"விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" உங்களைப்போன்ற அனைத்துத் தரப்பும் வீதியில் இறங்கி கோரிய போது, நாங்கள் மட்டும் விதிவிலக்காக மாறுபட்ட கோசத்தை முன்வைத்து அதைக் கோரினோம். இதன் மூலம் தான் இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்று கூறினோம்;. இதுவல்லாத உங்கள் கோசம் மக்கள் மற்றும் புலியின் அழிவைத் தவிர, வேறு எதையும் பெற்றுத்தராது என்ற உண்மையினை நாம் மட்டும் சொன்னோம்.