எம் வரலாற்றுக்கு ஒரு இருண்ட பக்கம் உண்டு. எந்த இயக்கமும் அதைக் கண்டு கொள்வது கிடையாது, கண்டு கொள்ள விடுவதுமில்லை. அங்கு செய்யப்பட்ட தியாகமோ, எல்லாத் தியாகத்தையும் விட அதன் உணர்வில் உணர்ச்சியில் பல மடங்கு மேலானது.
எம் வரலாற்றுக்கு ஒரு இருண்ட பக்கம் உண்டு. எந்த இயக்கமும் அதைக் கண்டு கொள்வது கிடையாது, கண்டு கொள்ள விடுவதுமில்லை. அங்கு செய்யப்பட்ட தியாகமோ, எல்லாத் தியாகத்தையும் விட அதன் உணர்வில் உணர்ச்சியில் பல மடங்கு மேலானது.
திடீரென "மார்க்சியத்தின்" பெயரால் சிலர் கூறுகின்றனர். ஆயிரம் தவறுகள் இருந்தாலும் களத்தில் நிற்கும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து நிற்க வேண்டுமாம்! இதைக் கடந்த 30 வருடமாக சொல்லாதவர்கள், இன்று திடீரென சொல்லுகின்றனர். ஆச்சரியமும், அதிர்ச்சியும் தான். கடந்த 5 வருடத்துக்கு முன், ஏன் ஒரு வருடத்தின் முன் கூட கோரியது கிடையாது. அன்று நாங்கள் மட்டும் போராடிக் கொண்டிருந்த காலம்.
"மே 18" இயக்கம் புலிகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தைச் செய்யக் கோருகின்றனர். இதை புலிகள் செய்யாமல் இருத்தலும் மறுப்பதும் "அயோக்கியத்தனம்" என்கின்றனர். இதை நாம் இவர்களிடம் கோரும் போது, அதைக் கோருவதே தவறு என்கின்றனர். கடந்த 30 வருடமாக, புலிகளுக்கு வெளியில் நடந்த மனிதவிரோத அரசியலைப்பற்றி பேசுவதும் கோருவதும் அரசியல் ரீதியாக மறுதலிக்கப்படுகின்றது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி குழையடித்து, ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை மீளவும் எம்முன் முன்தள்ள முனைகின்றனர்.
தமிழ்மக்கள் மேல் அரச பாசிசமும், புலிப் பாசிசமும் பாய்ந்து குதறிய போது, "முன்னேறிய பிரிவு" என்று தம்மைத்தாம் கூறும் கூட்டம் என்னதான் செய்தது!? அந்த மக்களுக்கு குரல் கொடுத்ததா? வரலாற்றில் அது மக்களுக்காக மக்களுடன் நின்று போராடியதாக, எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாது. அப்படியிருக்க "முன்னேறிய பிரிவு" என்று தன்னை தான் அடையாளப்படுத்திக் கொண்டு, இன்று குழையடிக்கின்றது. இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக, மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்திருக்கவில்லை.
இனியொரு மற்றும் தேசம்நெற் மூலமே, மீண்டும் திடீர் மார்க்சிய அரசியலில் பிரவேசிக்கின்றார் நாவலன். தான் எப்படியாவது ஒரு அரசியல் பிரமுகராக வந்துவிட வேண்டும் என்ற அவாவுடன், அரசியலில் காய்நகர்த்தலைச் செய்கின்றார். முதலில் திடீர் மார்க்சிய அரசியலை சந்தைப்படுத்த, அ.மார்க்ஸ்சை நாடுகின்றார். அவரின் முன்னுரையுடன், நாவலனுக்கு ஏற்ற ஒரு "மார்க்சியத்தை" முன்வைத்து, மீண்டும் தன்னை அறிமுகம் செய்கின்றார்.