புலியைச் சொல்லியே வயிறு வளருது…

ஊரை  வறுகின உடம்புகளெல்லோ
உழைச்சுத் தின்ன உடம்பு வலிக்கும்
வேரோட அறுத்து வித்துத் திண்டவங்கள்
நாடு கடந்து புடுங்கப் போயினம்

நாட்டில உறவுகள் சாகக் கிடக்கிதுகள்
நாளைக்கென்னத்த சாப்பிடக்கிடக்குது
பான கழுவி கவிட்டுக்கிடக்குது
வெறுமுலை உமிந்து குழந்தை வீரிட்டழுகுது

செத்த சனத்தோட துயரோட நாங்க
கொழுப்பு முட்டி கழுத்துத் தசைபிதுங்க
புலத்து மதி உரை வித்தகர்கள்
சொத்துப் பெருக்க பெட்டியோட வாறாங்கள்

ஆரிட பிள்ளையள் அநுராதபுர காம்பில வெடிச்சது
அடிச்சு நெஞ்சில கத்தினது யாரு
வானில பறந்து வெடிச்சது யாரு
வயிறு எரிஞ்சு துடிச்சது யாரு

சேற்ரில தலைவரப் போட்டது யாரு
சிறையில பிள்ளையளை தள்ளினது யாரு
வன்னியில வம்சத்தை அழிச்சது யாரு
கூட்டையே அறியா புலத்தவன் கோழை

ஊரில பிள்ளையள் வெடித்துச் சிதற
காரில கொடியோட களியாட்டம் போட்டவங்கள்
போரில சனங்கள் துடித்துக் கதற
புகலிடமந்திகள் ஆய்வுக் கொப்புகள் தாவிச்சுது

முறிஞ்சு விழுந்தது எங்கட உடல்கள்
இன்னம் முதுகில பாய கீறிக் கிழிக்க
வருகுது தேர்தல் பிரபாகரன் சாவிலகொழுக்க
திரும்படா தமிழா மானமிருந்தா காறி உமிழடா………..

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.psminaiyam.com/?p=5032


Last Updated on Wednesday, 28 April 2010 19:41