றும் எமது விமர்சனத்தில் வசனத்தைப் பிரித்தெடுத்து விமர்சனத்தை முன்வைத்த போக்கு விமர்சனத்தை தடைசெய்யும் போக்கென்;றும் கருத்தை சிதைத்துள்ளதென்றும் மனிதம் கூறியதென்பது அடிப்படையில் ஒரு விமர்சனம் கட்டுரையின் மீது நடைபெறுவதாகயிருக்க வேண்டும். பொதுவான விமர்சனம் என்பது மயக்கமானதாகவும், வாசகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத வகையிலானதுமே. இதே கரிகாலன் உயிர்ப்பின் மீதான விமர்சனத்தை இதே போல் செய்திருந்தார். அது பற்றி மௌனம் சாதித்த மனிதம் எம் மீது இதையொரு குற்றச்சாட்டாக முன் வைத்துள்ளனர். கரிகாலனின் உயிர்ப்பு மீதான விமர்சனமுறை (வசனத்தை பிரித்தெடுத்து) சரியானது. ஒரு கட்டுரை மீதான விமர்சனமென்பது கட்டுரையில் ஒவ்வொரு வசனம் மீதும் அமையும். இது தவிர்க்க முடியாதது. இN,த முறை மார்க்ஸ் முதல் மாவோ வரை செயதுள்ளனர். நாம் பிரித்தெடுத்தன் ஊடாக கட்டுரையின் கருத்தினை சிதைத்துள்ளதெனில் நாம் சுய விமர்சனத்துடன் ஆராயத் தயாராகவுள்ளோம். அதை மனிதம் சுட்டிக்காட்ட வேண்டும்.

 

மனிதத்தின் கட்டுரையில் தாக்குதலா? என்று கேட்பதனூடாக வாசகர்களுக்கு தமது கருத்தை சொல்லாமல் பிரச்சனையை திசை திருப்புவதையோ இவை முத்திரை குத்தல் எனச் சொல்லி மௌனம் சாதிப்பதையோ கை விடக் கோருகிறோம். ஏனெனில் குறித்த கட்டுரையில் பிரித்தெடுத்த ஒவ்வொரு வரி மீதும் நாம் தெளிவான விமர்சன வழியை முன்வைத்தே அது எப்படி திரிபாக உள்ளதென சுட்டிக்காட்டினோம். இது திரிபல்ல எனின் எப்படி என்பதையும், இது தாக்குதல் எனின் எப்படி என்பதையும் எமது ஒவ்வொரு கருத்தின் மீதும் விமர்சனத்தை முன்வைக்கும்படி மனிதத்திடம் கோருகின்றோம்.

 

ஆசிரியர்-குழு

 

 

Read more...

இலக்கிய சந்திப்பும் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:29
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

ஜரோப்பாவில் வருடத்திற்கு முன்று இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதில் 14வது இலக்கியச் சந்திப்பு மார்கழி மாதம் 26ம்- 27ம் திகதிகளில் பாரீஸ்சில் நிகழ்த்தப்பட்டது. முதல் 13 இலக்கியச் சந்திப்புகளுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டம் என்றொன்று இல்லாவிட்டாலும் ஜெர்மனியில் நிகழ்த்தப்பட்டது. இவ் இலக்கியச் சந்திப்புகளுக்கு ஒரு வரையறுக்கபட்ட வேலைத்திட்டம் என்றொன்று இல்லாவிட்டாலும் ஜெர்மனியில் நிகழ்ந்த முதல் இலக்கிய சந்திப்பில் இலக்கியச் சந்திப்பின் நோக்கம் பற்றிய ஒரு முக்கியமான விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஜரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகள் மீதான விமர்சனத்தை வாசகர்கள் முன்வைக்கவும், கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்தவுமெனக் குறிப்பிட்டே இலக்கிய சந்திப்பு உருவாக்கப்பட்டது. இச் சஞ்சிகைகள் மண்ணின் நிகழ்வுகளுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. பாரீஸ்சில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் கீழுள்ள விடயங்களைப் பற்றி ஆராய்ந்ததா?

 

1). ஜரோப்பாவில் வெளிவரும் இலக்கியங்கள் மீது கவனம் எடுத்தார்களா?

 

2) இலங்கையில் வெளிவரும் இலக்கியங்கள் மீது கவனம் எடுத்தார்களா?

 

3) நடாத்திய நிகழ்ச்சிகள் மீது அரசியலைப் பிரதிபலித்தார்களா?

 

4) இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டோருக்கு கருத்துச் சுதந்திரம் வழங்கினார்களா?

 

5) தமிழ் மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுத்தார்களா?

 

6) தமிழ் மக்களின் பறிக்கப்பட்ட ஜனநாயகம் பற்றிக் கதைத்தார்களா?

 

7) முஸ்லீம் தேசிய இனம் அழிக்கப்படுவதை கவனத்தில் எடுத்தார்களா?

 

8) சிலரால் வைக்கப்பட்ட கருத்துக்கள் மீது அரசியல் ரீதியில் பதிலளித்தார்களா?

 

இப்படியான விடயங்கள் பற்றிக் கதைக்காமல் விட்டதுடன் கதைக்க முற்பட்டவர்களின் கருத்து சுதந்திரத்தை பறித்ததுடன், கதைக்க முற்பட்டால் தாக்குதலாக மாறும் நிலைக்கே மாறியிருந்தது. இவ் இலக்கியச் சந்திப்பு மேற்குறிப்பிட்ட விடயங்களையெல்லாம் எதிர்நிலைக்குத் தள்ளி (இவற்றை கதைத்தோரை எதிரியாகப் பார்த்தனர்)சில பிரமுகர்களினதும், பிழைப்புவாதிகளினதும் களியாட்ட விழாவாக இலக்கிய சந்திப்பு சீரழிந்துள்ளது. இங்கு தம்மைத்தாமே புகழ்வதுடன், தம்மைத்தாமே இலக்கியவாதிகளென புகழும் சுய அறிமுகத்துடன் தொடங்கிய இலக்கியச் சந்திப்பு பிரமுகர்கள் தமக்கிடையில் புகழ்ந்து தள்ளி, சிலரை பப்பாவில் ஏற்றி(ஓரிரு இலக்கியங்களை விமர்சித்து) புகழ்பெற உண்மையில் மண்ணை நேசிப்பவர்களை பயன்படுத்திக் கொண்டனர். இதை முன்கூட்டியே இந்தியாவில் போராடும் ஒரு புரட்சிகர கட்சியின் பத்திரிகையான புதிய ஜனநாயகம் எச்சரித்திருந்தது.

 

"இந்திய பிழைப்புவாத அறிவுஜீவிகள் தான் இப்போது புதிய இடதுபோக்கையும், தாராளவாத அமைப்புசாராத கலைப்புவாதப் போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு ஈழவிடுதலை இயக்கத்தை மேலும் குழப்பியவர்களாகவுள்ளனர். தனது உணர்வுகளை வெளிப்படுத்த ஆர்வத்துடன் பத்திரிகை தொடங்குபவர்கள் இத்தகைய பிழைப்புவாத பழம் பெருச்சாளிகளின் படைப்புக்களை அறிந்தோ அறியாமலோ வெளியிடுவதன் மூலம் மேலைநாட்டிலுள்ள ஈழத்தமிழர்களை குழப்புவதோடு தாமும் குழம்பி திசை தெரியாமல் தத்தளிக்கின்றார்கள்."

-நன்றி புதிய ஜனநாயகம்

 

இவ்விலக்கியச் சந்திப்பில் சமர் மீதும் சில நபர்கள் மீதும் இந்த பிழைப்புவாதப் புத்திஜீவிகள் அரசியலுக்கு புறம்பாக தாக்குதலை நடத்தினர். அரசியல் ரீதியில் எல்லாப்பிரச்சனைகள் மீதும் கருத்துக்கூற முற்பட்டபோது அவர்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதுடன் அவர்களை பார்த்து பயங்கரவாதிகள், சமயவாதிகள்...... எனப் பலத்த கரகோசத்துடன் கூக்குரலிட்டனர். தம்மை இடது சாரிகள் என பறைசாற்றிக் கொள்ளும் சிலர் மார்க்சிசம் இறந்துவிட்டதெனச் சொல்ல, தம்மை இடதுசாரிகள் எனச் சொல்லும் மேலும் பலர் பலத்த கரகோசத்துடன் வரவேற்றனர். ஒரிருவர் இதற்கெதிராக குரல் கொடுக்க முயன்றபோது அவர்களுக்கு கருத்து சுதந்திரத்தை மறுத்து தாம் போலி இடதுசாரிகள் எனக் காட்டிக்கொண்டனர். இங்கு கலந்து கொண்டோர் தம்மை முற்போக்குகளென(முற்போக்குள் விமர்சனமா? எனக்கூறுபவர்கள்) அடையாளம் காட்ட கடந்த காலத்தில் முற்பட்டவர்கள். அவர்கள் கூட மண்ணில் இழந்து போன ஜனநாயகத்துக்கு தமது முற்போக்குவாதத்தை பயன்படுத்த தவறி மீண்டும் ஜனநாயக மீறலுக்கு வித்திட்டனர்.

 

இவ் இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட தூண்டில், ஓசை, சிந்தனை, அ-ஆ-இ, ஊதா, தேனி...... மற்றும் நின்று போன பள்ளம், கண், தேடல்(பிரான்ஸ்) புதுமை, நமது குரல்,.....போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் மற்றும் சில கவிதை கதை தொகுதிகளை வெளியிட்டவர்களும் பல சஞ்சிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுபவர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் எல்லோரும் எம்மண்ணில் பறிக்கப்பட்ட மனித உரிமைக்காக அதாவது கருத்து எழுத்து, பேச்சு சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்களாக இனம்காட்டிக் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் மௌனம் சாதிக்க, சிலர் அங்கீகரிக்க சமர் உட்பட சில நபர்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டதுடன், எம்மை மௌனமாக கேட்டுக் கைதட்டும் படி கோரினர். இவ்விலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர் இதற்கு எதிராயிருந்த போதும் அவர்கள் இந்த பிழைப்புவாத சக்திகளால் தவறான வழிக்குள்ளிட்டுச் சென்றுள்ளனர். அல்லது மௌனிக்க வைக்கப்பட்டனர். இவ்விலக்கிய சந்திப்பில் மண்ணை மறந்ததுடன், கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முயன்ற நடவடிக்கை மீண்டும் புலிகளை (கடந்த காலத்தில் சுயவிமர்சனம் செய்யாமை மட்டுமின்றி இவர்கள் வெறும் புலி எதிர்ப்பாளர்களாக தனிப்பட தம்மைக் காட்டிக் கொள்பவர்கள்) உருவாக்க முயல்கின்றனர்.

 

இவ் இலக்கிய சந்திப்பை நடத்தவென ஒரு குழு உருவான போதும் அக்குழுவிலிருந்த ஒசை ஆசிரியர் இந்நிகழ்ச்சிகளுடன் முரண்பட்ட நிலையில் அவரைப் புலிகளின் உளவாளியெனக் கூறி வெளியேற வைத்தனர். இந்நிகழ்ச்சி தொடர்பாக புலிகள் கூறியதை பார்ப்போம். எனது தாய்க்கு ஏதாவது நடந்தால் நான் விடமாட்டேன். இதை புரிந்து கொள்வீர்கள். இதை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சொன்ன புலிகள் இது போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்தலாம் என்றனர். இப்படிக் கூறியதன் மூலம் இந்நிகழ்ச்சி எம்மை பாதிக்காது. எங்கள் பக்கமே நீங்களும் என்றார்கள். அதாவது தாய்க்கு ஏதாவது நடந்தால் என்பதனூடாக புலிகளைப்பற்றி கதைக்காவிட்டால் சரியென்றே மறைமுகமாகக் கூறினார்கள். இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களும், கலந்துகொண்டோரும் இவ் வேண்டுகோளை ஏற்று நிகழ்ச்சியை நடத்தியதுடன், அதற்கெதிராக கதைக்க முற்பட்டவர்களை பயங்கரவாதிகள், சமயவாதிகள்.....எனச்சொல்லி தமது பலத்தை கரகோசத்தில் மூலம் மனிதவுரிமைக்கெதிராக இலக்கியச் சந்திப்பை சீரழித்தனர்.

 

இக்கூட்டத்தில் கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர்களைப் பற்றி இவர்கள் இக்கூட்டத்தைக் குழப்ப முயன்றவர்களெனப் பிரச்சாரம் செய்கின்றனர். ஜரோப்பாவில் எம்மவர்களால் நடத்தப்படும் சினிமா களியாட்டங்கள், மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்ட ஒரு நிகழ்ச்சியாக இவ் இலக்கியச் சந்திப்பு இருக்குமென்ற நோக்கிலேயே நாம் கலந்து கொண்டோம். பல எழுத்தாளர்கள் எம் மண்ணின் நிகழ்வுகளின் மீது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக நாம் மதிப்பிட்டு வந்தமைக்காக நாம் பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்கிறோம். இக்கூட்டத்தையொரு களியாட்டவிழாவாக எண்ணியவர்களும், தம்மை புகழும் பிரமுக பிழைப்புவாதிகளும் தம்மைக் குழப்ப முயன்றனரெனக் குற்றம் சாட்டியுள்ளனர். தம்மைத்தாம் புகழும் ஒரு நிகழ்ச்சியாகச் சீரழிந்த போதிலும் நாம் கூட்டத்தின் ஒழுங்கைக் கடைப்பிடித்தோம். ஒவ்வொரு நிகழ்ச்சியின் மீதும் சபையோர் கருத்துக்கூற வழங்கப்பட்ட நேரத்தில் தமது கருத்தை சொல்ல முயன்றபொழுது அவர்களுக்கு கருத்து சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது. இக்கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதைச் சமர் மட்டுமின்றி சில நபர்களும் சுட்டிக்காட்டினர். எமது கருத்துக்கு பதிலளிக்க தகுதியிழந்து அவதூறுகளைப் பொழிந்தனர். அதற்கு பதிலளிக்க முயன்ற போது முற்றாக கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டது. இதை அவர்கள் பதிவு செய்த வீடியோ பதிவின் மூலம் அறியலாம்.

 

இவ் இலக்கியச் சந்திப்பில் நின்று போன சஞ்சிகைகள் உட்பட ஜரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகளை பார்வைக்கு வைத்தவர்கள், பிரான்சில் வெளிவரும் சமர், ஓசை போன்றவைகளை திட்டமிட்டே பார்வைக்கு வைப்பதை தவிர்த்தனர். இந்நிகழ்ச்சி நிரலிலுள்ள எந்த விடயத்தின் மீதும் அல்லது ஏதாவது விடயத்தையும் இட்டு கருத்துக்கூற சமர் உட்பட ஒசையிடமும் கோராமையினூடாக இவ்விலக்கியச் சந்திப்பு பிரமுகர்களுக்கேயென சீரழித்தனர். இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு விடயத்தில் சிலர் ஒரே கருத்துப்பட பேச முற்பட்டபோது பாரதியென்பவர் கேட்டார் எத்தனை பேர் வந்தீர்கள் என்று. முதல் நாள் நிகழ்ச்சி தொடர்பாக இக்கூட்டத்தை நடத்தியவர்களில் ஒருவரான முரளியிடம் சமர் சார்ந்த ஒரு நபர் முதல் நாள் நிகழ்ச்சியில் பறிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தைச் சுட்டிக்காட்டிய போதே நீ இறந்து போவதே சிறப்பானது என்றார். மாற்றுக்கருத்துக்களை சொல்லும் நபர்களை அழிப்பது, கருத்துச் சொல்வதை தடுப்பது சஞ்சிகைகளை பார்வைக்கு வைக்காமல் தடுப்பது....... என இலக்கிய சந்திப்பை நடத்தியவர்கள் செய்வதொன்றும் புதிதல்ல. கடந்த கால இயக்கவரலாற்றை நாம் மறந்து விடவில்லை.


இவ்விலக்கிய சந்திப்பில் கருத்துக்கள் மீது கருத்துச் சொல்வதற்கு முடியாமல் வாயில் வந்தபடி உளறிக் கொட்டிய இப்பிழைப்புவாதப் பிரமுகர்கள் புகழ் தேடி தமது அறியாமையை வெளிப்படுத்தினர். இவ்வறியாமையில் (சமூக இயக்கம் தொடர்பாக) இருந்து கொண்டு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை தமது பிழைப்புவாத நோக்கில் பயன்படுத்தும் பச்சோந்திப் பிரமுகர்களின் அறியாமையை வெளிப்படுத்தினர். இவர்களினால் அல்லது தவறான மார்க்கத்தால் சென்றவர்கள் இன்று தமது விமர்சனத்தைத் திரும்பிப்பார்க்க வெகு நாட்களாகாது. இது எமது கடந்தகால அனுபவத்தினூடாக மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் சொல்ல விரும்புகிறோம்.

 

ஒருவன் அறிவைப் பெறவிரும்பின் "யார் ஒரு விசயத்தை அறிய விரும்பினாலும் அவருக்கு அத்துடன் தொடர்பு கொள்ளுவதை தவிர, அதாவது அதன் சூழ்நிலையில் வாழ்வதை(நடைமுறையில் ஈடுபடுவதை) தவிர வேறு வழியில்லை... நீங்களும் அறிவு பெற விரும்பினால் யதார்த்தத்தை மாற்றும் நடைமுறையில் பங்கு பெறவேண்டும். பேரீக்காயின் சுவையை அறிய விரும்பினால் அதை நீங்கள் சொந்தமாக தின்று சுவைத்துப் பார்க்கவேண்டும். புரட்சியின் தத்துவமும், வழிமுறைகளும் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் புரட்சியில் பங்காற்றவேண்டும். உண்மையான அறிவு முழுவதும் நேரடி அனுபவத்திலிருந்தே பிறக்கின்றது."

 

நன்றி-- -நடைமுறை பற்றி (மாவோ ஆடி 1937)

 

 

Read more...

இலக்கியச் சந்திப்பும் நிகழ்ச்சிகள் மீதான எமது நிலையும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:23
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

இலக்கிய சந்திப்பில் பல தலைப்புகளில் சில பிரமுகர்கள் மாறி மாறி கதைத்தனர். இவர்கள் அனைவரும் எப்பிரச்சனை மீதும் தீர்வை முன் வைக்காததுடன், பிரச்சனைகளிலுள்ள அரசியலையும் ஆராயாமல் திட்டமிட்டே கைவிட்டனர். பிரச்சனைகளிலுள்ள அரசியலையும் கதைக்க முற்பட்டபோது அவர்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை மறுத்தனர். இப் பிரமுகர்கள் பார்வையாளர்களை மாணவர்களாக மட்டும் இருக்கக்கூறி தமது புத்திஜீவித்தனத்தை காட்ட முனைந்தனர். இவர்களினால் வைக்கப்பட்ட கருத்துக்கள் பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிப்பது போல் வெறும் தகவல்களை மார்க்சிசத்துக்கு விரோதமாக (ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்க்கு எதிராக) ஓதினர். இவர்கள் பிரச்சனையின் தோற்றுவாய்க்கோ, அதற்கான தீர்வையோ முன் வைக்காது புத்திஜீவித்தனத்தைக் காட்டினர்.

 

சஞ்சிவி இதழ்21 இல் உதிசபாபதி என்பவரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயத்தை மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம். அவர் சொல்வது போல் இலக்கியச் சந்திப்பு கருத்துக்கள் மீது தீர்வை வைத்ததா?

 

நான் நினைக்கிறேன் தீர்வைச் சொல்லாமல் தப்பித்துக் கொள்வது தமது முகங்களை காப்பாற்றிக்கொள்ளவே தவிர வேறில்லை. எங்கே தமது முகத்தின் அடையாளம் தெரிந்துவிடுமோ என்ற மனப்பயம்! மனப்பிரமை!

 

சமூகம் என்பது தனிமனிதர்களின் கூட்டம். தனிமனிதப் பிரச்சனைகள் நாளை சமூகப்பிரச்சனையாகலாம். தனிமனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம். எனக் கூறினான் பாரதி. எனவே தனிமனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் பற்றி பேசுவதிலோ, எழுதுவதிலோ, விவாதிப்பதிலோ, விமர்சனப் பார்வைக்குட்படுத்துவதிலோ தவறேதும் காணமுடியாது. இதனால் பயனுள்ள விவாதிப்புகள் எம்முன் எழலாம். அவை ஆரோக்கியமானவையாகவே கொள்ளப்படும். இது இப்படியிருக்க எழுத்தாள பயில்வான்கள் தம்மை ஏன் மறைத்துக்கொள்ள வேண்டும். அவசியமில்லை. - நன்றி சஞ்சீவி.

 

இதை மாவோ நாம் எந்த விசயத்தைச் செய்தாலும், அதன் உண்மையான சூழ்நிலைகள், அதன் இயல்பு, இதர விசயங்களுடன் அதன் உறவுகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டாலொழிய அதை ஆளும் விதிகளை அறிய மாட்டோம். அல்லது அதை எப்படிச் செய்வதென அறியமாட்டோம். அல்லது அதை நன்றாக செய்யமாட்டோம். என்பது யாரும் அறிந்ததே. - நன்றி சீனப் புரட்சி யுத்தத்தில் யுத்ததந்திரப் பிரச்சனைகள்.

 

அகநிலையாகவும், ஒருதலைப்பட்சமாகவும், மேலோட்டமாகவும் பிரச்சனைகளை அணுகுபவர்கள் தான் களத்திற்கு வந்த அதே கணத்தில், சூழ்நிலைகளை ஆராயாமலும், விசயங்களை முழுமையாக (அவற்றின் வரலாற்றையும் அவற்றின் இன்றைய நிலைமையையும்) நோக்காமலும், விசயங்களின் சாரத்தை (அவற்றின் இயல்பையும் ஒரு விசயத்துக்கும் இன்னொன்றுக்கும் இடையிலுள்ள அக உறவுகளையும்) ஊடுருவிப் பாராமலும், தாம் சரியென்று கருதி கட்டளைகள் அல்லது உத்தரவுகள் இடுவர். இத்தகைய நபர்கள் தடுக்கி விழுவது திண்ணம்.

- நன்றி------நடைமுறை பற்றி----

.

இப் பிரமுகர்கள் அடிப்படையைக் கைவிட்ட பிரச்சனைகள் மீது, எமது கருத்தை மிகச் சுருக்கமாக முன்வைக்கிறோம்.

 

நாடக அரங்கம்-- அங்கும் இங்கும்.

இத் தலைப்பில் பேசியவர் எம் மத்தியில் சிறந்த நாடகங்களோ, நாடக இயக்குனர்களோ உருவாகவில்லை என்றார். இவர் கவனத்தில் எடுத்த மத்திய தர வர்க்க நாடகஙகளில் கூட அதன் தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் விட்டதுடன் தனது முகமூடியைக் கழற்ற தயாராக இருக்கவில்லை. சிறந்த நாடகங்கள், சிறந்த இயக்குனர்கள் உருவாக வேண்டுமெனக் கோரினார். நாம் நினைக்கிறோம் கருத்துக் கூறியவர் பிரார்த்தனை மூலம் கடவுளிடம் எம்மெல்லோரையும் கோரும்படி வேண்டினார்.

 

ஒரு சிறந்த நாடகம் உருவாகவேண்டின் ஒரு சிறந்த இயக்குனர் உருவாக வேண்டும். ஒரு சிறந்த இயக்குனர் உருவாக வேண்டின் எது அவசியமோ அதை கைவிட்டு விடுகின்றனர். ஒரு சிறந்த இயக்குனர் உருவாக அவர் சமூகத்தை சார்ந்து இருக்க வேண்டும். அவர் சமூகத்தைச் சார்ந்தால் மட்டும் போதாது. சமூகப் பிரச்சனைகளில் பங்கு கொள்பவராக இருக்கவேண்டும். அப்போதே அவர் சொல்லும்.,செயலும் சமூகத்தை சார்ந்திருக்கும். அப்படி இயக்குனர் ஒரு நாடகத்தை இயக்கும் போது அது சமூகத்தைச் சார்ந்திருப்பின் அந் நாடகம் ஒரளவு வெற்றி பெறும். அந் நாடகம் சமூகத்தின் பிரச்சனையை தொட்டு நிற்குமானால் நாடகம் அம் மக்களிடம் ஒரளவு வெற்றிபெறும். அந் நாடகத்தினூடாக சமூகத்திலுள்ள பிரச்சனையை மட்டும் காட்டின் ஒரளவு வெற்றி பெறும். முழுமையாக வெற்றி பெற வேண்டின் சமூகத்திலுள்ள பிரச்சனையைச் சொல்லுவதுடன் அதற்கான தீர்வை முன்வைக்கவேண்டும். தீர்வை முன்வைக்காது வெளிவரும் நாடகம் அச்சமூகத்தில் உள்ளவர்கள் யதார்த்தமாக சந்தித்துகொண்டிருக்கும் பிரச்சனையை மீண்டும் பாப்பதால் அவர்களிடம் நாடகம் ஒரளவு வெற்றி பெறும். இது போனN;ற கதை, கவிதை, ஓவியம்..... என அனைத்தும் தீர்வை முன்வைக்கத் தவறின், அக் கலைகள் ஒரளவே வெற்றிபெறும். மற்றும் இந்நிகழ்வுகள் எப்போதும் ஒரு பகுதி மக்களிடமே வெற்றி பெறும். சமூகத்தில் பெரும்பான்மையாகவுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் ஒரு கலை வெற்றி பெற வேண்டுமாயின் அம்மக்களின் பிரச்சனையை சொல்வதுடன், அதற்கு தீர்வை முன்வைக்க வேண்டும்.

 

இந்த வகையில் சிறந்த நாடகங்கள், சிறந்த இயக்குனர்கள் உருவாக வேண்டின் கடவுளிடம் வேண்டுவதற்கு பதில் ஒடுக்கப்பட்ட மககளிடம் சென்று அவர்களின் பிரச்சனையைச் சொல்வதுடன் அதற்கான தீர்வை முன்வைப்பதனூடாகவே உருவாக முடியும்.

 

மாஸ்ரிஸ்ட்

 

இது தொடர்பாக பலர் தங்களுடைய கருத்துக்களைக் கூறினார்கள். இன்று ஜரோப்பிய ஒன்றிணைவு என்பது உள்முரண்பாடுகளுடன் ஏன் உருவாகிறது. என்ற பிரச்சனையில் அடிப்படைப் பிரச்சனையை கைவிட்டனர். இன்று சர்வதேசப் பொருளாதார நெருக்கடியும் முன்னணிக்கு வந்த ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளின் வளர்ச்சியும், அமெரிக்க இராணுவபலத்துடன் மூன்றாம் உலகநாடுகளிலேற்பட்ட சந்தைக்கான போட்டியைத் தொடர்நது உருவானதே ஜரோப்பிய ஒன்றிணைவு. இங்குள்ள பிரச்சனை முற்றுமுழுதாக மூன்றாம் உலக மக்களையும் சுரண்டுவதே. 1ம் 2ம் உலகயுத்த காலத்தில் முன்னைய நிலையில், இன்று உலகை மறுபங்கீடு செய்ய முனையும் நிலையில் தனித்து சுரண்ட இயலாதெனப் புரிந்து கொண்ட ஜரோப்பிய நாடுகள், தமக்கிடையில் பல முரண்பாடுகளிரு,ப்பினும் சுரண்டுவதில் ஜக்கியப்படடுள்ளனர். ஜக்கியப்பட்ட சுரண்டல் அமைப்பை ஒரு வர்க்கப் போராட்டத்தினூடாக(சுரண்டல் இல்லாமல் செய்வதனூடாக )மட்டுமே வெற்றி கொள்ளமுடியும். மாறாக இப்படியிருக்கும் அப்படியிருக்குமென சொல்லுவதால் யாரும் எதையும் செய்துவிட முடியாது. மாறாக இம்மாதிரியான சுரண்டலில்லாமல் ஒழிப்பதனூடாக மக்கள் இயல்பாகவே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஜக்கியத்தை நோக்கி நகர்வார்கள். இந் நாடுகள் தமக்கிடையில் சந்தைக்காக போட்டியிட்டுக் கொண்டே மக்களைச் சுரண்டுவதில் ஜக்கியப்படுகின்றனர். இப் பிரச்சனையை சுட்டிக்காட்டத் தவறியதுடன். ஜரோப்பிய ஒன்றிணைவில் இலாப நட்டம் பார்ப்பது போல் ஒரு முதலாளி நிலையில் நின்று பிரச்சனையை திசை திருப்பினர். எப்போதும் ஒரு பிரச்சனையின் அடிப்படையை அறிவது மட்டுமின்றி அதற்கான ஒரு தீhவையும் முன்வைக்க வேண்டும். இல்லாமல் முதலாளிகள் போன்று நன்மைகளையும், தீமைகளையும் பற்றி பேசுவதால் ஒடுக்கப்பட்ட மக்கள் எதையும் சாதிக்க முடியாது. சில பிரமுகர்கள் தங்களை பிரமுகர்களாக எண்ண மட்டுமே முடியும்.

 

ஜரோப்பிய இலக்கியமும் நாமும்

 

இத்தலைப்பில் நால்வர் பேசினார்கள். இது தொடர்பாகப் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். பேசிய நால்வரில் இருவர் ஜரோப்பிய இலக்கியத்திலிருந்து விலகி தமக்குத் தெரிந்த மொழி பற்றிக் கதைத்தனர். இவர்கள் எப்போதும் எத்தலைப்பை எடுப்பினும் இறுதியில் அதில் வந்து நிற்பர். இதை பாரதி என்பவரும் சுட்டிக்காட்டினார். ஜரோப்பிய இலக்கியமும் நாமும் என்றால் ஜரோப்பிய இலக்கியப் படைப்புக்களை மொழி பெயர்த்தல், வாய்மூலம் சொல்லல்..... எனப் பலவழிகளுடாக வெளிப்படுத்தபட வேண்டும். ஆனால் அப்படிப் பெரிதாக வெளிக்கொண்டு வராத நிலையில் இந் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் வெளிக்கொண்டுவந்த ஒரு விடயத்தை ஆராய்வோம். ஏனெனில் அவர்கள் எதைச்செய்ய முற்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கலாமோகன் என்பவர் ஒரு கதையை வாசித்தார். அவர் கதையை வாசிக்க முன்பு தான் எதைச் சொல்ல விரும்புகிறேன் என்பதை விளக்கும் போது, எல்லோரிடத்திலும் நின்று வேறுபட்டு உண்மையை உரைப்பதற்க்கு எந்தப் பயமுறுத்தலுக்கும் அஞ்சாது சொல்வதாக கூறி வாசிக்கத் தொடங்கினார். அவர் தொடர்ந்து வாசித்த கதை அவர் போர்த்தியிருந்த போலிமுகமூடி தான் என்பதைப் பார்க்க முடிந்தது.

 

ரசியாவில் 1905ம் ஆண்டுகளில் ஒரு இளைஞனால் ஒரு கோமகன் கொலை செய்யப்படுகிறான். அவனைக் கொலை செய்யும்படி கூற முன்பு, அவன் இயக்கத்திலிருந்த ஒரு பெண்ணை விரும்புவதும், அவள் கடமையை உணர்த்தி அனுப்புவதும், அவன் கொலை செய்யாமல் திரும்புவதும், இரு சிறுவர்கள் அவனுடன்(கோமகனுடன்)வந்ததால் கொலை செய்யவில்லையென அவன் காரணம் கூறுவதும், அவனின் நண்பர்கள் அவனைக் கோழையென நகைப்பதும், அதனால் உந்தப்பட்டு அவன் சவால் விடுவதும், பின் கோமகன் அவனால் கொல்லப்பட்டதும் விதவை மனைவியின் கேள்விக்கணைகளும், அவனையொருக் குற்றவாளியாக இச் சமூகத்தின் முன் ஒரு பயங்கரவாதியாகக் காட்டியிருந்தார் அந்த பிரஞ்சு எழுத்தாளர். இக் கதையில் கலாமோகனுக்கு உடன்பாடு இருந்தபடியால் தான் அவர் இதை வாசித்திருந்தார். முற்போக்கு என சொல்லிக் கொள்ளும் கலாமோகன் போன்றோரின் அரசியல் எந்த விதத்திலும் முற்போக்காக இருப்பதில்லை. இக் கதையின் மீது விமர்சனத்தை சபையோர் வைக்காது கைதட்டி ஆரவாரித்ததினூடாக சபையிலிருந்த முற்போக்குகளும் அவரின் பக்கமே இணைந்து கொண்டனர்.

 

நாம் இக் கதையை விமர்சிக்க முன், நாம் எந்த தனிநபர் பயங்கரவாதத்தையும் ஏற்பவர்களல்ல. ஒரு தனிநபர் பயங்கரவாதத்தை செய்பவனின் நடவடிக்கை ஒட்டுமொத்த அரசு பயங்கரவாதத்தை மக்கள் மீது நடத்தும் அரசுக்குமிடையில் அவனின் நடவடிக்கையில் நியாயம் இருக்கும். ரசிய சமூதாயத்தில் ஒரு கோமகன் எப்படி உருவாகிறான். அவனின் சொத்துக்கள், அதிகாரங்கள் பற்றி மௌனம் சாதிக்கும் இவர்களின் நோக்கு என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்;. ரசிய சமுதாயத்தில் ஆட்சியிடத்திலிருந்த கோமகன் கொல்லப்பட்ட பின்பு அவனின் விதவை மனைவிக்காக கண்ணீர் வடிக்கும் கலாமோகன், அக் கோமகனுடன் மனைவியும் இணைந்து நடத்திய ஆயிரக்கணக்காண மக்களின் படுகொலையைப் பற்றிக் கதைக்கத் தயாராக இல்லை. ஏன் அவர்கள் எந்த சொத்துக்களுமற்ற பட்டினிப் பாட்டாளர்கள் தானே. கோமகன் வீசியெறியும் சில்லறைகளுக்கு அடிபடும் மக்கள் தானே என்ற நினைப்பு கதையை வாசித்த கலாமோகனுக்கு மட்டுமின்றிக் கைதட்டி ஆரவாரித்த முற்போக்குகளுக்குமேயென எண்ணத் தோன்றுகிறது. இக் கோமகன் அங்கு மக்களை ஒட்ட உறிஞ்சி அவர்கள் சாப்பிடுவதற்கில்லாமல் குளிரில் நடுங்கி நாளாந்தம் இறந்துகொண்டிருந்த போது அக் கோமகனுக்கோ அவரின் மனைவிக்கோ கண்ணீர் வரவில்லை. ஏன் கதையை வாசித்த கலாமோகனுக்கே கண்ணீர் வரவில்லை. ஆனால் தனது கணவர் இறந்தவுடன் கண்ணீர் விடும் அப் பெண்ணின் சோகத்தில் ஆழ்ந்து விடும் கலாமோகன், கண்ணீர் வடிப்பது எதன் அடிப்படையிலெனின் சுரண்டும் வர்க்கத்தின் இழப்புக்காகவே. இதனூடாக பின்னால் வந்த பாட்டாளிகளின் ஆட்சியையும் வெறுப்பதையும் பார்க்க முடிகிறது. கதையை வாசித்தவர் சோவியத்தில் சுரண்டல் நடப்பதை விரும்புவதுடன், சோவியத்தின் இன்றைய மாற்றத்தையும் வரவேற்பவரே.

 

அரசு பயங்கரவாதத்திற்கெதிராக போராடுபவர்களை(எந்தவகையானதெனினும்) பயங்கரவாதிகள் (கோமகனைக் கொன்றவனைப் போல்) எனப் பட்டம் சூட்டும் அரசுகளும், இவ்வெழுத்தாளர்களும் ஏகாதிபத்தியத்தின் சிறப்பான சேவகர்களே. இக்கதையில் அவனின் காதல் உணர்வுகளைக் கடமை என்றும். பயந்தாங்கொள்ளி என்றும் சொல்லி அவனை வேண்டுமென்றே இக்கொலையைச் செய்வதற்கு அனுப்பியதாக கதை சொல்லப்படுகிறது. இங்கு புரட்சியை விரும்பும் இளைஞர்களை கொச்சைப்படுத்துவதாகவும், நிர்ப்பந்தம் காரணமாகவே இப்படி ஈடுபடுகின்றனரெனச் சொல்லி, ஒரு புரட்சிக்கெதிராக கலாமோகன் கதை சொல்ல அங்கிருந்த முற்போக்குப் பிரமுகர்களும் கைதட்டினர்.

 

அவ் இளைஞன் கோமகனைக் கொலை செய்து விட்டான். கோமகனின் மனைவி அவனை சந்திக்கிறாள். தனது கணவனுக்காக கண்ணீர் வடிக்கிறாள். ஆனால் அவ்விளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதிற்கெதிராக கதைக்கவில்லை ஏன்?. இதுபற்றி கலாமோகன் ஏன் கண்ணீர் வடிக்கவில்லை. இதிலிருந்து அக் கோமகன் சார்ந்த அரசமைப்பை ஏற்றுக்கொள்ளும் கலாமோகனும், சகபாடிகளும் முற்போக்கு என்றதற்கு அர்த்தமென்ன? இக் கதையையோ, கதையை வாசித்த கலாமோகனையோ விமர்சித்தால் சிலருக்கு கோபம் வரக்கூடும். ஆனால் எம்மால் இப்படிப்பட்ட கதைகளைக ;கேட்டுத் தலையாட்டிக் கைதட்டிவிட முடியவில்லை. இச் சந்தர்பத்தில் தான் அசோக் என்பவர் கேட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதைகள் வரவில்லையை? என்று. இதைக் கேட்கக் கூடாது என சிவசேகரம் தடுத்ததுடன் எமக்கெதிராகவும் தாக்குதலை நடத்தினார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதைகள் எத்தனையோ இருக்க இக்கதையை வாசித்த கலாமோகனும் அதை அங்கீகரித்த சிவசேகரம் போன்றோர்களும் இச் சமூகத்தில் தம்மைத் தாம் முற்போக்குவாதிகளெனச் சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது. மேலும் அசோக் என்பவர் இக்கதையின் ஆசிரியரை இந்திய எழுத்தாளர்கள் புதுமைபித்தன்........போன்றோருடன் ஒப்பிட்டபோது நித்தியானந்தன் விழுந்தடித்து இல்லை என உரத்த குரலில் கூறி கதை ஆசிரியரைப் பாதுகாத்தார். எமக்கு இக்கதை ஆசிரியரைத் தெரியாது. அது போல் அவரின் எழுத்துக்களையும் வாசித்ததும் கிடையாது. ஆனால் அவர் எழுதிய கதையை கேட்டபோது அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரானது என்ற வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக எழுதும் எந்த எழுத்தாளர்களுடனும் ஒப்பிடக் கூடியவரே. இதில் நித்தியானந்தன் காப்பாற்றப் புறப்பட்டது கோமகனின் வாழ்வையும் சொத்துரிமையையும் தான். நித்தியானந்தன் போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி அவர்களின் போராட்டத்திற்கும் எதிரானவர்களென்பதை இக்கதை ஆசிரியரைப் பாதுகாக்க முற்பட்டதனூடாக தெளிவாக இனம் காட்டப்படுகிறது.

 

ஓவியக் கண்காட்சி .

 

ஒவியக் கண்காட்சியில் நான்கு ஒவியர்களால் வரையறுக்கப்பட்ட ஒவியங்கள் பார்வைக்கு வைக்கப்;பட்டிருந்தன. ஒவியங்கள் புரியவில்லை ஏன்? என்ன அவலத்தை பிரதிபலிக்கின்றன, ஒவியங்கள் முன்னைய ஒவியர்களின் தழுவல்களாக வெளிவந்துள்ளன என்ற குரல்கள் பல வெளிவந்தன. ஒரு ஓவியன் வானத்திலிருந்து ஓவியங்களை பெற்று விடுவதில்லை. சமூக இயக்கத்தில் அவனைப் பாதிக்கும் விடயங்களைக் கொண்டே அவன் ஓவியங்களை தீட்ட முயற்சிக்கிறான். அவனுக்கு முன்னைய ஓவியங்கள் சில பாதிப்பைக் கொடுக்கலாம். அவைகளிலிருந்தே தழுவல்கள் உருவாகின்றன. ஒரு ஓவியன் சிறந்த ஓவியனாக மாற வேண்டுமாயின் அவன் சமூக இயக்கத்தில் இயங்கவேண்டும். அதாவது சமூக இயக்கத்தில் இணைந்து போராடும் போது மட்டுமே அவனால் சிறந்த ஓவியங்களை வரைய முடிகிறது. அதை விடுத்து பிற்போக்கு அரசையும், அச்சமூக அமைப்பையும் முழுமையாக நிராகரிக்காமல் அந்நியப்பட்ட நிலையில் வரையும் ஓவியங்கள் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களால் ஏற்கப்படுவதில்லை.

 

ஓவியங்கள் எதுவாயினும் ஒரு பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஓவியத்தில் வெளியாகும் சம்பவங்கள் ஒடுக்கப்படுபவர்களுக்கு அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக அமைந்த எந்த ஓவியமும் இதிலொரு பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு ஓவியனின் ஓவியங்கள் அவன் எதன் பக்கத்தைச் சார்ந்தவன் என்பதை தெளிவாகக் காட்டிவிடும். ஓவியங்கள் சிறப்பான கருத்தைப் பிரதிபலிக்க ஒரு ஓவியனுக்கு அரசியல் பார்வை இருக்க வேண்டும். அப்போது தான் ஓவியம் சிறப்பாக வெளிப்படுவதுடன் அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கு ஓவியம் விளங்கவில்லை என்ற வாதத்தை எடுப்பின், சில ஓவியர்கள் ஏதாவது கோடுகளைக் கிறுக்கி விட்டு அதை ஓவியம் என்பார்கள். அவ் ஓவியங்கள் யாருக்கும் (ஏன் வரைந்தவர்க்கே) புரியாது. ஓவியம் என்பது சமூகத்திற்கு சிலப் பிரச்சனைகளை வெளிக்காட்டப்பட வேண்டும். அப்படி வெளிக்காட்ட முடியாத ஓவியர்கள் தங்கள் போலி முகங்களைக் பாட்ட முன் வராமல் ஏதாவது வரைந்து விட்டு அதை ஓவியம் எனச் சொல்லி விடுவார்கள். இதைப் பொதுவாக புகழ் பெற்ற முதலாளித்துவ சீரழிவு ஓவியங்களிலும், தம் புகழுக்காக சில பிரமுகர்கள் வரையும் ஓவியங்களிலும் காணலாம். ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்கள் தொடர்பான விமர்சனத்தை தலைமை தாங்கியவரை முன்வைக்க கோரியபோது அதை விமர்சிக்காமல் நழுவி விட்டார். இந்த நிகழ்வை எமக்கருகில் இருந்த நித்தியானந்தன் ஜெயபாலனிடம் நல்ல காரியம் செய்தார் என கூறினார். இங்கு விமர்சனம் வைப்பதைத் தவிர்த்த நிகழ்வையிட்டுக் கூறிய கருத்து, கருத்துக் கூறுவதைக் (முரண்பாட்டை) கண்டு அஞ்சுவதுடன் ஓர் ஓவியனின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அமைந்ததுமாகும். ஓர் ஓவியன் விமர்சனத்தை எதிர் நிலையில் நினறு;, பார்ப்பானாயின் அவன் புகழை மட்டும் எதிர்பார்த்து ஓவியம் வரைபவனாக இருப்பதுடன், அவன் சிறந்த ஓவியனாக மாற முடியாது.

 

மனிதனும் மாசுபடும் சூழலும்

இத்தலைப்பில் பேசியவர்கள் சூழல் எப்படி மாசடைகின்றதென விளக்கினர். அதாவது மாசு காணப்படும் தன்மைகள், வடிவங்கள் என நீண்ட தகவல்களை முன் வைத்தார். அதில் குறிப்பிட்ட அனேகமான தகவல்கள் இவ்விலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டோர் அறிந்தவையே. அப்படி அவர்கள் அறியாவிடினும் தகவல்களாக முன்வைக்கப்பட்டன. இத் தகவல்களை வழங்குவதால் என்ன இலாபம். எமது அறிவை வளர்ப்பதாக வைப்பினும் எப்படி சூழல் மாசடைவதைத் தடுக்க முடியும். இதைப்பற்றி வேண்டுமென்றே கதைக்காமல் விட்டதையும், இதற்கெதிராக போராட வேண்டியதையும் சுட்டிக்காட்டி நாம் பேசியதைத் தொடர்ந்து, உணர்ச்சிவசப்பட்டு எழுந்த நித்தியானந்தன் அமெரிக்கா சூழல் அசுத்தம்; தொடர்பான கூட்டத்தில் முரண்பட்டமையைச் சுட்டிக்காட்டி அமெரிக்கா ஒத்துக்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொண்டார். இதே கோரிக்கையை சூழல் மாசடைவதற்கான கூட்டத்தில் மூன்றாம் உலக நாடுகள் சார்பாக கலந்து கொண்டவர்களும் கோரினார்கள். நித்தியானந்தனை விட பல சிறப்பான புள்ளிவிபரங்களுடன் விளக்கி அமெரிக்காவையும், மேற்கத்தைய நாடுகளையும் ஒத்துக்கொள்ளக் கோரியவர்களே. அவர்கள் கோரிக்கையுடன் கைவிட்டது போல் நித்தியானந்தனும் உணர்ச்சிவசமான கோரிக்கையுடன் திட்டமிட்டே பிரச்சனையைத் தொடராமல் திசை திருப்பி கோருவது, பிரார்த்தனை செய்வது எனப் போராட்டத்தை தடுக்கும் வகையில் செயற்பட்டார்.

 

சூழல் மாசடைதல் என்பது ஏகாதிபத்தியங்களாலேயே உருவாக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளை ஒட்டச் சுரண்டிக் கொழுக்கும் இவர்கள், தமது நாட்டில் வெளியேறும் கழிவுகளைத் தடுப்பதற்காக மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்வதும், அளவுக்கு மீறிய நுகர்வைக் கொண்டு இருப்பவர்களும், தமது நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களை மூன்றாம் உலக நாட்டில் உற்பத்தி செய்வதும், தமது நாட்டுக் கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளில் கொட்டுவதும் மற்றும் கடலில் கொட்டுவதும்....... என ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டே சூழலை மாசுபடுத்துகின்றன. இதைப்பற்றி ஏகாதிபத்தியங்களுடன் கதைக்க முற்படும் இடங்களில் இவ் ஏகாதிபத்தியங்கள் சனத்தொகைப் பெருக்கத்தை சூழல் மாசடைவதுடன் சம்மந்தப்படுத்தி தமது சுரண்டலை தொடர்கின்றன.

 

இந்த வகையில் ஏகாதிபத்தியங்களும், மூன்றாம் உலக நாடுகளின் பொம்மை அரசுகளும் செய்து வரும் சூழல் மாசுபடுத்தும் நடவடிக்கையை நாம் கதைப்பதால் மட்டும் தீர்த்துவிட முடியாது. அதுபோல் தனிநபர் என்ற வகையில் சிந்திப்பதாலும் தடுத்துவிட முடியாது. ஆனால் இலக்கிய சந்திப்பில் இவற்றையே செய்தனர். இதை எதிர்த்தபோது எம்மை அவர்கள் எதிரியாகவே பார்த்தனர். இதில் எம்மை எதிரியாக பார்ப்பவர்கள், சூழல் மாசடைதல் தொடர்பாக கதைப்பது என்பது சரியான போராட்டத்தைத் திசைதிருப்பி சூழல் மாசடைவதில் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாப்;பதேயாகும். இதற்கெதிராக போராட அமைப்பு ரீதியாக இணைந்தே போராட வேண்டும். இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் குறைந்த பட்சம் இங்கு போராடும் அமைப்புகளுடன் இணைந்து போராடும் படி கோரத் தயாராக இல்லை. ஏனெனில் இங்கு போராடுபவர்களுடன் இணைந்து போராடும் போது போராட்ட நடவடிக்கைகளை வன்முறை மூலம் இவ்வரசுகள் அணுகுகின்றன. அப்படி அணுகும் போது போராடுபவர்கள் இதற்கு மாற்று வழியாக புதிய அரசை(தாம் அரசை கைப்பற்ற) உருவாக்க முயல்வார்கள். இது ஒடுக்கப்பட்ட மக்களின் அரசாக இருக்கும். இது வெறும் தகவல்களை கூறுபவர்களுக்கெதிரான அரசாக இருப்பதால் போராடவேண்டும் எனச ;சொல்வதை தவிர்த்து உணர்ச்சிவசப்படடு வேண்டுகோளுடன்(பாராளுமன்றத்தில் நடப்பது போல்) மக்களைத் திசைதிருப்பி போராட்டத்தைக் கை விடுகின்றவர்கள் இப்பிரமுகர்களே.


புகலிடவாழ்வும் பெண்களும்.

 

இலக்கியச் சந்திப்பில் இந் நிகழ்ச்சியுடன் எமக்கு முற்றாக கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டமையினால் வெளியேறினோம். இந்நிகழ்ச்சியை நடத்திய நால்வரில் ஒருவருக்கும், வேறு சிலருக்கும் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டது. பெண்கள் பிரச்சனை என்பது பெண்கள் மட்டுமே பேச முடியும் என்ற பார்வையைக் கொண்ட சில பெண்கள் இருந்த நிலையில், ஆண்கள் இருக்க விவாதம் உருவானது. சமர் 2 இல் இது தொடர்பான எமது நிலையை உறுதி செய்ததுடன் இவ்விதழிலும் பெண்விடுதலை சம்பந்தமான சில விடயங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரையும் வெளிவருகிறது. நாம் இவ் விடயங்களை சுருக்கமாக விவாதிக்க முற்படுகிறோம்.
விவாதத்தில் பெண்களால் எழுப்பப்படட பிரச்சனைகளாக வீட்டில் பெண்கள் ஆண்களால் ஒடுக்கப்படுகின்றனர். தொலைபேசியில் ஆண்கள் எம்மை கேட்கும் கேள்ளிகள். இன்று ஜரோப்பிய நாடுகளுக்கு வரும் பெண்களை தரக்குறைவாக கதைத்தல், ஒரு வீட்டில் பெண்ணே தேனீர் தரும் போது முதலில் கணவனுக்கு கொடுத்த பின்பே எனக்கு, பெண்கள் வேலைக்குப் போய் வந்த பின் வீட்டு வேலைகளை செய்தல்....எனப் பல பிரச்சனைகளை முன் வைத்தனர். இப்பிரச்சனைகள் பெண்களுக்கு உண்டு என்பதை சமர் பூரணமாக ஏற்றுக்கொள்கிறது. இதைவிட இன்னும் பல விடயங்களை பெண்கள் எதிர்கொள்ளுவதாகவே நாம் பார்க்கிறோம். பெண்கள் எழுப்பிய இப் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராட ஒரு அமைப்பையும், மறறும் ஒடுக்கப்பட்ட பெண்கள் தொடர்பாகவும் நாம் கதைத்தோம். இதில் அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கைவிட்டு நடுத்தர வர்க்கப் பெண்களாகிய எமது பிரச்சனைக்குப் போராடக்கூடாதா என்று நாம் சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளத் தயாரின்றி வன்மத்துடன் கதைக்க முற்படடனர்.

 

பிரச்சனைகளாக இங்கு எழுப்பிய விடயங்கள் ஜரோப்பிய நாடுகளிலுள்ளவர்களுக்குச் சிறப்பாகப் பொருந்துவதால் இப் பிரச்சனைகள் இலங்கையிலிருந்து இங்கு வந்த போது ஏற்பட்ட பாதிப்புக்களுடன் கலந்ததே. இலங்கையில் எம் ;மக்களின் கலாச்சாரமாக நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமேயுள்ளது. எமது நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்திலிருந்து இங்கு வந்த நாம் ஜரோப்பிவில் காணப்படும் முதலாளித்துவ சீரழிவுக ;(ஏகாதிபத்திய சீரழிவுக்) கலாச்சாரத்துக்குள் வாழ்கிறோம். இந் நிலையில் இவ்விரு விடயங்களுக்குள் முரண்பாட்டுடன் போராட்டம் தீவிரமடைகின்றன. எமது பெண்கள் ஜரோப்பிய பெண்களின் வாழ்க்;கைகளைக் கண்ணுற்று அதன் பாதிப்பால் தாக்கப்படுகின்ற நிலையில் இங்கே பெண் விடுதலைக்கான குரல்கள் எழுகின்றன. இப்படி ஜரோப்பாவில் வெளிவரும் குரல்களை இரு வகையாகப் பிரிக்கலாம்.

 

1) ஜரோப்பியப் பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தின் சரியான அம்சங்களை மட்டும் கோருதல்

 

2) ஜரோப்பியப் பெண்களின் சீரழிவுடன் கூடிய சுதந்திரத்தைக் கோருதல்

 

இவ்விடயத்தில் முதலாவது வகையினரின் கோரிக்கைகள் முழுமையான பெண்விடுதலையைப் பற்றிய ஒரு பார்வை இன்றி, முதலாளித்துவம் உருவான போது பெண்கள் பெற்றுக் கொண்ட சில சலுகைகளையே கோருகின்றனர்.

 

இரண்டாவது வகையினரின் கோரிக்கையோ ஜரோப்பிய பெண்நிலைவாதிகள் என கூறுபவர்களின் சீரழிவையையே கோருகின்றனர். சில பெண்கள் தனியாகவும், அதேநேரம் திருமணம் செய்தோர் (ஆண் பெண் அடங்கலாக) கோருவதுடன், தம்மை முற்போக்குகள் எனவும் அழைத்துக் கொள்கின்றனர். முற்போக்கு என்ற சொற் தொடரை வைத்து எல்லாப் பிரச்சனையிலும் பிழைப்பது போல் பெண்களும் பிழைக்கின்றனர். தமது பலவீனங்களை, தமது செயல்களை நியாப்படுத்த ஈழப்போராட்டத்தில் உள்ள முற்போக்கை தவறாக பயன்படுத்தி சரியான பெண்விடுதலைக்கு எதிராக செயல் ஆற்றுகின்றனர். இவர்கள் வைக்கும் ஒரு இரு கருத்துக்களை ஆராய்வோம்.

 

சிலர் திருமணம் என்பதை செக்ஸ் மட்டுமென்ற வரையறைக்குள் மட்டுப்படுத்திவிடுகின்றனர். இதிலிருந்து கொண்டு எமது சமுதாயத்திலுள்ள ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவை இவர்கள் தவறானதெனச் சொல்லி ஆண், பெண் இருவரும் திருமணத்திற்கு முன்போ பின்போ பல ஆண்களுடனும், பல பெண்களுடனும் செக்ஸ் வாழ்வை கோருகின்றனர். இது ஜரோப்பிய சமூகத்தில் சீரழிந்த கலாச்சாரமாக பரிணாமம் அடைந்துள்ளதுடன், பொதுவாக இது தலைநகரங்களில் மட்டும் காணப்படும் சிறப்பான தன்மையே. இதை எம்மவர்கள்(ஆண்கள்,பெண்கள்) கோருவதென்பது ஒரு விடுதலையல்ல. மாறாக பெண் சீரழிவே. எமது சமுதாயத்திலுள்ள ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையில் ஒரு சில தவறான அம்சங்கள் இருந்தபோதிலும் அவ்வுறவு முறையே சரியானது. இது இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல ஜரோப்பியாவிலும் பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

இக்கூட்டத்தில் பேசிய பெண் தனக்கு காதல் ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். இவ்வாதம் நாம் எடுக்கும் கருத்துடன் எந்தளவு முரண்பாடு கொண்டதெனப் பார்க்கலாம். அப்பெண் முன்பொரு கவிதை எழுதிய போது அதில் பயன்படுத்திய வசனங்களை இக்கட்டுரையில் பாவிப்பதை தவிர்த்து விடுகிறோம். ஏனெனில் அச்சொற்தொடர்கள் எம்மத்தியில் பேசுவது தரக்குறைவானது என்பதால். கவிதையில் ஓர் ஆணின் ஆண்மையை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடெனக் கூறியிருந்தார். இவ் விவாதத்தில் இவருக்கு காதல் ஏற்பட்டதெனில் ஆண்மையில்லா ஓர் ஆணையா விரும்புகிறார்.? அதையெப்படி அறிந்து கொண்டார். இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவையே. இதில் ஓர் ஆணின் ஆண்மையை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக காட்ட முயன்ற இப் பெண்ணிலைவாதி பெண் ஒடுக்கு முறையை தவறாகப் பார்ப்பதை இங்கு நாம் பார்க்கலாம். இயற்கையின் பரிணாமத்துடனேயே ஆண், பெண் உருவமைப்பும், அவர்களிடையே வேறுபாட்டையும் தோற்றுவித்தது. இதுவே ஆணுக்குரிய ஆண்மையை உருவாக்கியது. பெண்ணை ஒடுக்கவேண்டும் என்று ஆணால் உருவாக்கப்பட்டதல்ல. இதை ஆண் உருவாக்கியதாக பார்க்கும் இப் பெண்ணிலைவாதியின் கருத்துக்கள் உண்மையான பெண்விடுதலை கருத்துக்களல்ல. இது போன்ற ஒரு பெண் கருவை சுமக்கும் நிகழ்வென்பது ஆணால் திணிக்கப்பட்டதல்ல. ஒரு பெண் கருவை சுமப்பதென்பது பரிணாமத்தின் நிகழ்வுகளே. இதை ஆண்களால் திணிக்கப்பட்டதாக கருதுபவர்கள் பெண்கருவைச் சுமக்கும் இந்நிகழ்வை பெண்விடுதலையுடன் முடிச்சுப் போட்டு பெண்ணிலையின் சரியான பக்கங்களைப் பார்க்கத் தவறுவதுடன் அதைத் தடுக்கின்றனர். ஓர் ஆணின் ஆண்மையும், ஒரு பெண் கருவைச் சுமக்கும் தன்மையும் ஒரு பரிணாம வளர்ச்சியே. இதைக் கொச்சைத் தனமாகப் பார்ப்பதென்பது பெண்விடுதலை தொடர்பான பார்வையின் குறைபாடுகளே. இப்படிப்பல......

 

நடுத்தர வர்க்கப் பெண்களாகிய நாம் எமக்குள்ள பிரச்சனைகளைக் கதைக்கக் கூடாதா? என்று குரல் எழுந்தன. இதில் நடுத்தர வர்க்கப் பெண்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கப் பெண்களும் தமது பிரச்சனைகளை கதைக்க வேண்டும். ஆனால் இங்கு பிரச்சனைகளை கதைப்பது மட்டுமா? என்பதே நமது கேள்வி. இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டோர் பெண் எழுத்தாளர்கள் என அறிமுகமானவர்கள். இதற்கெதிரான ஒரு போராட்ட வடிவத்தைப் பற்றிக் கதைக்காமல் விட்டு நீங்கள் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்களென சொல்வதால் எதையும் சாதிக்க முடியாது, போராட்டம் ஒன்றினூடாக மட்டுமே பெண்விடுதலையை அடையமுடியும். போராட்டம் மூலம் விடுதலையடைய ஒரு ஸ்தாபனம் வேண்டும். அந்த ஸ்தாபனம் நடுத்தரவர்க்கத்தை மட்டும் பிரதிபலிப்பின் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. ஏனெனில் ஒரு பெண் தான் மட்டும் போராடி பெண் அடக்குமுறையை உடைக்க முடியாது. அதுபோல் நடுத்தர வர்க்கப் பெண்கள் தமக்கென அமைப்புக்கூடாக ஒருபோதும் சமுதாயத்திலுள்ள அனைத்து வர்க்கப் பெண்களுக்கும் மட்டுமின்றி தனது வர்க்கத்திற்க்கும் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. எனவே அனைத்து வர்க்கப் பெண்களும் விடுதலையைப் பெற அனைத்து வர்க்கப் பெண்களின் பிரச்சனைகளையும் ஆராய்வதும் அதேநேரம் அதற்கான வேலைத்திட்டம் எப்படியிருக்கவேண்டுமெனவும் ஆராயவேண்டும். பெண் ஒடுக்குமுறையை வெறும் சம்பவங்களினூடாக இனங்காண்பது என்பது பெண் ஒடுக்குமுறையை இனம் காண முடியாமல் தடுக்கும். பெண் ஒடுக்குமுறையென்பது பெண்ணின் உழைப்பு மதிக்கப்படுதல் தொடர்பானதே. உழைப்பு ஆண்களால் மட்டுமின்றி, ஆண்களுக்கு சார்பாக உருவாகியுள்ள அரசமைப்பிலும் பெண்களின் உழைப்பு மதிக்கப்படுவதில்லை. உழைப்பு மதிக்கப்படாமல் விடுவதிலிருந்தே உருவாகிறது பெணகளின் அனைத்து ஒடுக்குமுறைகளும். பெண்களின் பிரச்சனைகளுக்காக மட்டும் தனித்துப் போராடியும் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. ஏனெனில் பெண் ஒடுக்குமுறை சமூக கட்டுமானமாக (அதாவது ஏகாதிபத்தியம் சார்பாக) உருவாகியுள்ள நிலையில் இதையுடைக்க அனைத்துப் பிரச்சனைகளுக்காக (சமூககட்டுமானத்தையுடைக்க) போராடும் போது மட்டுமே பெண்ணும் விடுதலையைப் பெறமுடியும். இது ஒரு புரட்சியுடன் மட்டுமின்றி கலாச்சார மாற்றத்தினூடாகவே உழைப்புக்கு மதிப்பு பெறுவதுடன் பெண் விடுதலையைப் பெறமுடியும். எனவே பெண்விடுதலை தொடர்பாக சிந்திப்பவர்கள் ஒரு ஸ்தாபனத்தின் (அனைத்து பெண்களையும் கவனத்தில் எடுத்து) உருவாக்கம் பற்றியும், ஒரு சமூக மாற்றத்தைப பற்றியும் சிந்திக்க வேண்டும்.

 

 

Read more...

இலக்கிய சந்திப்பும் பிழைப்புவாதப் பிரமுகர்களும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:19
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

இன்று ஜரோப்பாவில் முற்போக்குகள் எனக் கூறிக் கொள்ளும் எல்லோரையும் நாம் முற்போக்குகளாக ஏற்காமையைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம். இம் முற்போக்குள் விமர்சனமா? என்று கேள்விக் கணைகளுடன் தாக்குகின்றார்கள். முற்போக்கு எனச் சொல்லிக் கொண்டவர்களின் எம் மீதான தாக்குதலை தொடர்ந்து நாம் இது தொடர்பாக விளக்க முற்பட்டோம். சமர் தனக்கென ஒரு அரசியல் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலிருந்தே எமது விமர்சனம் அமைகிறது. நாம் எமது கருத்துக்களை அரசியலின்றி வெறும் தாக்குதலாகச் செய்யவில்லை. அப்படி அரசியலுக்கப்பால் தாக்குதல் செய்ததாக எழுத்திலோ எதிலோ சுட்டிக்காட்டின் சுயவிமர்சனத்தை நாம் பூரணமாகச் செய்யத் தயாராக இருக்கின்றோம். நாம் தனிநபர் மீது ஏன் இன்று விமர்சனத்தை முன் வைக்க வேண்டியுள்ளது என்பதை விளங்கப்படுத்தினோம். கடந்த சமர் இதழில் ஆசிரியர் தலையங்கம், இவ்விதழின் ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதியின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அப்போது உதாரணத்துக்கு ஓரிரு விடயங்களே சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு பெண்ணுடன் ஏழு பேர் தொடர்பு கொண்டதை சுட்டிக்காட்டி (என்-எல்-எவ்-டி- வரலாற்றைப் படிக்கவும்) இதை விமர்சிக்கக் கூடாதா? ஜந்தாறு பெண்களை அரசியலைப் பயன்படுத்தி ஏமாற்றின் விமர்சிக்கக் கூடாதா? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

 

இதைத் தொடர்ந்து உடனடியாக ஜெயபாலன் எழுந்து கடுமையான வார்த்தைகளால் வாயில் வந்தபடி சமரைத் தாக்கினார். அத்துடன் மாவோவை உதாரணத்துக்கு எடுத்தவர் சமர் சார்பாகப் பேசியவரைக் குறிப்பிட்டு உம்மை மாவோயிஸ்ட் என நம்பியதாகவும், மாவோவின் வாழ்வில் சம்மந்தப்பட்ட பெண்கள் தொடர்பாக மாவோ மீது அவதூறு சொல்வதாக கூறினார். ஜெயபாலன் கூறிய இக் கூற்று மாவோவுடன் ஒப்பிட்டு, அதை தனக்குப் பொருந்துவதை தாமாகவே ஏற்றுக்கொண்டார். மாவோ வரைமுறை மீறி பல பெண்களுடன் தொடர்புகொண்டிருந்தால் அது அடிப்படையில் தவறானது மட்டுமின்றி அது விமர்சனத்துக்குட்பட்டதே. மாவோவின் தத்துவங்களை ஏற்கும் நாம் அவரின் தவறுகளை விமர்சிப்பவர்களே. அப்படி மாவோ செய்திருந்தால் அதைச் சொல்லி ஜெயபாலன் செய்யின் அது மாவோவை சொல்லிப்பிழைக்கும் பிழைப்புவாதமே. மாவோ பெண்கள் தொடர்பாக மத்திய குழுவில் விவாதம் நடைபெற்றதாக அறிகின்றோம். அங்கு விமர்சனம், சுயவிமர்சனம் இது தொடர்பாக நடைபெற்றிருக்கும். இது தொடர்பாக பெரிதாக தெரிந்து கொண்டிராத நிலையிலேயே உள்ளோம். ஜெயபாலன் இதை நியாயப்படுத்தி தனது செயலை நியாயப்படுத்த முயன்றார். கடந்த காலப் போராட்டத்தில் ஜெயபாலன் பெண்களை சதைப் பிண்டங்களாக பயன்படுத்தியதை பலரும் அறிந்ததே. இவர் ஆண் பெண்ணுக்கிடையிலான உறவை தவறாகப் பயன்படுத்தினார். இவர் சமூக அரசியல் இயக்கத்தைப் பயன்படுத்தி அதில் பங்குகொண்ட பெண்களுக்கு தன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் தசைகளை ரசித்தவர் தான். இதை மறுக்கமுடியாத வகையில் (உமாமகேஸ்வரன் கொலைகளை செய்தது போல்) கடந்த காலத்தில் இவருடன் இயக்கத்திலிருந்த அனைவரும் அறிவர். குறித்த பெண்கள் இவர் தம்மை மணம் செய்வார் (இவரின் பெண்விடுதலை தொடர்பான கருத்துக்கள் மீதான நம்பிக்கையில் ) என்ற நம்பிக்கையில் தம்மை இழந்தவர்கள் தான். நீர் மாவோவை வைத்து நியாயப்படுத்தாது சுயவிமர்சனத்தை மனப்பூர்வமாக செய்யவும். இவர் பேசி முடிந்த பின் சமர் ஆசிரியரை வெளியில் சந்தித்து தான் தவறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார். மன்னிப்புக் கொடுக்க என்ன எம்மைக் கர்த்தர் என நினைத்தாரா? ஏனெனில் இது சுயவிமர்சனமாக அமையவில்லை. அடுத்த நாள் நடந்த சம்பவம் இதை உறுதி செய்தது.

 

அன்று தொடர்ந்து ஜெயபாலன் பாசாங்கு தொடாபாக இரு விடயங்களை சுட்டிக்காட்டினார். இது எம்மை மார்க்சிசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் பாசாங்கு செய்வதாக குற்றம் சாட்டினார். பாசாங்கு, மற்றும் மாவோ தொடர்பான கருத்துக்களை கூறி சமர் மீது தாக்குதலை தொடுத்த போது சபையிலிருந்தோர் கை தட்டி ஆரவாரித்தனர். மார்க்சிசத்தின் மீது எமது நிலையை பாசாங்கு எனச் சொன்னதுடன் மார்க்சிசத்தின் மீதும் தாக்குதலைத் தொடுத்தார். மார்க்சிசம் இறந்துவிட்டதென சொன்னதுடன் எப்படி ஏன் என்று சொல்லாமல் விட்டதுடன், எம்முடன் விவாதிக்க தயாரின்றி மாhக்சிசத்தை கதைப்பதைத் தடுக்கும் வகையில் நையாண்டி செய்து, தனிநபர் தாக்குதலாக மாற்றினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தொடரில் நாம் அனைத்துப் பிரச்சனைகளின் மீதும் அரசியலைக கொண்டுவர முற்பட்டபோது (மார்க்சிசமல்ல) அவர் தாக்குதலை நடத்தியதுடன், எம்மை பேசவிடாது தடுத்தார்.

 

மார்க்சிசம் இறந்து விட்டதெனச் சொல்லி வர்க்கப் போராட்டம் தொடர்பாக கதைக்க முற்பட்ட போது வெறுப்பைக் காட்டும் ஜெயபாலன் எந்த அரசியல் ஆய்வில் நின்று இம் முடிவைச் சொன்னார் எனப் பார்ப்போம் (ஜெயபாலன் பி-எல்-ஓ-டி-அமைப்பில் இணையும் முன் ஒரு சரியானதொரு அரசியலைக் கொண்டிருக்கவில்லை. அப்படி ஒரு சரியான அரசியலைக் கொண்டிருப்பின் பி-எல்-ஓ-டி-அமைப்பில் இணைந்திருக்கவே முடியாது. பி-எல்-ஓ-டி இல் இணைந்திருந்த ஜெயபாலன் பி-எல்-ஓ-டி-இன் உட்படுகொலையைத் தொடர்ந்து பலர் வெளியேறியபோதும் பி-எல்-ஓ-டி-க்கு மார்க்சிச மூலாம் பூசி நியாயப்படுத்தி பதவிக்காக அலைந்தவர். அத்துடன் இவர் இவ் அரசியலைப் பயன்படுத்தி பல பெண்களைப் தவறாகப் பயன்படுத்தியவர். பி-எல்-ஓ-டி இன் இயல்பான அழிவுடன் தானாக ஒதுங்கிக் கொண்ட ஜெயபாலன், தனது கடந்த காலத்தையோ தான் நியாயப்படுத்திய மார்க்சிசத்தையோ சுயவிமர்சனம் செய்யவில்லை. மாறாக அதே அரசியலைத் தொடர்ந்து பிழைப்புவாத நோக்கில் இன்று கடந்தகாலத்தின் மீதும் எந்த சுயவிமர்சனத்தையும் செய்யாது தொடரும் ஜெயபாலன் மார்க்சிசம் இறந்து விட்டதெனச் சொல்ல எந்தவித தார்மீக பலமும் கிடையாது.

 

அடுத்தநாள் பெண்விடுதலை தொடர்பான கருத்துக்கள் வெளிவந்தன. அதில் கருத்துச் சொன்ன நான்கு பெண்களில் மூன்று பெண்களின் கருத்துக்கள் இன்று ஜரோப்பாவிலுள்ள பெண்களின் பிரச்சனையைத் தொட்டு நின்றது. இது தொடர்பாக நாம் அவைகளைத் தீர்க்க என்ன மாதிரியான வேலைத்திட்டத்தை அதாவது எந்த வழிகளுக்கூடாகவெனக் கேட்க முற்பட்டபோது ஜெயபாலன் எம் மீது தாக்குதலைத் தொடுத்தார். தனிநபர் மீது அவதூறு செய்தார். குறித்த நபரின் மனைவி இதில் பங்கு கொள்ளாமையை சொல்லி அவர் மனைவியை அறையில் பூட்டி வைத்து விட்டு வந்ததாகச் சொன்னார். நோர்வேயிலிருந்து வந்த ஜெயபாலன் வாயில் வந்தபடி கண்மூடித் தனமான குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் தனது மனைவி மனநோயாளியாக உள்ளார் எனச் சொல்லி கண்ணீர் வடித்து கூட்டத்தின் அனுதாபத்தை பெற முயன்றார். மனைவியெனின் எந்த மனைவியெனத் தெரியாத நிலையில், மனைவி மனநோயாளியாவதற்கு தானே காரணம் என்பதை என்ன பேசுகின்றோம் எனத் தெரியாமல் ஏற்றுக்கொண்டார். அத்துடன் தான் தற்கொலை செய்ய முயன்றதாகவும் சொன்னார். இவரின் கண்மூடித்தனமான உளறல்களுக்கூடாக தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டார்.

 

அதே நேரம் ஜெர்மனியிருந்து வந்திருந்த பெண்ணொருவரும் (இவர் ஜெயபாலனின் தங்கை) வேறொரு பெண்ணும் இதே அவதூற்றைப் பொழிந்தனர். இவற்றிக்கும், அதற்கு முதல் நடந்த சமர் இதழ் மீதும், மார்க்சியத்தின ;மீதும் தொடுத்த தாக்குதலுக்கும் பதிலளிக்க முற்பட்ட போது எமக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் தாக்குதலாக மாறும் நிலையையும் அடைந்ததை தொடர்ந்து நாம் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதைக் கண்டித்து சபையிலிருந்து வெளியேறினோம். நாம் வெளியேறிய பின் ஜெயபாலன் சபையில் மன்னிப்புக் கேட்டிருந்தாராம். இவரின் மன்னிப்பென்பது அர்த்தமற்றது. தாம் எதையும் வாயில் வந்தபடி கதைத்துவிட்டு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்பது போல் கேட்பது சுயவிமர்சனமாகாது. முதல் நாளும், இரண்டாவது நாளும் இருமுறை மன்னிப்புக் கேட்டு சுயவிமர்சனமென்பதை பாவமன்னிப்பென்ற நிலைக்கு கேவலமாக்கியதை பார்க்க முடிகிறது. ஜெயபாலன் தன்;னை தேவையான நேரத்தில் இடதுசாரியென பறைசாற்றிக் கொள்பவர். அவர் மார்க்சியத்தின் மீது தாக்குதலை தொடுத்ததுடன், மற்றவர்கள் மார்க்சியத்தின் மீது தொடுத்தபோது, அவர் அங்கீகரித்து கைதட்டி ஆரவாரித்ததினூடாக மிகத் தெளிவாக ஒடுக்கப்படும் வர்க்கத்தை சுரண்டுவதை ஏற்றுகொண்டார்.

 

ஆரம்பத்தில் எமது கருத்துக்களை தொடர்ந்து பாரதி என்பவர் எம் மீது தாக்குதலை நடத்தினார். நாம் எமக்கென ஒரு கொள்கையிருக்கின்றதென சொன்னதை சொல்லி இவர்கள் பயங்கரவாதிகள் எனச் சொன்னது தான் தாமதம் சபை கர ஒலிகளால் நிறைந்தது. ஏகாதிபத்தியங்கள் முதல் மூன்றாம் உலக நாடுகளை ஆளும் அரசுகளும், ஏன் புலிகளும் கூட அவர்களுக்கெதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் எனச் சொல்லி அழைக்கின்றனர். இக் கருத்தை கூறியவர்க்கும், கைதட்டி பாராட்டுக் கொடுத்தவர்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் என்ன வேறுபாடு உண்டு. இவர்கள் அவர்களின் செல்லப்பிள்ளைகளாகவும், அவர்களின் இருப்பை அங்கீகரிப்பவர்களாகவும் இருந்தனர். தொடர்ந்து பாரதி அடுத்த நாள் பெண்கள் விடயத்தில் நாம் அரசியலுடன் பேசியதைப் பார்த்து கூறினார். இவர்கள் போப் போன்ற சமயவாதிகள் என்றார். இப்படி அவர் கூறியவுடன் பலத்த கரகோசங்களுடன் சபை மகிழ்ச்சியை தெரிவித்தது. இது இன்று எமக்கு மட்டும் நடந்ததில்லை. யார் புரட்சியை நேசித்தார்களோ அவர்கள் மீது அரசுகள் மற்றும் பித்தலாட்ட பேர்வழிகள் இது போன்ற குற்றச்சாட்டை அடுக்கியவர்களே. உளவாளிகள், சமயவாதிகள், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள்......என யார் சரியான புரட்சிக்கு குரல் கொடுக்கிறார்களே அவர்களுக்கு வளங்கப்பட்ட பட்டங்களே. இதை கூறிய பாரதியோ அதற்கு கைதட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டவர்களோ, எதைச் செய்கிறார்கள் என்பதை பயங்கரவாதிகள், சமயவாதிகள் ............ என்ற கூற்றுக்களுடன் தம்மை இனம்காட்டிக் கொண்டார்கள்.

 

பாரதி பேசிய இரு முறையும் சமர் மீது முரண்பாட்டுக்குள் முரண்பாடு கொண்டதாகக் கருத்துக் கூறியவர் முரண்பாட்டை சுட்டிக்காட்டவில்லை. மீண்டும் கேட்டோம் என்ன சொல்லுகிறீர்களென்று ஆனால் அவரால் எதையும் விளங்கப்படுத்த முடியாமல் வெறும் வார்த்தைகளை மட்டும் கொட்டி உளறினார். கூட்டத்தில் ஓரிருவர் அரசியல் நிலையில் நின்று பிரச்சனைகளைப் பார்க்க முற்பட்டபோது எம்மை நோக்கி பாரதி கேட்டார் எத்தனை பேர் வந்தீர்கள் என்று. இதற்கூடாக இவர்கள் மார்சிசத்தைக் கதைப்பதையோ, அதை நேசிப்பவர்களையோ வெறுப்புடன் பயங்கரவாதிகள், சமயவாதிகள் என அலறி தமது ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்கள்.

 

பாரதி கார்த்திகை 92 இன் 21ம், 22ம் திகதிகளில் ஜெர்மனியில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அதில் இடம்பெற்ற விடயங்களாவன,

 

1) தேசியவாதம்

 

2) தேசியவாதமும் மார்க்சிசமும் ஒரு தொடர்பற்ற கூட்டு

 

3) தமிழ் தேசியம்

 

இந் நிகழ்ச்சிகளில் மார்க்சிசத்தை வெறுக்கும் பாரதி உட்பட சிலர் கலந்து கொண்டதுடன், வேறு சிலரும் இதில் மார்க்சிசத்தை வெறுக்கும் இவர்களின் கலந்துரையாடலின் நோக்கு எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இவர்கள் மார்க்சிசத்தை நேசிப்பவர்களை பயங்கரவாதிகள், சமயவாதிகள்,..... எனச் சொல்வதனூடாக இவர்கள் சரியான ஒரு தேசிய விடுதலையைச் சிந்திப்பவர்களைக் குழப்புவது அல்லது அழிக்கும் நோக்குடன் சில பிரமுகர்கள் தமது பிழைப்பை நடத்துவதற்கு வழியமைத்ததே இந்நிகழ்வு.

 

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிவசேகரம், மார்க்ஸ்ட், மனிதனும் மாசுபடும் சூழலும், ஜரோப்பிய இலக்கியஙகளும் நாமும்........ எனப் பல நிகழ்ச்சியில் உரையாற்றினர். இவர் ஆற்றிய உரைகள் எதிலும் இடதுசாரி அரசியலைக் கைவிட்டு தனது போலிமுகத்தை(அது அல்லது இதுவென) காட்டிக்கொண்டார். இவர் மார்க்சிசத்தை கதைத்தபோது அதற்கெதிராக குரல் கொடுத்ததுடன் கதைப்பதைத் தடுப்பதில் முன்னின்று செயற்படுத்தினார். கலாமோகன் வாசித்த கதையைத் தொடர்ந்து அசோக் என்பவர் கேட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக பிரஞ்சு மொழியில் சிறந்த இலக்கியம் இல்லையே என்று. அக் கேள்விக்கு கலாமோகனே பதிலளிக்கவேண்டிய நிலையில் சிவசேகரம் கருத்து சுதந்திரத்தைப் மறுக்கும் வகையில் செயற்பட்டார். பிரஞ்சுப் புரட்சியும் சமகால இலக்கியமும் என்ற தலைப்பில் நாளை ஒருவர் கட்டுரை வாசிப்பாh.; அப்போது அவர் இதற்கு பதில் சொல்வார் என்றும், இப்போது கேட்க முடியாதென்றார். அடுத்தநாள் கட்டுரை வாசித்தவர் அதற்கு பதிலளிக்கவில்லை. கருத்துக்குப் பதிலளிப்பதைத் தடுத்ததுடன் இதை நாம் சுட்டிக்காட்டி இதன் தலைப்பு .ஜரோப்பிய இலக்கியமும் நாமும் எனச் சொன்னதுடன், தெரியாவிட்டால் தெரியாதெனச் சொல்வது தானே என்றோம். நாம் அந்நேரம் இந்த தலைப்பை மாறி உச்சரித்த சிவசேகரம் தலைப்பே சரியாகத் தெரியாமல் விமர்சிப்பதாகச் சொன்னதுடன் கேள்விக்குப் பதிலளிப்பதை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டார். சிவசேகரம் எப்போதும் தனது கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல் நழுவல் போக்குடன் சொல்பவரே. இவர் இலங்கையிலுள்ள சீனசார்பு புதியஜனநாயக் கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினரானவர். இவர் அனைத்துப் பிரச்சனைகளையும் பாராளுமன்ற வழிகளுடாக தீர்க்கப்பட முடியும் எனக் கருதுபவர். அதாவது 1970—1977 க்கிடைப்பட்ட காலத்திலிருந்தே சிறிமா சார்பு அரசுக்கள் போன்ற வடிவங்களால் தீர்க்க முடியுமெனக் கருதுபவர். சிறிமாவின் காலம் பொற்காலம் எனக் கருதுபவர். இன்று {-ஜ-தே-க- இடத்துக்கு மாற்றுத் தலைமையை(கூட்டு முன்னணியை) ஆதரிக்கத் தயாராகவுள்ளார். இவர்கள் தாம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதில் நம்பிக்கையற்றவர்கள். தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டுபவர்களுக்குச் சேவை செய்யக் கோருபவர்கள். இக் கட்சியிலுற்ற சிவசேகரம் போன்றோர்pன் கருத்து எப்போதும் புதியஜனநாயக கட்சியின் சார்பானதாகவே உள்ளது. அக்கருத்துக்கள் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை. இவர் பின் இடதுசாரிக் கருத்துக்களை உச்சரித்துக்கொண்டு தொழிலாளர்களை தமது அதிகாரத்துக்குட்படுத்தி போராடுவதை தடுக்கும் பச்சோந்திகள்.

 

இவர்கள் பாட்டாளி வர்க்கக் கருத்துக்களை உச்சரித்தவர்களைக் கண்டு வெறுப்பதுடன், அவர்களின் கருத்து சுதந்திரத்தை மறுக்கத் தம்மால் இயனறவரை முயல்வார். இதை நாம் 1971----1977 க்கிடைப்பட்ட காலத்தில் சிறிமா மக்களின் கருத்து சுதந்திரத்தை பறித்ததுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவர் தனது கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல், அடிப்படையைத் தொடாமலும் நசுக்கிவிடும் போலிகளே. இவர் வர்க்கப் போராட்டத்தை ஏற்பவரல்ல. இன்று ஒடுக்குபவர்கள் வன்முறைகளுக்கூடாக ஆளுகின்றார்கள். ஒடுக்கப்படும் மக்கள் அதற்கெதிராக வன்முறைகளுக்கூடாகவே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்பதை ஏற்றது கிடையாது. இவர் பாராளுமன்ற வழிகளுக்கூடாக சமூகத்தை மாற்றிவிடமுடியும் எனச்சொல்லி தமது பிழைப்பை சீனாவுடன் நடத்துகின்றனர். சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதைக் கூடக் கண்டிக்க திராணியற்ற பிரமுகப் பச்சோந்திகள்.

 

மார்கழி 92 இன் சுவடுகள் இதழில் சிவசேகரத்தின் கருத்துக்களையொட்டி விமர்சனம் வெளி வந்திருந்ததது. அக் கருத்துக்களுடன் உடன்படுகிறோம். அதே நேரம் இது தொடர்பாக நாம் ஆராய்வோமாயின் தற்கொலை என்பதை வீரம், தியாகம் எனச் சிவசேகரம் வர்ணித்ததுடன் புலிகளின் பேச்சாளராகவும் மாறியிருந்தார். அண்மையில் பி.பி.சி. யில் புலிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பிரபாகரன் சயனைற் அருந்தும் தற்கொலைக் கொலையாளிகளின் வீரம், தியாகம் பற்றிச் சொன்ன கருத்துக்கும் சிவசேகரத்தின் கருத்திற்கும் வேறுபாடு கிடையாது. எதிரியிடம் சிக்காமலிருக்க தற்கொலை தான் ஒரே மார்க்கம் எனின் புலிகளிடம் இன்று சிக்கியுள்ள 5000 க்கும் மேற்பட்ட கைதிகளும் சயனைட் அருந்தி இறந்திருக்க வேண்டும். புரட்சியெனக் கூறி சிவசேகரம் போன்றோர் தலைமைகளில் இருந்திருந்தால் இன்று புலிகளின் வதைமுகாமிலுள்ள 5000க்கும் மேற்பட்டவர்களும் மரணித்திருக்க வேண்டும். உண்மையான புரட்சிவாதி தற்கொலைக்குப் பதில் சிறைவாழ்வை எதிர் கொள்ளல் வேண்டும். அவ் வாழ்வை எதிர் கொள்வதே வீரம் மட்டுமின்றித் தியாகமுமாகும். சிவரமணி போன்றோரின் தற்கொலை என்பது அடிப்படையில் கோழைத்தனமானது. சிவரமணி வெறும் கவிதைகள் மட்டுமென்ற நிலையிலிருந்தததுடன், தனது அரசியல் பாதையை வகுத்துக் கொள்ளாத நிலையிலிருந்ததும் தற்கொலைக்கான காரணம் எனலாம். கலை கலைக்காக மட்டுமென்ற வாதம் உடையவர்கள் கூட சில பிரச்சனைகளைக் கண்டு அதன் மீதான வெறுப்புடன் தற்கொலைகளை நாடுகின்றனர். அப் பிரச்சனைகளை மாற்றத் திராணியற்ற இவர்களின் மரணம் கோழைத்தனமானது. இதைத் தியாகம் வீரம் எனப் பிதற்றி சிவரமணியைச் சொல்லிப் பிழைக்கும் சிவசேகரத்தின் அரசியல் இதுவே.

 

ரதி உங்கள் வாதம் அடிபட்டு விட்டதெனத் தொடங்கிய நித்தியானந்தன் மார்க்சிசத்தை அவதூறு செய்து தனது கடந்தகால அரசியலின் தொடர்ச்சியை இனம் காட்டினார். உங்கள் வாதம் அடிபட்டுவிட்டது என்றதனூடாக சமூக மாற்றத்தை விரும்பிய அனைவரின் கருத்துக்களையும் சுட்டிக்காட்டினார். எமது வாதம் இச்சபையிலும் சரி, உலகத்திலும் சரி இன்றும் உயிர் வாழ்வது மட்டுமின்றி அதுவே உலகத்தை மாற்றும் தன்மை கொண்டது. இன்று சோவியத் முதல் சீனா வரை ஆட்சியிலுள்ள சீரழிந்த முதலாளித்துவமே(நித்தியானந்தன் விரும்புவது போல்) சமூகப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமெனக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் மூலம் அந்நாட்டின் மக்கள் முன்பு இருந்ததைவிட மிக மோசமான வறுமைக்குள் சென்றதுடன் மோசமான அடக்கு முறையையும் எதிர்கொள்கின்றனர். அந்நாடுகளில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் கம்யூனிஸ்ட்கள் இன்று மீண்டும் வீறுநடை போடுவதை இவர் போன்றவர்கள் கண்ணிருந்தும் குருடான அரசியல் குருடர்களுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்.இன்று மார்க்சிசம் அதாவது வர்க்கப் போராட்டம் உலகை மாற்ற முடியாதெனின் இவரும், இவர் போன்றோரும் வைக்கும் தீர்வு தான் என்ன? நித்தி, உமக்கு முதுகெலும்பு இருப்பின் நீரும், உமது சகபாடிகளும் சேர்ந்து வர்க்கப் போராட்டத்திற்கான மாற்றுத் தீர்வை (மாற்று வழியை) முன் வையுங்கள். உங்கள் அனைத்துக் கருத்தின் மீதும் அத் தீர்வையும், வழியையும் வையுங்கள். எது உங்கள் தீர்வு?

முகமூடிக்குள் நின்று பேசுவதைக் கைவிடுங்கள். எது உங்கள் அரசியல் வழியோ அதை முன்வையுங்கள்.

 

இவரும், இவர் போன்றவர்களும் அப்படி வைக்கவே போவதில்லையென நாம் நம்புகிறோம். ஏனெனில் வர்க்கப் போராட்டமே சுரண்டலை ஒழிக்கும். அது பிழையெனின் சுரண்டலை ஆதரிக்கும் இவர் போன்றவர்கள் எப்படி தமது அரசியல் கருத்துக்களை நேரடியாகச் சொல்லிப் பிழைக்க முடியாமல் போய்விடும். இவருடைய அரசியல் நிலையைச் சிறப்பாகப் புரிய வைக்க ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம். கடந்தகாலத்தில் இவர் விடுதலைப்புலிகளின் தத்துவவாதியாகவும், விடுதலைப்புலிகளின் பத்திரிகையாசிரியராகவும் இருந்தவர். அவற்றில் பல பல கட்டுரைகளையும் கவிதைகளையும்(இவை தாம் இவரின் இலக்கியங்கள்) எழுதியவர். (இன்று வரை அதை சுயவிமர்சனம் செய்யவில்லை. எப்படிச் செய்வார். அதுவே இன்று வரையான அரசியல்) அவற்றில் ஈ.பி.ஆர்-எல்-எவ்-வைச் செந்தோழர்கள் என நக்கலடித்து கவிதை வடித்தவர். அன்று செந்தோழர்கள் மீதிருந்த வெறுப்பு (புலிகளின் அரசியல்) இன்று வர்க்கப் போராட்டத்தைப் பற்றிக் கதைத்தவுடன் அதே தொடருடன் தாக்குதலை நடத்துகிறார். இதைத் தொடரும் இவரின் நடவடிக்கைக்கு மேலுமொரு உதாரணம், பிரான்சில் நடந்தவொரு கூட்டத்தில் இராமையா தொடர்பாக நித்தியானந்தன் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியைப் புலிகள் குழப்ப முயன்றனர். பலர் குழப்பத்திற்கெதிராகக் குரல் கொடுத்தனர். இதில் ஒருவர் நித்தியானந்தனைப் பார்த்து நீ யார் எனக் கேட்டதற்கு அவர் தான் ஒரு மனிதன் என்றும் சேட்டின் நிறத்தையும் சொல்லி தன் முகமூடியை இறுக்கப் போட்டுக் கொண்டார். அவனின் கேள்வியின் அர்த்தம் இதுவே. நானும் நீயும் சேர்ந்தே பல கொலைகளைச் செய்ததுடன் அதை நியாயப்படுத்தினோம். அத்துடன் நடந்த கொலைகளைச் செய்ததுடன் அதை நியாயப்படுத்தி அரசியல் முலாம் கொடுத்தது, எம்மை இயக்கத்தில் சேர்த்ததும் நீயே. அப்படியிருக்க இன்று என்ன நீ ஜனநாயகம் பற்றிப் புரட்டுகின்றாய்.? என்பதே அதன் அர்த்தம். அதற்கு அவர் சுயவிமர்சனத்துடன் (உண்மையில் கடந்தகால தனது அரசியலை கைவிட்டிருந்தால்) பதிலளிக்காமல் தனது போலிமுகங்களைக் காப்பாற்றிக் கொண்டார்.

 

இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் நித்தியை திலகர் வந்து சந்திக்க அழைப்பு விடுத்தார். அப்போது இவருக்கு ஒத்துழைப்பாக நின்ற பலரின் கருத்துக்களையும் மீறி திலகரைச் சந்தித்தார். நித்தி திலகர் தனியாகச் சந்தித்து சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தனர். இரு முரண்பட்ட அரசியலைக் கொண்டவர்கள்(உண்மையில் அப்படியல்ல) சுமூகமாக சிரித்து கதைத்து மகிழ்ந்தனர். இதில் அவர்கள் அரசியல் கதைக்கவில்லை என்று யாரும் வாதிடமுடியாது. நித்திக்கு அரசியல் நேர்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் புலிகள் தமது அரசியலில் நம்பிக்கையுள்ளவர்கள். அவர்கள் நித்தியுடன் பொழுது போக்குக்காக அழைத்துக் கதைக்கவில்லை. அவர்கள் தேவையுடன் மட்டும் அழைப்பவர்களே. சந்திப்பு முடிந்து வெளியில் வந்த நித்தி தாம் என்ன கதைத்தோமென தமது ஆதரவாளர்களுக்கு கூடச் சொன்னதில்லை.

 

இந்நிகழ்வு இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது புலிகளுக்கும், பிரோமதாசாவுக்குமிடையில் நடந்த இரகசிய தேன்நிலவைப் போன்றதே. புலிகள் தமது உறுபபி;னர்களுக்கோ, மக்களுக்கோ தம்முடைய இரகசிய தேன்நிலவு பற்றிச் சொல்லவில்லை. சொல்லப் போவதும் இல்லை. அதே அரசியலின் தொடர்ச்சியே. நித்தி திலகர் தேன்நிலவு பற்றி தமது ஆதரவாளர்களுக்கோ, மக்களுக்கோ சொல்லவில்லை, சொல்லப் போவதுமில்லை. இது புலிகள், பிரோமதாசா, தமக்கிடையே அரசியல் வேறுபாடு இல்லை என்பதையும் மக்கள் வர்க்கப் போராட்டத்தை நடத்தாமல் தடுக்கும் நோக்கில் இன்று யுத்தத்தை நடத்துவது போல் நித்தி, திலகர் சந்திப்பும் தமக்கிடையில் அரசியல் வேறுபாடின்மையையும் வர்க்கப் போராட்டத்தை தடுக்க (புலிகளின்; அரசியலை ஒதுக்க முயலும்) மூன்றாவது பாதையாளர்) தமக்கிடையில் முரண்பட்டிருப்பது போல் காட்டிக்கொள்வதன் அவசியத்தை புலிகள்- பிரேமதாசா போல் புரிந்து கொண்டனர்.

 

நித்தி தொடர்ந்து இலக்கியச் சந்திப்பில் நாவலன் என்பவர் சொன்ன கருத்தின் மீது அவை நாசிகளின் கருத்து என்று தனது தாக்குதலை நடத்தினார். இவர் நாசிகள் பற்றி ஓரிரு கட்டுரைகளை எழுதிவிட்டால் (அரசியல் இன்றி சம்பவங்களை) மட்டும் தான் எதிர்ப்பாளர்கள் என்ற முகமூடியை போட்டு விடுகிறார். நாவலன் சொல்லிய கருத்து வெளிநாடுகளில் 90 வீதமானவர்கள் பொருளாதார அகதிகளே என்பது. இப் புள்ளிவிபரம் சரியானதா என்பதைவிட இங்கு புகலிடம் பெற்றோரில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார அகதிகளே. இவர்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் இவர்களை இங்கு வர வைத்தது. நித்தி இவர்கள் அனைவரையும் அரசியல் அகதிகள் எனக் கருதுபவரெனில் இலங்கையிலுள்ள அனைவரும் அரசியல் அகதிகள் தான். இவர்கள் அனைவரிலும் இருந்து அரசியல் ரீதியில் அரசு மற்றும் விடுதலை இயக்கங்களின் கொலைப்பயமுறுத்தல் உள்ளவர்களையே மிகுதி பத்து(10) வீதமான அரசியல் அகதிகளுக்குள் நாவலன் குறிப்பிட்டார். இலங்கையியுள்ளோர் அனைவரையும் அரசியல் அகதியென ஏற்பின் நாட்டில் உள்ள அனைவரும்(முழுத் தமிழ்மக்களும்) நாட்டைக் கைவிட்டு இங்கு குடிபெயந்து வந்திருக்க வேண்டும். இதைத் தான் இங்குள்ளவர்கள் அனைவரையும் அரசியல் அகதிகள் என நித்தி அங்கரீத்துச் செய்ய நினைப்பது.

 

நாசிகள் சொல்லும் பொருளாதார அகதிகள் என்ற கூற்று வேறொரு நோக்கில் வெளிவந்ததே. நாசிகளின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்க்க ஒரு வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை புறம் தள்ளி கறுப்பினத்தவர் என்று முகம் கொடுத்தே புரட்சியை தடுக்க முயல்கின்றனர். இங்குள்ள அகதிகளை வெளியேற்றாதேயென நாமும் கோருகின்றோம். எந்த அடிப்படையிலெனின் இன்று இலங்கையில் நடைபெறும் யுத்தம், மற்றும் மக்களின் வறுமைக்கு காரணம் இந் நாடுகளே. யுத்தத்தை நடத்துபவர்களும் இவர்களே. இவ் யுத்தத்தை நடத்துவதனூடாக எம்மக்களை ஒட்டச் சுரண்டி கொழுப்பவர்களும் இவர்களே. அங்கு உள்ள நிலைமைக்கு இவர்களே காரணமாக இருக்கும் போது எம்மை வெளியேற்ற எக்காரணத்தையும் கூறமுடியாது என்பதே. இதே நோக்கில்(அரசியல் ரீதியில்) நாசிகளுக்கு எதிராக கருத்துக்களை கூற மறுத்து கருத்துக்களை திரிபுபடுத்தி நித்தி போன்றார் பிழைப்பதுடன் நாசிகளின் அரசியலை தொடர்கின்றார். அதாவது புலிகளின் அரசியலுக்கும், நாசிகளின் அரசியலுக்கும் எந்த வேறுபாடும் கிடையாத நிலையில் கடந்தகாலத்தில் புலிகளின் கொள்கைகளின் வகுப்பாளராகச் செயற்பட்ட நித்தி அதை சுயவிமர்சனம் செய்யாததுடன், திலகருடன் தேன் நிலவுகளை நடத்தும் இவர், தான் சொல்லும் கருத்துக்களில் அரசியலை நேரடியாகச் சொல்ல மறுப்பவர், மார்க்சிசம் இறந்து விட்டதென சொல்வதின் அர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியதே.

 

1984 இன் ஆரம்பத்தில் டெலோ அமைப்பிலிருந்து மேற்குறிப்பிட்ட நாவனும், நேருவும்(இவர் பின்னால் என்-எல்-எவ்-டி உறுப்பினர் என சுட்டுக் கொல்லப்பட்டவர்) மற்றும் வேறு சிலரும் தப்பியோடிய நேரம் இவர்களுக்கேற்பட்ட உயிராபத்தைத் தடுப்பதாக் கூறி புலிகள் பாதுகாப்பு வழங்கினர். அப்போது இவர்களுக்கு பொறுப்பாக இருந்த நித்தி பாதுகாப்பு என்ற பெயரில் புலிகளுடன் இணையும்படி வற்புறுத்தியதும், அது சாத்தியமாகாது போக அவர்களை மிரட்டிய நித்தி பின் அவர்களை வேறு இயக்கம் அமைக்கக் கூடாதெனச் சொல்லி எச்சரித்தார். இதன் பின் இவர்களின் பாதுகாப்பிலிருந்தும் தப்பித்துச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. இதுவே நித்தியின் பாத்திரம் புலிகளுக்குள்.

 

நித்தி ஒரு கட்டத்தில் மார்க்ஸ்சைக் கூட விபச்சாரத்துக்கு அழைத்துக் கொண்டார். மார்க்சிசம் பெண்களின் உழைப்பை பற்றி சொல்லவில்லை மாறாக ஆணின் உழைப்பு பற்றி மட்டுமே கூறினார் என்றார். ஆண் உழைப்பு தொடர்பாக மார்க்சின் கருத்தை ஏற்காத நித்தி புலிகளின் பிரச்சாரகராக நின்று மார்க்சித்தைக் திரிபுபடுத்தினார். மார்க்ஸ் எப்போதும் ஆண் பெண் உழைப்பைப் பிரித்து தனது தத்துவத்தைக் கூறவில்லை. முதாலாளித்துவத்தின் தோற்றம் (இது நித்திக்கு தெரியாது) உழைப்பின் தேவையோடு பெண்களை ஈடுபடுத்தியது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி மீதே மார்க்ஸ்சின் தத்துவம் உருவானது. அதாவது முதலாளித்துவ வளர்ச்சியில் உழைப்புத் தொடர்பாக விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து வெளிவந்ததே. இன்று வரை முதலாளித்துவவாதிகளுட்பட(நித்தி போன்ற வகையறாக்கள் தவிர) மார்க்ஸ்சின் தத்துவத்தையே ஏற்றுள்ளனர். உழைப்பு என்பது. ஆண், பெண்ணுக்குப் பொதுவானதே. நித்தி போன்றோரே மார்க்ஸ்சை விபச்சாரத்துக்கு கூப்பிட்டு பிழைக்க முயல்வதுடன், தனது புத்திஜீவித்தனம் என்று தனது முட்டாள்தனமான அரசியலை வெளிப்படுத்தினார்.

 

Read more...

நடைமுறைப் பிரச்சனையில் மார்க்ஸ் கோட்டை விட்டாரா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 28 November 2008 19:14
பி.இரயாகரன் - சமர் / சமர் - 7 : 1993

சமர் குழுவிலிருந்து ஒருத்தர் வெளியேற்றப்பட்டதையொட்டிய கடிதம் 5-6 சமர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. கருக்கலைப்பு சமூகத்தேவையை ஒட்டியதல்ல எனச் சமரால் முன்வைக்கப்பட்டதாக திரிபுபடுத்தி சரிநிகரில் கார்-மார்கழி-1992 இற்கான இதழில் இது பற்றிய விமர்சனம் அனிச்சா என்னும் பெயரில் வெளியாகியிருந்தது.

 

கருக்கலைப்பு, கருத்தடைக்கும் உள்ள வேறுபாட்டை சரிநிகர் ஆசிரியர் குழு சரியாக ஆராயாமலோ என்னவோ கருத்தடை ஒரு உயிர்க்கொலை என்னும் வியாபார நோக்குள்ள தலையங்கம் கொடுத்திருந்தும் ஒரு கசப்பான உண்மை எனச் சுட்டிக்காட்டுவதோடு மேற்கூறிய நபருக்கும், சமருக்கும் இருந்த பிணைப்பும், பிரிவும் பற்றி தெளிவுபடுத்துவதன் ஊடாக தொடர்ந்து கருக்கலைப்புப் பற்றிய சமரின் கருத்தை தெளிவாக்க முனைகின்றது.

 

1) குறிப்பிட்ட கடிதம் மேற்படி நபருக்கு சமர் குழுவின் ஏகமனதான முடிவோடு அனுப்பப்பட்டது.

 

2) சமர் முன் வைத்த வேலைத்திட்டத்திற்கமைவாக, கருத்தொருமிப்பும், புரிந்துணர்வோடும், சமூகநோக்கம் கொண்டதாக சொந்த வாழ்க்கையில் கறாராக நடந்து கொள்ளுதல் ஆகிய உடன்பாடு இருந்தது.

 

3) மேற்குறிப்பிட்ட நபர், சமர் குழுவில் இருந்த சிலர் மீது சொந்த வாழ்க்கையில் சமூகநோக்கற்று நடந்ததை சுட்டிக்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

4) சமர் இதழ் 2 இல் பெண் என்னும் கட்டுரையையும் மேற்படி நபரே எழுதினார்.(இக்கருத்தே இன்றும் சமருக்கு உள்ளது.

 

5) இவரது கருக்கலைப்பு அந்தரங்கம் இவராலேயே சமர் குழுவுக்கு ஒரு முற்போக்கு வேடத்தில் அறிவிக்கப்பட்டு தனித்தனியாக விவாதித்தார்.

 

6) குழந்தை ஒன்று தேவை என்று தனது குடும்பம் விரும்புவதாகவும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியால் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

 

7) இதுமுதற் தடவையல்ல, இரண்டாவது தடவை என்பதும் இவராலேயே அறிவிக்கப்பட்டது.

 

8) குறித்த காலத்தின் பின் தான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகவும் கூறினார்.

 

மேலே குறிப்பிட்ட இந் நபரின் கருத்துக்களை நிலை நிறுத்தி சமர் குழுவிலிருந்தோர்(தனிநபர்களாக)

 

1) இச்சமகால பொருளாதார நெருக்கடியைக் கடந்து செல்ல பண உதவி மற்றும் ஏனைய உதவிகளைச் செய்ய முன்வந்தனர்.

 

2) கருக்கலைக்க வேண்டாம் எனக்கோரி குழந்தை பிறக்கும் வரைக்கும் உள்ள பண நெருக்கடியைக் கவனிப்பதாகவும், குழந்தை பிறந்தவுடன் தன்னிடம் தந்து விடும்படியும் குழுவில் ஒருத்தர் நட்போடு வேண்டுகோள் விடுத்தார்.

 

3) இக்கருச்சிதைவு பெண்ணின் விருப்பத்திற்க்கு மாறாக நெருக்குதலால் நடக்கிறதா? என்பதை அறிய தோழமையோடு குறிப்பிட்ட நபரை அணுகியபோது அவர் கூறினார், நீங்கள் எனது மனைவியை குழப்பிவிடுவீர்கள் என்று அனுமதிக்கவில்லை.

 

4) நெருக்கடி முற்றிய நிலையில் பெண்ணிலைவாதக் கருத்துக்களோடு உடன்பாடுள்ள மேற்படி நபரின் மனைவியை சமர் குழுவில் ஒருத்தர் தனது மனைவி சகிதம் சந்தித்து நட்புரீதியில்; இது பற்றிக் கதைத்த போது, இப் பெண்ணிலைவாதியானக் கருவைச் சுமந்து நின்ற தாய் எவ்விதமான பதிலும் கூறாமல் ஏக்கமான மௌனம் சாதித்தார்.

 

5) இதன் தொடர்ச்சியாக கருச் சிதைவு நடந்தது. நாம் சமர் குழுவின் ஏகமனதான முடிவோடு வெளியேற்றினோம். அதற்குரிய கடிதமும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

 

இக் கருக்கலைப்பு நடைபெற முன்னர், இது பற்றி குழுவாக விவாதிப்பதை தட்டிக்கழித்து வந்த இவர் கருச்சிதைவின் பின்னர் குழுவின் பெரும்பான்மை முடிவோடு செயற்படுமாறும், விவாதிக்கவும் கோரினார். ஆனால் சமர் குழு இதை ஏகமனதாக நிராகரித்து விட்டது. இதை இவர் ஜனநாயகமற்ற செயல் எனக் கூறித் திரிந்தமையால் மாத்திரமே நாம் அக்கடிதத்தைப் பிரசுரிக்க வேண்டி ஏற்பட்டது.

 

இங்கே நாம் உறுதியாகக் கூறும் கருத்து என்னவெனில் நட்பு புரிந்துணர்வு, தோழமை ஆகியவற்றால் கருத்தொருமித்திருந்த எம்மில் ஒருத்தருக்கு (குறிப்பிட்ட நபர்) சமூக முரண்பாட்டிற்கு முகம் கொடுத்து போராடி வாழும் சராசரி மனோபாவம் இல்லாமல் போனமை, நடுத்தர வர்க்கத்திற்கே சொந்தமான வறுமையிலும் வரட்டுக்கௌரவம் என்னும் தன்மையிலிருந்து யதார்த்த நிலைக்கு இறங்கி வராமல் சக நண்பர்களின் உதவியைத் தட்டிக்கழித்தமை, இக் கருக்கலைப்பில் இப் பெண்ணிற்கு எந்தளவு தூரம் உடன்பாடுண்டு என்பதை நேரில் பேசி அறிய எம்மைத் தடுத்தமை போன்ற பிற்போக்கு அம்சத்தை தனது சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்துக் கொண்டு, முற்போக்குச் சாயம் பூசி சமரோடு இருப்பதை சரியாக இனங் கண்டு இவரை வெறியேற்றியமை ஒரு குழு நடவடிக்கையே. இது விடயமாக சமர் 5-6 இல் வெளியாகியிருந்த கடிதம் எந்த விதத்திலும் கருக்கலைப்பு சம்பந்தமான சமரின் ஒட்டுமொத்த கருத்தை வெளியிட்டதில்லை. அனிச்சாவின் விமர்சனம் சமர் பற்றிய ஊகங்கள் அடிப்படையிலேயே அதிகம் எழுந்திருந்த போதிலும் தொடர்ந்து பதிலளிக்கின்றோம்.

 

வளர்முக நாடுகளிலும் சரி வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி கருக்கலைப்பு(சிசுக்கொலை) பெண்விடுதலையில் மையமாக சில பெண்ணிலைவாதிகளால் பூதாகாரமாக்கபபட்டுள்ளதையிட்டு உண்மையில் நாம் அனைவரும் வருத்தமடைய வேண்டியுள்ளது. பரந்துபட்ட துறையில் ஒதுக்கப்பட்டுள்ள பெண்ணின் உரிமையை ஒரு பாலியல் பிரச்சனையாகக் குறுக்கி வைத்துள்ளதும் இவர்களே தான். நிபந்தனையற்ற கருக்கலைப்பை எதிர்ப்போர், பிற்போக்குவாதிகள் என்றும் ஆதரிப்போர் நவீன முற்போக்காளர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

 

முன் நிபந்தனையற்ற கருக்கலைப்பு என்னும் கருத்துருவாக்கம் சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, சமூகத்தீர்வாக முன் நிறுத்தும் சமூக நோக்கற்ற செயலே.

 

நிலப்பிரபுத்துவத்தின் இறுக்கமான கலாச்சாரக்கட்டிலிருந்து முதலாளித்துவத்தின் முற்போக்கு அம்சம் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற குறிப்பிட்ட சில உரிமைகளை பெண்களுக்கு வழங்கியிருப்பது உண்மையே. ஆனால் இதுவே பெண்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விடவில்லை. மாறாக முதலாளித்துவம் கொடுத்த உரிமைகளாலேயே பெண் இம்சைப்படுத்தப்படுவதும், அலங்காரப் பொருளாக சித்தரிக்கப்படுவதும் இயல்பாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இவையிலிருந்து ஒருபடி மேலே போய் வரையறையற்ற பாலுறவு, ஓரினச் சேர்க்கை, சமூக வரம்புகளை மீறிய குடும்ப அமைப்பு போன்றவற்றால் இந் நாடுகளில் மனநோயாளர்களை, பாலியல் நோய்களையும் இவ்வுலகத்திற்குத் தந்ததோடு கணவன், மனைவி உறவுக்கே உலை வைக்கக்கூடிய(எயிற்ஸ்) எனும் கொடிய நோயையும் இவர்களே இவ்வுலகுக்கு வழங்கினார்கள்.

 

நிலப்பிரபுத்துவக் கலாச்சார நாடான (பிற்போக்குக்கலாச்சார)இலங்கையிலிருந்தும் ஜரோப்பிய நாடுகளில் குடியேறி பெண்விடுதலை பேசும் இவர்களால் ஏகாதிபத்தியங்களின் சீரழிந்த கலாச்சாரத்தை உரிமையாகக் கோருவதற்கப்பால் வேறு எதுவும் செய்ய முடியாதுள்ளனர். இதனடிப்படையில் நாம் நோக்கும் போது நமது மரபுவழிப் பிற்போக்குக் கலாச்சாரத்துக்குப் பதிலாக மேற்கத்தைய நாடுகளே வெறுக்கும் சீரழிந்த கலாச்சாரத்தை முன் வைக்க முனைகின்றனர்.

 

பெண்விடுதலைக்கு ஆண், பெண் உட்பட ஒட்டுமொத்தச் சமூகமே ஓர் புரட்சிகரச் சூழ்நிலையில் கருத்தால் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை நிராகரித்து மனித இயல்பை மீறிய ஆண், எதிர்ப்பு கோசம் வெளியாகின்றது. பெண்கள் விடுதலையைப் பிரதிபலிக்கும் கலைவடிவங்களாகவும், எழுத்து வடிவங்களாகவும் ஆண்களே அதிகப் பங்காற்றியுள்ளனர். பெண்களைத் தட்டி கொடுப்பவர்களும் இவர்களே.

 

பெண்கள் விரசமான பாத்திரங்களில் பெண் எழுத்தாளர்களால் சித்தரிக்கப் படுவதையும் நாம் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். நாம் இதை எழுதுவதால் தொடர்ந்தும் இநத நிலை இருக்கும் என்பது பொருளல்ல. ஆனால் இதுதான் தற்போதைய உண்மை. இன்று நாம் சார்ந்துள்ள, சமூகப்பொருளாதார, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களின் பிரதிப்பலிப்பாகவே பெண் ஒடுக்குமுறை உட்பட்ட அனைத்து அனைத்து ஒடுக்குமுறைகளும் நடைபெறுகின்றன.(கருக்கலைப்பு உட்பட) சீதனக் கொடுமையால் பெண்கள் தீயில் எரிக்கப்படுதல் (மாமி-மருமகள்) குழந்தை பிறந்தவுடன் பெண் குழந்தையானால் கொல்லுதல் அல்லது அனாதரவாக விடுதல், நிபந்தனையற்ற கருக்கலைப்பு ஆகியவை ஒரே பிரச்சனையின் பல்வேறு வடிவங்களே.

 

கரு உருவாகாமல் கருத்தடை மாத்திரை, கருத்தடைச் சாதனம் மற்றும் கருத்தடை அறிவியலூடாக கருத்தடைப்படுத்திக் கொள்வதும் கருத்தடையாகவே கருதலாம்.(சிசுக்கொலை) சரிநிகர் விமர்சகர் இவை இரண்டையும் குழப்பி இதை முன்னால் செய்தாலென்ன? பின்னால் செய்தாலென்ன? இரண்டும் ஒன்று தானே என்கின்றார். நாம் இவர் பாணியிலே கேட்கின்றோம், பத்து மாதத்தில் குழந்தை பிறக்கின்றது. பிறந்த பின்னர் குடும்பத்தின் பழைய இருப்பைப் பேண முடியாமல் போகுமாயின் அக் குழந்தையைக் கொல்லலாம் தானே? உங்கள் பாணியில் இவைகள் ஒன்று தான்.

 

ஒரு வருடத்திற்கு 10 இலட்சம் பெண் குழந்தைகள் சீனாவில் பிறந்தவுடன் கொல்லப்படுகின்றார்கள். ஆண் குழந்தைகளே பிற்காலத்தில் பொருளாதார ரீதியில் உதவுவார்களென்று பெற்றோர் காரணம் கூறுவதாக சீனாவின் பிரபல பெண்ணிலைவாதியான வென் முகுவா கூறுகின்றார்.( நன்றி சுவடுகள் இதழ் 36)

 

இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அதிகமான கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் கொன்றுவிடுவதாக செய்திகள் வருகின்றன். 1989ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் புரட்டாதி மாதம் வரை 44 பெண் குழந்தைகள் உசிலம்பட்டி கிராமத்தில் பிறந்தவுடன் கொல்லப்பட்டுள்ளார்கள். இவை இறப்புப் பதிவில் குறிப்பிட்டவை மாத்திரமே. பதிவு செய்யாதவை பலமடங்கு அதிகம் எனக் கூறப்படுகின்றது. இக் குழந்தைகளின் பெற்றோர் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கும் போது 10 பவுண் நகையும் 10 ஆயிரம் ரூபா பணமும் இல்லாமல் திருமணம் செய்து கொடுக்க முடியாது அதனாலேயே கொல்லுவதாகக் கூறுகின்றனர். நிபந்தனையற்ற கருக்கலைப்பை ஆதரிப்போர் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதையும் ஆதரித்தேயாக வேண்டும். ஏனெனில் இவை ஒரே பிரச்சனையும் ஒரே வடிவமுமேயாகும்.

 

ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தில் தனி அங்கமாயிருந்த போதும், தனிமனித அபிலாசைகளோடு பொருந்திய தேவை ஒரு சமூகத்திற்கு பொருந்தி வராது. ஒட்டுமொத்தச் சமூகத்துக்குப் பொருந்திய தேவை மாத்திரமே ஒரு தனிமனிதனுக்கும் பொருந்தும்.

 

நிபந்தனையற்றுக் கருவைக் கலைக்கலாம் என்னும் வாதம் சமூகச்சீரழிவையே கொடுக்கும். கருவில் இருக்கும் குழந்தை குறைபாடாயிருந்தால், கருவுற்ற தாய் நோயுற்றிருந்தால், தாயின் உயிருக்கு ஆபத்தாயிருந்தால் போன்ற அத்தியாவசியத் தேவைகளை ஒட்டிய வைத்திய ஆலோசனையுடன் செய்து கொள்வது அவசியமானதே.

 

பலாத்காரத்தாலோ, இராணுவ பலாத்காரத்தாலோ உருவான கருக்களையும் சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லாத இந் நிலையில் கலைத்தேயாக வேண்டும். இவை பேன்ற சமூகத்தேவைகளையொட்டிய கருக்கலைப்புக்கள் மேற்கூறிய நிபந்தனைகளோடு ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இவை தவிர்ந்த கருக்கலைப்புக்களை சமூகம் வன்மையாக கண்டிக்க வேண்டும். ஆண்கள் எத்தனை பெண்களோடும் தொடர்பு வைத்திருந்தாலும் இயற்க்கையின் சாதகத்தன்மையால் அவர்கள் தப்பிவிடுகின்றனர். இயற்கையாக பெண் கருப்பையைச் சுமந்து நிற்பதால் சமூகத்தின் கொடியப் பார்வைக்குள்ளாகி ஒதுக்கப்படுகின்றாள் என்பது உண்மையே.

 

மது அருந்துதல், போதைப் பொருள் பாவித்தல், பல பெண்களோடு பாலுறவு ஆகியவை ஆண்களின் உரிமையாக இருப்பின் இதே உரிமை பெண்களுக்கும் நிச்சயமுண்டு. ஆனால் இவைகள் ஒட்டு மொத்தச் சமூகத்திலுமிருந்து முடிந்தவரை களையப்பட வேண்டியவையே. மேற்குறிப்பிட்ட உரிமைகளையும் நிபந்தனையற்றக் கருக்கலைப்பையும் கோருவது எவ்விதத்தில் சமூக நோக்காகும். அனைத்து நாடுகளிலுமுள்ள அரசுகளாலும் சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டே தானிருக்கின்றன. இவற்றிற்கு மூல காரணமாக அரசும் சமூக அமைப்புமேயுள்ளன(கருக்கலைப்பு உட்பட). இவைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பதால் சமூகம் நடைமுறையில் இவற்றைத் தீர்வாக ஏற்றுக் கொள்ளமுடியாது. இதன் நிமித்தமே சமூகம் ஒட்டு மொத்தமான ஓர் சமூக மாற்றத்தை நாடி நிற்கிறது.

 

அதன் மூலம் மாத்திரமே படிப்படியாக இவைகட்கு தீர்வு காணமுடியும். மற்றும் சில பெண்ணிலை வாதிகள் மணம் செய்யாமலே ஒரு ஆணோடு சேர்ந்து வாழலாம் என்னும் ஜரோப்பிய நாடுகளில் பிரதி பண்ணிய (கொப்பி) ஒரு கருத்தைக் கொண்டுள்ளதோடு மறறவர்களுக்கு போதிக்கவும் செய்கின்றனர்.

 

பொருளாதாரச் சார்பு நிலையும் ஆணாதிக்கமும் அற்ற ஒரு சமூக மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இயல்பான மனிதத் தேவைகளையொட்டி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் நிலையில் யதார்த்தமான குடும்ப உருவாக்கம் உண்டு என்னும் விஞ்ஞான பூர்வமான ஆய்வினை நாம் மறுக்கவில்லை. மேற்கூறிய பெண்ணிலைவாதிகள் சமகால சமூக அமைப்பிலுள்ள அனைத்து அம்சங்களையும் விட்டுவிட்டு இவ்விடத்தில் மாத்திரம் மிகவும் வேகமாய் போய் விட நினைக்கின்றார்கள். இவைகள் தான் நாம் சமூகச் சீரழிவு என்கிறோம்.

 

நாம் இருக்கும் சமூக அமைப்பின் அனைத்து வரையறைகளையும் உடைத்து எறியப்படும் தறுவாயில் புரட்சிகரமான புதிய சமூக வரம்புகளின் ஊடாகவே பரிணாம வளர்ச்சி பெற்று பூரண விடுதலையை அனுபவிக்க முடியும்.

 

இதைத் தவிர இவர்களது இந் நடவடிக்கை இச் சமூக அமைப்பை மாற்றி அமைக்கப் போராடுவதற்க்கு பதிலாக, இச் சமூகத்தில் ஆண் ஒரு சரியான காரணி என்றே காட்ட முனைகின்றனர். இதன் அடிப்படை வக்கிரமான தனிநபர் சுய தேவைகளையும், சமூக நோக்கற்ற ஆண்களின் நடவடிக்கையை பெண் உரிமையாகக் கோரும் பிற்போக்குவாதமுமேயாகும்.

 

ஜரோப்பிய சமூகப் பெண்கள் சுரண்டும் வர்க்கங்களால் நேரடியாகப் பல முனைகளில் ஒடுக்கப்படுகின்றனர். ஜரோப்பிய பெண் விடுதலை அமைப்புக்களால் கூட இவர்களை அணிதிரட்டி ஒருங்கிணைத்துப் போராடுவதற்கு பதிலாக சுரண்டுவோரின் சுரண்டலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கருக்கலைப்பு கோசத்தை முன்வைக்கின்றனர்.

 

உதாரணமாக இங்குள்ள சந்தைப் பொருளாதார அமைப்பு முறையிலுள்ள சிறுமுதலீட்டாளர்களின் தொழில் நிறுவனங்கள் உட்பட பல்தேசியக் கொம்பனிகள் வரை பணிக்கு அமர்த்தியுள்ள பெண்களைப் பொறுத்த வரையில், நிறுவனம் குறைவாக இலாபம் பெறும் போது, அல்லது ஆள்குறைப்புச் செய்யவேண்டிய தேவையேற்படும் போது 38-40வயதை தாண்டியோர், குடும்ப பெண்கள் போன்றோரே வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். இவர்கள் பணிப்பெண்கள், உல்லாசப் பயணிகளோடு தொடர்புபட்ட வேலையாட்கள்(ஹொட்டல்)வரவேற்பாளர், காரியதரிசி விற்பனைப் பகுதியிலுள்ள வெகுசனத் தொடர்பாளர் போன்றோர் முன்னணியிலுள்ளனர். இவற்றுக்குரிய காரணங்கள் கட்டான உடலமைப்பு இழந்தமை, வசீகரமான இளமைத் தோற்றத்தை இழந்தமை போன்றவையே. மேலே குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பெண்கள் மேற்கத்தைய நாடுகளில் இன்னுமோர் வேலை பெறுவது முயற் கொம்பாகவே இருக்கும். ஏகாதிபத்தியங்களின் கவர்ச்சிகரமான இலாப நோக்கம் கொண்ட வேலைத்திட்டத்தால் பெண்கள் உழைப்பு உறிஞ்சப்பட்டு ஒடுக்கப்படுவதை இசைந்து, ஏற்று பழக்கப்படுத்திக் கொள்ளவும் கருக்கலைப்பைக் கோருவது இவர்களுக்கும் அவசியப்பட்டுள்ளது. சுரண்டலுக்கு துணைபோகும் ஒரு நடவடிக்கையாகவே கருக்கலைப்பும் கோரப்படுகின்றது. சில ஏகாதிபத்திய நாடுகளில் இவ்வுரிமையை கொடுக்க மறுத்த போதிலும் அனேகமாகக் கட்சிகள் இவ்வுரிமையை வழங்க முன்வருகின்றன. ஏகாதிபத்திய நாடுகளில் அனேக பெண்கள் திருமணம் செய்யாமல் ஒருத்தரோடு சேர்ந்து வாழுதல், அல்லது தங்கள் உடலியல் தேவைக்கு கணவனோடு சோந்து கொள்ளுதல், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையை ஓட்டுதல் போன்றவை இவர்களது தொழில் சார்பு வாழ்நிலையைப் பேணுவதற்காகவே.

 

வளர்முக நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் தான் நாம் கூறுகிறோம் பெண்விடுதலை என்பது பெண்கள் மாத்திரம் சம்மந்தப்பட்ட கோசமாக அமையமுடியாது. சுரண்டலுக்கெதிரான பாட்டாளிவர்க்கப் புரட்சியிலேயே உண்மையான பெண் விடுதலையின்; கருத்து உருவாக முடியும். வளர்முக நாடுகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உள்ள பெண்விடுதலை அமைப்புக்களின் பொதுவானதோர் கருத்து யாதெனில் பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதே. இது உண்மைக்குப் புறம்பான கருத்தல்ல என்ற போதிலும் பெண்கள் தங்களைத் தாங்களே காட்சிப் பொருளாக நினைத்து அலங்கரித்து மற்றவர்களின் பார்வைக்காக பவனிவரும். காலம் மாறும் வரை பெண்விடுதலையின் முதல் படியையேனும் தொடமுடியாது. தொடர்ந்து அனிச்சாவின் விமர்சனத்திலிருந்து பெறப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம்.

 

1) குழந்தைக் கொலையையும், கருச்சிதைவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பியுள்ளது. வர்க்கப் போராட்டமே எல்லாவற்றிக்குமான முடிந்த முடிவு எனக் கூறி நடைமுறைப் பிரச்சனையைக் கோட்டை விடுவது சமரின் பிரச்சனை என்றும் கூறியுள்ளார். உண்மையில் அனைத்து முரண்பாடுகளிற்கும் வர்க்கப் போராட்டத்தின் மூலமே தீர்வு காணமுடியும் என்பது சமரின் உறுதியான முடிவு. ஆனால் இவ்விடயத்தை எழுதுவது, விமர்சிப்பது, நிபந்தனைகளை விதிப்பது, சமூகச் சீரழிவை நோக்கித் தள்ளும் கருத்திலிருந்து விலகி ஆராய்வது, அனைத்துமே நடைமுறையைக் கருத்தில் கொண்டே ஈடுகொடுத்து நகர்வதாகும். இதை விளங்கிக்கொள்வது இந்தச் சமூக அமைப்பில் ஏகாதிபத்தியத்திற்குச் சார்பான வகையில் உள்ள உங்கள் நடைமுறை பிரச்சனையின் தீர்வை அங்கீகரிக்கக் கோரும் இவரது வாதம், இப்பிரச்சனையை இச்சமூக அமைப்பில் தீர்க்க முடியும் என்று கூறுவதாகும். அது எப்படி?

 

.2) மூலிகைகளாலும் மற்றும் பல முறைகளாலும் ஆதிகாலத்திலும் கருக்கலைப்பு நடந்ததாகக் கூறி தற்போதைய சுயதேவைக்குரிய கருக்கலைப்புக்கு ஆதாரம் காட்டியுள்ளார்.

 

இதிலிருந்து இவர் கூறி வருவது காலத்தின் புரட்சிகர வளர்ச்சிக்கேற்றவாறும், சமூக ஆரோக்கியமாகவும் ஆராய இவர் தயாராயில்லை என்பதே. மரபுவழி பழமைகள் யாவற்றையும் ஒதுக்கி அதிசிறந்த பெண்ணிலைவாதியாக விமர்சனம் எழுதிய இவர் கருக்கலைப்பு விடயத்தில் மாத்திரம் பழமையே பேண நினைக்கிறார். இதையே தான் மேலே குறிப்பிட்டோம். இது சமூகநோக்கல்ல சுயதேவையென்று.

 

3) பெண்ணை ஆட்டக்காரி எனவும் அடக்கமற்றவள் எனவும் கூறி அவளை இரண்டாம் தரமாகக் கருதும் இந்த மனப்பான்மையிருக்கும் வரை கருக்கலைப்பை எப்படி தடுக்கமுடியும்.?

 

இக் கேள்வி பெண்விடுதலையை நிராகரிக்கும் கேள்வி மாத்திரமல்ல ஆண் எதிர்ப்புக் கோசத்தையும் முன்வைக்கிறது. மேலே குறிப்பிட்ட ஆட்டக்காரி என்னும் சொற்பிரயோகம் பிரயோகிப்போரின் அறிவின் அளவைப் பொறுத்தது. இதற்கு இன்னும் வேறு நாகரீகமான சொற்களும் பிரயோகிக்கப்படுகின்றன. இது பெண்களுக்கும் மாத்திரமல்ல ஆண்களுக்கும் பிரயோகிக்கப்படுகின்றன. (பொருந்தும்) எந்தவொரு சமூகக் கட்டமைபபிலும் குறைந்தபட்சம் தனக்குத்தான் எனும் ஒரு வரம்பமைத்து வாழாமல், மனம் போன படி வாழ்வதும் (நடவடிக்கைகள்) பின்னர் அதன் பிரதிபலிப்பான கருவைக் கலைப்பதும் சமூகத்தேவையா? பெண்விடுதலை என்ற பெயரில் சமூக சீரழிவான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை ஆதரிப்பதோ அல்லது இதற்குச் சமமாக நடந்து கொள்ளும் ஆண்களை அவர்களின் ஆழுமை என்று கூறுவதோ அல்லது இதை ஆராய்ந்து நடைமுறையில் ஏற்பட்ட சூழ்நிலையின் தேவை என்று நியாயப்படுத்த முயற்சிப்பதோ ஒரு போதும் சமூக நியாயமாகாது.

 

4) வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து பெருந்தோகையான ஆண்கள் கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில் திரும்பவும் சென்று விடுவார்கள். ஆண், பெண், பாலியல் உறவுக்கே ஏற்படுத்தப்பட்ட சட்டரீதியான கல்யாண உறவில் கூடப் பெண்களுக்கு ஆண்களின் உறவு அற்றுப் போய்விடுகிறது. இந்த நிலையில் பெண்களின் இரகசிய உறவுகள் வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப் படுகின்றன. இரகசிய உறவால் உருவாகும் பிள்ளையை சமூகம் ஒருபோதும் அஙகீகரிப்பதில்லை. இந் நிலையில் தனித்து வாழும் பெண்கள் எப்படி வாழவேண்டுமென்று சமூகம் எதிர்பார்க்கிறது? என்றும் கேட்கின்றார்.

 

கணவன் வெளிநாடு செல்வது மத்தியதர வர்க்கத்தின் மனோநிலையை உயர்த்திக் கொள்ளவே. அவர்கள் மனோநிலையில் இருந்து நோக்குமிடத்து குடும்பத்தின் முன்னேற்றம் முதன்மைப்படுகின்றது. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு முழுக்க முழுக்க படுக்கையறை மாத்திரமே என்று நினைப்பது தவறு. ஆனால் அதை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதும் குடும்ப அமைப்பையே தகர்த்துவிடும். அவரவர் சிந்தனை, அறிவு, சூழல் இவைகளைப் பொறுத்த விடயம். கணவன் ஒரு பக்க சார்பு முடிவோடு நீண்ட நாள் வெளிநாட்டில் இருந்தால் தனது நிலையை விளக்கி அவரை திரும்பவும் அழைக்க முயற்சி செய்யவேண்டும். அவர் நியாயமற்று மறுத்தால் விவாகரத்துச் செய்துவிட்டு இன்னுமோர் மணம் செய்து கொள்ளாலாம். இதுவே பெண்ணின் உரிமை. இதைவிடுத்து யாரோடோ இரகசிய உறவை வைத்து பின்னர் கருக்கலைப்பது பெண் உரிமையல்ல. சமூகநோக்குமல்ல. மூன்றாவது மண்டல நாடுகளில் மேற்குறிப்பிட்டவை போன்றன விவாகரத்துக்களால் கிடைக்கு நன்மைகளைப் போன்றே தீமைகளும் உண்டு என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

 

உதாரணமாக நிலப்பிரபுத்துவ குடும்ப அமைப்பிலிருந்தும் சற்றும் மாறாத இந் நாடுகளில் அனைத்து வர்க்கங்களிலும் குடும்பம் சார்ந்த பொருளாதார பலத்தையே கொண்டுள்ளன. இதற்குரிய முக்கிய காரணம் வேலையற்றோருக்கு உதவிப்பணமோ, வயோதிபர், அனாதைகள் போன்றோர்க்கு உதவிசெய்யும் திட்டமேதும் அரசுகளால் செய்முறையில் இல்லாததும், பொது நிறுவனங்கள் கிடையாததுமாகும். இந்நிலையில் இளமைக்காலத்தில் ஏறபடும் விவகாரத்துக்களால் தங்கள் குழந்தைகள் நன்மை பெற தாய் தந்தையர் வாழ்வைத் தியாகம் செய்கின்றனர் அல்லது தாய் தநதையர் வாழ்வு பெற குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கப்படுகின்றனர். இப்படியான சூழ்நிலையில் பெண் பூரண உரிமை பெற சமூக அமைப்பையும் அரசியல் அமைப்பையும் மக்களுக்குரியதாக மாற்றியமைக்க வேண்டும். மேலும் நடைமுறையில் நமது பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைமாரைக் கிராக்கிப்படுத்துவதும், விரும்புவதும் அதிகரித்தே வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். நாட்டில் போர்ச்சூழல் ஏற்படும் முன்னரே இதே நிலையிருந்தது.


5) பொருளாதார ரீதியில் குழந்தை பெறுவது சாத்தியமற்றதாக இருப்பதுண்டு. குழந்தையை உருவாக்கி விட்டு பட்டினியாலும் பசியாலும் சாகடிப்பதை விட கருவில் சிதைப்பதை விளங்கிக் கொள்வது கடினமல்ல. மார்க்சினாலேயே தனது மகன் எட்காரை வறுமையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. ஜென்னியின் முலையில் பாலுக்கு பதில் இரத்தம் கசிந்த போதுள்ள வேதனையை விட பிறந்த பின் உணவூட்ட முடியாமல் சாகடிக்கச் செய்த துன்பத்தை விட கலங்களால் உருவாகிக் பொண்டிருக்கும் சிசுவை கருச்சிதைவு செய்வதை பாரதூரமானதாகக் கருதமுடியுமா? என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

கருக்கலைப்பை சட்டபூர்வமாக கோருவது, நடுத்தர வர்க்கம் மாத்திரமே. இது முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனையும் கூட. சொத்து சேகரித்தல், பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையடைதல், சமூகத்தில் நிலவும் சீதனம் போன்ற பிற்போக்கு அம்சங்களை பாதுகாத்தல் போன்றதாகும்.

 

வாழ்க்கைக்கு முகம் கொடுத்தல், அன்றாடம் மனித வாழ்க்கையில் தொடரும் போராட்டத்தை வாழ்க்கையோடு இணைத்தல் போன்றவற்றை நிராகரித்து இயங்கியலை மறுப்பதாகும். மேற்கூறியபடி இவரது கருக்கலைப்பு நியாயப்பூர்வமாகின், பொருளாதாரச் சிக்கலுக்கு முகம் கொடுக்கும் அனைத்துப் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளைக் கொல்லலாம் என்னும் உரிமையையும் கொடுக்க வேண்டும். ஜென்னியின் முலையிருந்து மாத்திரம் இரத்தம் கசியவில்லை, யாழ்ப்பாணத்து பங்கர்களில் குழந்தை பெறும் தாய்மார்களின் முலையிலிருந்தும் இரத்தம் கசிந்து கொண்டுதானிருக்கிறது. நடைமுறையில் கோட்டை விடுவதாகச் சமரைக் குறறம் சாட்டிய அனிச்சா, நடைமுறையில் மூன்றாவது மண்டல நாடுகளில் வாழும் 80 வீதம் மக்களின் வாழ்வை நிராகரிக்கிக்கின்றார். இது எந்தக் கோட்பாடு என்று புரியவில்லை. இதையே தான் அமெரிக்க ஏகாதிபத்தியமும் கூறுகிறது. மேலும் அனைத்து முரணபாடுகளுக்கும் வர்க்கப் போராட்டமே தீர்வு என்றே மார்க்ஸ் கூறினார். அனிச்சாவின் அகராதியில் மார்க்ஸ்சும் வர்க்கப் போராட்டத்தைக் கூறி நடைமுறைப் பிரச்சனையில் கோட்டை விட்டவரே. மார்க்ஸ் வறுமையில் வாடியதற்க்கான காரணமான இச்சமூக அமைப்பை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தும் தத்துவப் பிச்சைக்காரராகவும் இருக்கவில்லை. மாறாக இவ்வுலகை மாற்றும் மாபெரும் தத்துவவாதியாகவும், மனித வாழ்வின் மகிமையை மதித்து முகம் கொடுத்தவராகவும் இருந்தார். இதன் காரணமாகவே ஜென்னியின் முலையில் இரத்தம் கசிந்தும் நீங்கள் கோரும் சுயதேவைக் கொலையைச் செய்யவில்லை.

 

6) கருச்சிதைவைக் கொலை என்று கூறும் சமர் வாக்கப்போராட்டம், புரட்சி எல்லாம் முடிந்து பொருளாதார காரணிகள் சுமூகமாக அமையப் போகிற சோசலிச சமுதாயத்தில் இத்தகைய பிரச்சனை வராது என்று கருதுகின்றதா?

 

சோசலிச சமுதாயத்தில் புரட்சிகள் முடியுமே தவிர இவர் கூறுவது போல் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வராது. மாறாக அது தொடரும் என்பதே உண்மை. ஆனால் இச் சோசலிச சமுதாயத்தில் ஆணின் ஸ்தானங்களுக்காக பெண்கள் போட்டி போட்டு இன்றைய ஆணை ஒரு சரியான காரணி எனக்காட்ட ஒரு போதும் பெண்கள் முன்வர மாட்டார்கள். சமூகத்தேவை தவிர்ந்த, வக்கிரமான சுயதேவைகட்கு கருச்சிதைவு தேவை என்று கோரும் சமூகமற்றப் பெண் உரிமைகளைச் சரியாகப் புரிந்து செயல்படும் ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். குழப்பவாதிகள் தெளிவடைவார்கள்.

 

 

Read more...

Page 1 of 2